Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 11 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பியோ ஸ்மித் மற்றும் இலங்கைக்கான பதில் ஜப்பானிய தூதுவர் கொட்டாரோ கட்சுகி ஆகியோர், மூன்று 'Health on Wheels' அலகுகளை, சுகாதாரத் துறை அமைச்சர் வைத்தியர். ரமேஷ் பத்திரனவிடம் கையளித்திருந்தனர். இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
ENSURE – ஆயுள் காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தை அணுகுவதை உறுதி செய்தல், பாலின வன்முறை தவிர்ப்புகளை ஏற்படுத்தல் மற்றும் பெண்கள், மகளிர் மற்றும் பின்தங்கிய குழுக்களுக்கு பதிலளிப்பு சேவைகள் எனும் திட்டத்துக்கு, ஜப்பானிய அரசாங்கம் நிதி வசதிகளை வழங்குகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான உதவியாக 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் திட்டத்தின் அங்கமாக இது அமைந்துள்ளது. பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உதவும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சூரிய ஒளியினால் வலுவூட்டப்பட்ட இந்த நடமாடும் சிகிச்சை நிலையங்களிள், அத்தியாவசிய மகப்பேறு மற்றும் இனப்பெருக்க சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றன. தற்போதைய நெருக்கடி நிலையில், இடர்களுக்கு பின்னரான சூழலில் பின்தங்கிய சமூகங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
Health on Wheels அலகுகளினூடாக சமூகங்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், அத்தியாவசிய சுகாதார பராமரிப்பு சேவைகளை எப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், நேரடியாக தேவையுடையவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும். ஒவ்வொரு நபருக்கும் தரமான சுகாதார பராமரிப்புக்கு அணுகலைக் கொண்டிருப்பது எனும் UNFPA இன் அர்ப்பணிப்பின் பிரகாரம் இந்த நடமாடும் சிகிச்சைப் பகுதிகள் அமைந்துள்ளன.
இலங்கையின் சமூகத்தாருக்கு வலுவூட்டும் வகையிலும், சுகாதார நிலைகளை மேம்படுத்தும் வகையிலும் எமது திரண்ட முயற்சிகளில் முக்கிய மைல் கல்லாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago