Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மார்ச் 18 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hemas Outreach Foundation, இலங்கையின் மாற்றுத்திறன் படைத்த சிறுவர்களுக்கான முதலாவது தேசிய நிலையமான AYATI உடன் இணைந்து, மார்ச் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக Down Syndrome தினத்தை முன்னிட்டு, ‘Eka Se Salakamu’ (அனைவரையும் சமமாக நடத்துவோம்) எனும் சமூக இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக, Down Syndrome இனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு வலுவூட்டல், அவர்களின் உரிமையை ஏற்றுக் கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் இன்றைய சமூகத்தில் அவர்களையும் உள்வாங்கக்கூடிய நிலையை ஊக்குவித்தல் போன்றன இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் Down Syndrome தொடர்பில் பல்வேறு தவறான எண்ணக்கருக்கள் மற்றும் புனைக்கதைகள் காணப்படுகின்றன. இதனால் சமூகத்தில் ஓரங்கட்டப்படல் மற்றும் பின்தள்ளப்படும் நிலைக்கு முகங்கொடுக்கின்றனர். ‘Eka Se Salakamu’ எனும் இயக்கத்தினூடாக “ஆரோக்கியமான வாழ்க்கை” என்பதற்கமைய உள்ளடக்கமான உலகைக் கட்டியெழுப்பும் கொள்கை தூண்டப்படுவதுடன், எந்தவொரு பிள்ளையையும் ஓரங்கட்டாத சமூகமொன்றை ஊக்குவிக்கின்றது. ஹேமாஸின் இந்தப் பிரதான விழுமியம் மற்றும் நோக்கம் என்பதனூடாக, இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு, இவர்கள் எதிர்நோக்கியுள்ள அவப்பெயரை இல்லாமல் செய்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.
இந்த இயக்கத்தினூடாக, Down Syndrome உள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் தமது சொந்த அனுபவங்களை சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான கட்டமைப்பைக் கொண்டிருப்பார்கள். இந்தச் சிறுவர்களின் திறன்களை ஊக்குவித்து வெளிக்கொணர்வதற்கும் இந்தக் கட்டமைப்பு உதவியாக அமைந்திருக்கும். பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் இந்தக் கட்டமைப்புடன் இணைந்து கொண்டு, சமூகத்தில் கண்ணியமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும் அவர்கள் எதிர்நோக்கியுள்ள அவப்பெயரை இல்லாமல் செய்வதற்கும், Down Syndrome உடன் தொடர்புடைய புனைக்கதைகளை இல்லாமல் செய்வதற்கும் அழைக்கப்பட்டுள்ளனர். Down Syndrome உள்ள சிறுவர்களுக்கு, உலகளாவிய ரீதியில் சிறந்த உள்ளம்சங்களைக் கொண்ட AYATI Speech & Language Therapeutic பிரிவினூடாக அவர்களின் திறன்கள் கட்டியெழுப்பப்படுவதுடன், சமூகத்தில் ஆக்கபூர்வமான நபர்களாக திகழ்வதற்கு அவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், MAS ஹோல்டிங்ஸ், ரொஷான் விஜேராம மையம், இலங்கை இராணுவம், ரொட்டரி மற்றும் இதர நன்கொடை வழங்குநர்கள் இணைந்து நாட்டில் இருந்த இந்தத் தேவையைக் பூர்த்திசெய்யும் நோக்குடன் AYATI நிலையம் நிறுவப்பட்டுள்ளது. AYATI நிறுவப்பட்ட போது மூன்று இலக்குகளைக் கொண்டிருந்தது – முதலாவது தேசிய சிறப்பு நிலையத்தை நிறுவுவது, மாற்றுத்திறன் தொடர்பான புனைக்கதைகளை இல்லாமல் செய்வது, மற்றும் இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் நிலையங்களை நிறுவுவது போன்றன அதில் அடங்கியுள்ளன.
இந்த அறிமுகம் தொடர்பில் Hemas Outreach Foundation / AYATI Trust Sri Lanka நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷிரோமி மாசகோரால கருத்துத் தெரிவிக்கையில், “‘Eka Se Salakamu’ எனும் இயக்கம் Down Syndrome உடன் தொடர்புடைய புனைக்கதைகளை இல்லாமல் செய்வதுடன் தொடர்புடைய எமது முயற்சியாக அமைந்துள்ளது. Down Syndrome கொண்ட சிறுவர்கள், சமூகத்தில் மிகவும் பின்தள்ளப்பட்ட குழுவினராக காணப்படுகின்றனர். “ஆரோக்கியமான வாழ்க்கை” என்பதை பின்தொடரும் நிறுவனம் எனும் வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தமது எண்ணங்களை வெளிக்கொணர்வதற்கு கட்டமைப்பொன்றை நிறுவி, சமூகத்திடமிருந்து அவசியமான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். “பியவர” திட்டத்தினூடாக ஒரு தசாப்த காலப்பகுதிக்கும் மேலாக, மாற்றுத்திறன் படைத்த சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பில் ஹேமாஸ் குழுமம் எப்போதும் பணியாற்றி வந்துள்ளது. 2006 ஆம் ஆண்டில், ஹம்பாந்தோட்டை பகுதியில் மாற்றுத்திறன் படைத்த சிறுவர்களுக்கான விசேட பாடசாலை ஒன்றும் நிறுவப்பட்டது. காலப்போக்கில் AYATI என அழைக்கப்பட்ட தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கான ஆரம்ப படிக்கட்டாக இது அமைந்திருந்தது. அறிவாற்றல் குன்றியவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதை நாம் ஊக்குவிக்கின்றோம், மேலும் அதன் மூலம் அவர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தை வழங்குவதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம்.” என்றார்.
சமூகத்தினுள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு அவசியமானதாக அமைந்துள்ளது. பிரதான பங்காளர்களுடன் பங்காண்மைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழியேற்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்திருக்கும். AYATI ஊடாக சர்வதேச நிபுணர்களை இலங்கைக்கு அழைத்து, இலங்கையின் நிபுணத்துவ அமைப்புகளுடன் கைகோர்த்து செயலாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ‘Eka Se Salakamu’ எனும் இயக்கத்தினூடாக, ஹேமாஸ் மற்றும் AYATI ஆகியன தாம் திரட்டிய தரவுகள் மற்றும் அறிவைக் கொண்டு செயலாற்ற திட்டமிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago