Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 22 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ESOFT Metro Campus, தனது இரு புகழ்பெற்ற முனைவர் கற்கைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு அண்மையில் One Galle Face Business Tower இல் அமைந்துள்ள அதன் Premier Campus One கிளையில் நடைபெற்றது.
இலங்கையில் வழங்கப்படும் முதலாவதும் ஒரே பிரத்தானிய PhD கற்கையாக இந்த அறிமுகம் அமைந்திருப்பதுடன், கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தினால் இந்தக் கற்கை வழங்கப்படுகின்றது. Doctor of Business Administration (DBA) கற்கையை Manipal GlobalNXT பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க ESOFT முன்வந்துள்ளது.
ESOFT இன் தவிசாளர்/குழும முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் ஸ்தாபகர், கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் மற்றும் பீடாதிபதி மற்றும் கல்விப் பங்காண்மைகளுக்கு பொறுப்பதிகாரியுமான பேராசிரியர் முகேஷ் லிம்பாச்சியா மற்றும் Manipal GlobalNxt பல்கலைக்கழகத்தின் கூட்டாண்மை ஈடுபாடுகள் மற்றும் பங்காண்மைகளுக்கான தலைமை அதிகாரி சஞ்ஜீவ் குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன், இரு கற்கைகளுக்குமான பிரதிநிதிகள் மற்றும் மேற்பார்வையாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையில் உயர் தரம் வாய்ந்த முனைவர் கற்கைகளை அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ESOFT இன் அர்ப்பணிப்பு இந்த அறிமுகத்தினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கற்கைகளினூடாக, நிபுணர்களுக்கு கற்கைகளை சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட PhD மற்றும் DBA தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், தாம் தெரிவு செய்த பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றுவதற்கு அவசியமான அறிவையும் நிபுணத்துவத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago