Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 ஒக்டோபர் 26 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
Ex-Pack Corrugated Cartons PLC, உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு பொதியிடல் தீர்வுகளை வழங்கி வரும் நிலையில், தனது பச்சைஇல்ல வாயு வெளியேற்றத்தை முழுமையாக குறைத்துள்ளமைக்காக காபன் நடுநிலை சான்றிதழைப் பெற்றுள்ளது.
Ex-Pack இன் நிலைபேறான செயற்பாடுகள் செயன்முறையின் போது பரிபூரணமான வகையில் இனங்காணப்பட்டிருந்ததுடன், நிறுவனத்தில் வலு தொடர்பான மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், நிறுவனத்தின் ஏனைய பிரிவுகளில் நீர் நுகர்வு, கழிவு முகாமைத்துவம், போக்குவரத்து தொடர்பான ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
GHG மதிப்பாய்வுகள் தொடர்பான உறுதிப்படுத்தல்களை, National Cleaner Production Centre (NCPC) ஐ முன்னெடுத்திருந்ததுடன், கட்டிட பொறியியல் சேவைகள் ஆலோசனை நிறுவனமான co-energi, MEP வடிவமைப்பு ஆலோசனை நிறுவனம் மற்றும் காபன் நடுநிலை ஆலோசனை நிறுவனம் ஆகியன, Ex-Pack உடன் இணைந்து, பச்சைஇல்ல வாயு வெளியேற்றங்களை கணிப்பீடு செய்திருந்ததுடன், காபன் நடுநிலையை எய்துவது தொடர்பில் வழிகாட்டல்களை வழங்கியிருந்தன. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் co-energi உடன் Ex-Pack கைகோர்த்திருந்ததுடன், அதனூடாக, காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் தொடர்பான பல சவால்களை எதிர்கொள்ளும் தனது நிலையை மேலும் வலிமைப்படுத்தியிருந்தது.
இந்த கௌரவிப்பு தொடர்பில் Ex-Pack இன் தவிசாளர் சத்தார் காசிம் கருத்துத் தெரிவிக்கையில், “பெருமளவு இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தும் இந்தத் துறையின் தன்மையை கவனத்தில் கொள்ளும் போது, இந்த சாதனையை எய்தியுள்ளமை உண்மையில் பாராட்டுதலுக்குரியதாகும். சூழல் தொடர்பில் நாம் பொறுப்பு வாய்ந்த வகையில் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இந்த சாதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், Ex-Pack இன் பிரதான நம்பிக்கையாகவும் இது அமைந்துள்ளது. எம்மைப் பொறுத்தமட்டில் இது ஒழுக்கமான செயற்பாடு என்பதற்கு அப்பால் கடமையாக அமைந்துள்ளது. நிலைபேறாண்மையை நோக்கிய எமது பயணத்தில், co-energi, NCPC மற்றும் துறைசார் பங்காளர்களுடன் இணைந்து நாம் செயலாற்றுவோம்.” என்றார்.
பல மாதங்களாக கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்களை குறைத்துக் கொள்வதனூடாக இந்த காபன் நடுநிலையை எய்த முடிந்தது.
co-energi இடமிருந்து கிடைத்திருந்த ஆதரவு சிறந்த சொத்தாகும். உயர் வினைத்திறன் வாய்ந்த AC கட்டமைப்புகள், கூரை மீதான சூரியப் படல் மின்பிறப்பாக்கல் கட்டமைப்புகள், வலு கணக்காய்வுகள், MEP வடிவமைப்புகள், retro fittings போன்றவற்றில் 12 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், 14 க்கு அதிகமான LEED (Leadership in Energy and Environmental Design) சான்றிதழ்களை இலங்கையிலும் பங்களாதேஷிலும் எய்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.
ஆசியாவிலும் இலங்கையிலும் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக Ex-Pack Corrugated Cartons PLC தரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் முற்பகுதியில், நிறுவனம் மிகவும் புத்தாக்கமான மற்றும் நிலைபேறான பொதியிடல் தீர்வுகளை வழங்குவதில் 25 வருட பூர்த்தியைக் கொண்டாடியது. நிறுவனம் ISO 9001-2015, ISO 14001-2015, FSC COC, WRAP சான்றிதழ்களைப் பெற்றுள்ளதுடன், NCE ஏற்றுமதி விருதுகள், CNCI விருதுகள், லங்கா ஸ்டார் விருதுகள், NBE விருதுகள், லங்கா CSR விருதுகள் மற்றும் கிறீன் விருதுகள் போன்றவற்றில் பல்வேறு கௌரவிப்புகளையும் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 hours ago
9 hours ago
21 Apr 2025