Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 03 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ITC ரத்னதீப ஆடம்பர ஹோட்டல் தொகுதி இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை வளப்படுத்தும் வகையில் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ITC ஹோட்டல் குழுமத்தின் விருந்தோம்பலின் பிரதான சின்னமாக விளங்கும் ITC ரத்னதீப ஆடம்பர ஹோட்டல் தொகுதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா மற்றும் ITC Ltd இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் சஞ்ஜீவ் பூரி ஆகியோரின் பங்குபற்றலுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய மலரான நீல அல்லி மலரிடமிருந்து கிடைத்த அகத்தூண்டலக்கு அமைய அதன் கலையம்சங்களை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த ஆடம்பரம் மிக்க இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ITC ரத்னதீப அல்லது “இரத்தினங்களின் தீவு” விருத்தினர்களுக்காக 352 அறைகள், கூடத் தங்களை (Suite) மற்றும் தொடர்மாடி வீடுகள் (Apartments) ஆகியவற்றைக் கொண்டமைந்திருப்பதுடன், ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள பல்கணிகள் கடற்கரையின் அற்புதமான காட்சியை உங்கள் கண்முன்னால் கொண்டுவரும். இந்த ஆடம்பர ஹோட்டல் தொகுதியின் ஒரு பக்கம் இந்து சமுத்திரத்தின் கரையோரமும், மறுபக்கம் பேர வாவியும் அமைந்திருப்பதுடன், ITC ரத்னதீப ஹோட்டல் தொகுதி மற்றும் Sapphire Residences ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி ஆகிய இரு நட்சத்திர கோபுரங்களும் சிறந்த விருந்தோம்பலை வழங்குகின்றன. 100 மீற்றர் உயரத்தில் இந்த இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அஹச’ வான் பாலம் கட்டடக் கலையின் சிறப்பம்சத்தைப் பறைசாற்றுகின்றது.
ITC ரத்னதீப திறப்புவிழாவில் கருத்துத் தெரிவித்த ITC Limited நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான சஞ்ஜீவ் பூரி குறிப்பிடுகையில், “நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல்களகாகித அட்டைகள் மற்றும் பொதியிடல், வேளாண்மை வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வணிகங்களைக் கொண்ட இந்தியாவின் முன்னணிக் குழுமங்களில் ஒன்றே ITC ஆகும். நிலத்தில் வேறூன்றுதல் மற்றும் பிராந்தியத்தின் தனித்துவமான கட்டடக்கலை, வலுவான காலாசரம் மற்றும் மகத்துவத்தைப் பிரதிபலித்தல் என்ற ITC ஹோட்டல்களின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு இந்தக் கம்பனி கடந்த பல வருடங்களில் இந்தியா முழுவதும் தனித்துவ சின்னங்களாக விளங்கும் ஆதனங்களை உருவாக்கியுள்ளது.
நேர்த்தியான தங்குமிடத்திற்கு மேலும் வசதிகளை வழங்கும் வகையில் ITC ரத்னதீப, உள்நாட்டு, தேசிய மற்றும் உலகளாவிய உணவு குடிபானங்களுக்கு 9 தனித்துவமான இடங்களை ஏற்பாடு செய்துள்ளது. உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற உணவுகளுக்கான தெரிவுகளைக் கொண்ட Peshawri, உணவகம் வடமேற்கு பகுதியில் புகழ்பெற்ற உணவுகளை வழங்கும் விருதுபெற்ற உணவகமாகும். ஆசியாவில் சிறந்த உணவகமாக கருதப்படும் Avartana, உணவு வகைகளுக்குப் புதிய விளக்கத்தை வழங்குகின்றது. ரத்னதீபவின் Indian Ocean Pavilion பகுதியானது, சிறந்த புஃபே உணவுத் தெரிவுகளுடன் இந்து சமுத்திரத்தின் சிறந்த கண்கவர் காட்சியையும் வழங்குகின்றது. இங்கு காணப்படும் ஏனைய உணவு வகைகளின் வர்த்தக நாமங்களில் சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தான காலத்துக்கு ஏற்ற Yi Jing உணவு ரெசிப்பிகள், சிறந்த கடல் வளத்தின் சுவைகளைப் பறைசாற்றும் Islander, இலங்கையின் உயர்ந்த ஹை டீ கலாசாரத்தைக் கொண்டாடும் Silvertips, வெப்பமண்டலத்தைச் சார்ந்த புதிய ஜூஸ் மற்றும் ஆரோக்கியமான உணவுகளுக்கான Jala Anganaya என்பன அடங்குகின்றன.
இலங்கையின் மகத்தான சுற்றுலாத் திறன் மற்றும் அதன் தேவைகளை உணர்ந்து MICE மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை ITC ரத்னதீப இலக்காகக் கொண்டுள்ளது. 40000 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட ITC ரத்னதீபவின் விருந்து மண்டபம் மற்றும் அதற்கான உணவுகள் இந்த நோக்கத்துக்கு அர்த்தமளிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உணவு மற்றும் செயற்பாட்டு இடங்கள் பெருநிறுவனங்களின் ஒன்றுகூடல்கள், திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ITC ரத்னதீப ஹோட்டல் பெருத்தமானது என்பதைப் பறைசாற்றுகின்றன. இந்த வசதிகளில் பிரத்தியேகமான Sangam Ballroom 15,000 சதுர அடி விஸ்தீரணத்தில் தூண்கள் அற்ற விருந்து மண்டபம் மற்றும் Panorama Deck வெளியக திருமண இடம் என்பனவும் அடங்குகின்றன.
சிறந்த விருந்தோம்பல் அனுபவங்களுக்கு அப்பால், விவேகமான நுகர்வோருக்கு சிறந்த சொகுசு குடியிருப்புக்களையும் இத்திட்டம் வழங்குகின்றது. Sky Mansions (வான் மாளிகை) என்ற எண்ணக்கருவை தெற்காசியாவுக்கு அறிமுகப்படுத்தும் Sapphire Residences ஆனது, ITC ரத்னதீப ஹோட்டல் வளாகத்திற்கு அருகாமையில், கொழும்பில் மிகவும் கண்கவர் கடல் காட்சியை ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள ஆடம்பரமான மற்றும் விசாலமான அடுக்குமாடி குடியிருப்புக்களைக் கொண்ட தொகுதியாகும். இந்து சமுத்திரத்தை 180 பாகையில் பார்வையிடக் கூடிய வகையில் கொழும்பில் அமைந்துள்ள நிகரற்ற சொகுசு தொடர்மாடிக் குடியிருப்புக்கள் அதன் குடியிருப்பாளர்களுக்குத் தடையற்ற காட்சிகளை வழங்குகின்றது.
ITC ஹோட்டல்களின் வரிசையில் ITC ரத்னதீப 16வது ஆடம்பர ஹோட்டலாக அமைகின்றது. ஆடம்பரமான ஹோட்டல்களில் உலகின் முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றான Marriott International நீடித்து நிலைக்கக் கூடிய பொக்கிஷமான நினைவுகளைத் தூண்டும், தனித்துவமான, உண்மையான அனுபவங்களை வழங்கும் உலகப் புகழ்பெற்ற ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளைக் கொண்டுள்ளது. ஆடம்பர வர்த்தக நாமங்கள் இலங்கைக்குள் நுழைவதை ITC ரத்னதீப குறிக்கின்றது. இந்த ஆடம்பர ஹோட்டல்கள் உலகின் மிகப்பெரிய ஹோட்டல் லோயலிட்டி திட்டத்தைக் கொண்ட Marriott Bonvoy இன் ஒரு பகுதியாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago