Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
Dialog Innovation Challenge க்கு நாடளாவிய ரீதியில் இருந்து வந்த 1200இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களால் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்த தேசிய முன்னெடுப்பின் மீதுள்ள வலுவான ஈடுப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இம்முன்னெடுப்பு டிஜிட்டல் மாற்றத்திற்கு வளமூட்டி நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இலங்கையர்களுக்கும் விடுக்கப்பட்ட இந்த அழைப்பின் மூலம் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் / Startupகள், மற்றும் பொது மக்கள் என வெவ்வேறு வயதுப்பிரிவில் வெவ்வேறு விதமான போட்டியாளர்களுடன் 1279 விண்ணப்பங்களை இந்த சவால் பெற்றுக்கொண்டது. இந்த சவாலானது தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் மக்களின் வாழ்வை மேம்படுத்த ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்தது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, machine learning, IoT, blockchain போன்றவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்ட தீர்வுகள் எந்த நிலையில் இருந்தாலும் அவை வரவேற்கப்பட்டன. பதிவுகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளை பெப்ரவரி ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்பாளர்களுக்கு ரூ. 5 மில்லியன் பெறுமதியான பரிசுக்குவியலில் இருந்து பரிசுகளை வெல்லும் வாய்ப்புண்டு. அதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு தமது திட்டங்களை செயற்படுத்த DIF (டயலொக் புத்தாக்குனர் நிதியம்) முதலீட்டு நிதியிலிருந்து 500 மில்லியன் ரூபாய் நிதியை கோர முடிவதுடன் டயலொக்கின் பரந்துபட்ட ஆக்கப்பூர்வ சூழலமைப்பிலிருந்து விலைமதிப்பற்ற பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை பெறும் வாய்ப்பும் கிட்டும். இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனம் (IESL), National Innovation Agency (NIA), Sri Lanka Inventors Commission (SLIC), இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலையம் (SLIM), Ceylon Chamber of Commerce (CCC), இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கம் (DMASL), டயலொக் புத்தாக்குனர் நிதியம் (DIF), Lanka Angel Network, Innovation Foundry, மற்றும் Ideamart உட்பட எமது பங்காளர் அமைப்புகளிலிருந்து தொழில்நுட்ப ஜாம்பவான்களும் துறையின் பெருந்தலைமைகளும் பங்கேற்பாளர்களுக்கு குருவாக தமது வழிகட்டல்களை வழங்குவர். இது பங்கேற்பாளர்களை பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைக்கும்.
தற்சமயம் எமது புகழ்பெற்ற நடுவர் குழாத்தினர் ஒவ்வொரு ஒப்படையையும் வெகு உன்னிப்பாக மதிப்பாய்வு செய்து மிகக்கடுமையான புள்ளித்திட்டம் மூலம் அவற்றை மதிப்பிட்ட வண்ணம் உள்ளனர். இதன் வழியாக எந்தவொரு அற்புதமான யோசனையும் கவனிக்கப்படாமல் போவதை தடுக்க முடியும். வெட்டுப்புள்ளியை விஞ்சும் ஒப்படைகளுக்கு தமது ஆக்கபூர்வமான தீர்வுகளை பற்றி ஒரு 5 நிமிட காணொளியில் (video) விளக்கமாக எடுத்துக்கூற அழைப்பு விடுக்கப்படும். நடுவர்கள் இந்த காட்சிப்படுத்தலை கூர்ந்து ஆராய்ந்து முதல் 25 பங்கேற்பாளர்களை அடுத்த கட்டத்துக்கு தெரிவு செய்வர். தெரிவு செய்யபட்ட இந்த குழாத்துக்கு அவர்களது தீர்வுகளை தொழில்நுட்பம் மற்றும் வணிக ரீதியில் நன்கு பட்டை தீட்டி அரையிறுதியில் வெற்றி பெறுவதற்கு தேவையானளவு வழிகாட்டல் திட்டம் மூலம் பயிற்சி வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago