Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மே 20 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரழிவு ஆபத்துக் குறைப்பை அடிப்படையாகக் கொண்ட எக்கோ சிஸ்டம் (ECO DRR) முயற்சியில் இளைஞர்களின் ஈடுபாட்டைக் காண்பிப்பதற்கும், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் ChildFund Sri Lanka அமைப்பு அண்மையில் 'சுற்றுச்சூழலுக்கான இளைய தலைவர்கள் 2021' என்ற தலைப்பில் ஆய்வரங்கொன்றை நடத்தியது. இந்த முயற்சியானது ChildFund Korea இன் நிதியுதவியுடன் ChildFund Sri Lanka இனால் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்று வருட திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தத் திட்டம் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) தொழில்நுட்ப உதவியுடன் அமுல்படுத்தப்பட்டது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள், கூட்டணி உறுப்பினர்கள், தனியார் துறை அமைப்புக்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள், நடைமுறைப்படுத்தும் கூட்டாண்மை முகவர்கள் எனப் பலரின் பங்களிப்பும் வரவேற்கப்பட்டது.
இந்த ஆய்வரங்கின் நோக்கங்களாவன: பேரழிவு ஆபத்துக் குறைப்பை அடிப்படையாகக் கொண்ட எக்கோ சிஸ்டம் (ECO DRR) நடைமுறையை ஊக்கப்படுத்த ChildFund Sri Lanka எடுத்த முயற்சிகளை காட்சிப்படுத்துவது, தங்கள் முக்கிய சாதனைகளை பரந்த உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்களின் முயற்சிகளுக்கு ஒரு வலுவான தளத்தை உருவாக்குவது, தேசிய அளவிலான திட்டமிடல்களில் ECO DRR இன் நோக்கங்கள் குறித்து பங்குதாரர்கள் மத்தியில் பிரசாரம் செய்தல் என்பனவாகும்.
வெள்ளம், வரட்சி, நிலச்சரிவு மற்றும் மோசமான கடல் உள்வாங்கல் போன்றவற்றால் இலங்கை எளிதில் பாதிக்கப்படுகிறது. இந்த அனர்த்தங்கள் நாட்டில் மிகவும் மோசமான நிலையில் உள்ள அதிகமான சமூகங்களின் நல்வாழ்வு மற்றும் பிழைப்பு என்பவற்றுக்கு தொடர்ந்தும் சவாலாக உள்ளன.
ஆரம்பத்தில், தாம் சார்ந்த சமூகத்தில் காணப்படும் அனர்த்தம் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் காண இளைஞர்களின் திறன் மற்றும் அறிவை வளர்ப்பது, சமூகம் சார்ந்த திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பவற்றில் இத்திட்டம் முதலீடு செய்திருந்தது.
இத்திட்டமானது மோசமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட மட்டக்களப்பு, நுவரெலியா, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago