Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 மார்ச் 07 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முகாமைத்துவ பட்டயக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தின் (CIMA) “Corporate Partnership Programme” நிகழ்ச்சித்திட்டத்திற்காக மீண்டும் DFCC வங்கி கைகோர்த்துள்ளது. தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக இந்த கூட்டாண்மையை DFCC வங்கி அறிவித்துள்ளது.
CIMA Corporate Partnership Programme நிகழ்ச்சித்திட்டம் என்பது CIMA மற்றும் வணிகத்துறை தலைவர்களுக்கு இடையேயான கூட்டாண்மைகளின் மதிப்புமிக்க வணிக வலையமைப்பாகும். மேன்மையை நிலைநாட்டும் ஆர்வமும், உலகளவில் போட்டித்திறனைத் தோற்றுவிக்கும் வகையில் மாற்றத்திற்கு வித்திடுகின்ற தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சிந்தனையாளர்களை உருவாக்குவதில் பங்களிக்கும் ஆர்வம் கொண்ட வணிகத் தலைவர்களின் வலையமைப்பாக இது காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், DFCC வங்கியானது, CIMA கற்கைத் துறை திறமையாளர்களுடன் ஈடுபடவும், ஆட்சேர்ப்பு செய்யவும், எதிர்காலத் தலைவர்கள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணும் வலையமைப்பை ஏற்படுத்தி, கணக்கியல் தொழிலில் புத்தாக்கத்தை ஆதரிப்பதோடு, எதிர்காலத்திற்கான அறிவு மற்றும் நுண்ணறிவுகளை காத்திரமான உரையாடல் மூலம் தமக்கிடையில் பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்த கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து DFCC வங்கியின் மனிதவளத்துறை சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான சொனாலி ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்தக் கூட்டாண்மையானது, மேன்மையுடன் சிறந்து விளங்குவதற்கான ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் உலக அளவில் போட்டித்திறன் கொண்ட உலகத் தரம் வாய்ந்த மாற்றத்திற்கு வித்திடுகின்ற தலைமைத்துவத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பது ஆகிய வங்கியின் நோக்கங்களுடன் முழுமையாக இணங்குகிறது. இவ்வாறாக, CIMA Sri Lanka உடன் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக இந்தக் கூட்டாண்மைக்குள் காலடியெடுத்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உயர்தர திறமைசாலிகளை அடையாளம் கண்டு உள்வாங்குதல், வலுவான தொடர்பு வலையமைப்பு வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கற்றல் மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் இது எங்களுக்கும், வணிகத் துறையில் உள்ள மற்றவர்களுக்கும் மதிப்பை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, CIMA மற்றும் ஏனைய வர்த்தகத்துறை கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதால், உள்நாட்டிலும் உலக அளவிலும் ஒரு வெற்றிகரமான மற்றும் நிலையான பொருளாதார கட்டமைப்பினை முன்கூட்டியே தோற்றுவிப்பதில் நாங்கள் ஒத்துழைத்து பணியாற்றி வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
CIMA Corporate Partner என்ற வகையில், DFCC வங்கி CIMA-தகைமை பெற்ற பணியாளர்களுக்கு அவர்களின் வருடாந்த உறுப்புரிமைக் கட்டணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பிச் செலுத்தும் வசதி போன்ற சில விசேட சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குகிறது. திறன்கள், தகுதி மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு உறுதிபூண்டுள்ள ஒரு தொழில்தருநர் என்ற வகையில், DFCC வங்கி, CIMA கற்கை நெறியை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் ஏனைய உயர் கற்கைகள் மற்றும் தொழில்முறை கற்கைப் பாடநெறிகள், பட்டப்படிப்பு கற்கைநெறிகள், வணிக நிர்வாக முதுமாணி (MBA) கற்கைகள் உட்பட, முழு அல்லது பகுதியளவு கடன் உதவியைப் பெறுவதற்கான தெரிவை வழங்குகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .