Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ. பவர் அன்ட் கம்பனி லிமிடெட், ஜேர்மன் நாட்டு பல்தேசிய மருத்துவ சாதனங்கள் நிறுவனத்தின் இலங்கைப் பிரிவான Fresenius Medical Care Lanka (Private) Limited உடன் பங்காண்மை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது.
இலங்கையின் மாபெரும் மற்றும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மருந்துப் பொருட்கள் வர்த்தக நாமங்களை ஒழுக்கமான ரீதியிலும், நம்பிக்கையை வென்ற வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறியப்படும் பவர், Fresenius Medical Care Lanka தயாரிப்புகளை விநியோகிக்கும் செயற்பாடுகளை, தனது பரந்த வலையமைப்பு மற்றும் நவீன டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் வியாபார மாதிரிகளினூடாக தொடர்ந்தும் முன்னெடுக்க பங்களிப்பை வழங்கும்.
இந்த மூலோபாய பங்காண்மையானது, பகிரப்பட்ட பெறுமதிகள் மற்றும் உறுதியளிக்கும் இணைவுகள் போன்றவற்றினூடாக வலுவூட்டப்பட்டு, நோயாளர்களுக்கு மேம்படுத்திய பெறுமதியை பெற்றுக் கொடுக்கும். இலங்கையில் சிறுநீரக அழற்சி நோய் பெருமளவில் காணப்படும் நிலையில், டயல்சிஸ் தீர்வுகளை அணுகுவது முக்கியமானதாகும். புகழ்பெற்ற முன்னோடிகளான பவர் மற்றும் Fresenius Medical Care Lanka ஆகியவற்றுக்கிடையிலான இந்த கைகோர்ப்பினூடாக, இந்த சுகாதார பராமரிப்பு தேவையை வினைத்திறனான வகையில் நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
Fresenius Medical Care என்பது, சிறுநீரக குறைபாட்டைக் கொண்ட நபர்களுக்கு அவசியமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் உலகின் முன்னணி சேவை வழங்குநராகும். உலகளாவிய ரீதியில் 4.1 மில்லியன் நோயாளர்கள் அடிக்கடி டயல்சிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். டயல்சிஸ் இயந்திரங்கள் மற்றும் டயலைசர்கள் போன்ற தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பதிலும் முன்னோடியாக அமைந்துள்ளது. அதன் பிரதான வியாபாரத்துடன், Renal Care Continuum ஊடாக, பாரதூரமான பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொடுப்பதை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்ட வண்ணமுள்ளது.
1945 ஆம் ஆண்டு பவர் சுகாதார பராமரிப்பு துறையில் காலடி பதித்திருந்த நிலையில், சத்திரசிகிச்சை, இனங்காணல் மற்றும் மருத்துவ போஷணை தயாரிப்புகள் போன்றவற்றுக்கு அதிகளவு நாடப்படும் பிரிவாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், தங்கியிருக்கும் திறன், புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் தரம் ஆகியவற்றில் ஒப்பற்ற பதிவுகளையும் கொண்டுள்ளது. பவருடன் Fresenius Medical Care Lanka வின் பங்காண்மை இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.
இலங்கையில் பவர் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு வர்த்தக நாமங்களில் சிலவாக Novartis, Roche, Sanofi, GSK, Sandoz, Nestlé Health Science, Merck, Merck Sharp and Dohme, J&J (Specialty Care), Takeda (Vaccines), Mega Life Sciences, Vitrolife, Viatris, Isispharma, Unichem, Apex, Alcon, Inova, Eisai, Rohto, Dexa Medica, மற்றும் Ajanta Pharma ஆகியன அமைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago