2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

Baurs தலைமைத்துவ அணிக்கு Global CEO Forum 2024 நிகழ்வில் கௌரவம்

Freelancer   / 2025 ஜனவரி 03 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

Baurs என அறியப்படும் A. Baur & Co. (Pvt.) Ltd., 127 வருட காலமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கி வருகின்றமைக்காக கீர்த்திநாமத்தைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரொல்ஃப் பிளாசர் மற்றும் சிறந்த முகாமைத்துவ அணியினருக்கு, அண்மையில் கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் நடைபெற்ற Global CEO தலைமைத்துவ சிறப்பு விருதுகளில் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாசருடன், Baurs இன் சிரேஷ்ட முகாமைத்துவ அணியினரும் திரண்ட தலைமைத்துவத்துக்கான கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டனர். கடந்த நான்கு வருட காலப்பகுதியில் கொவிட்-19 தொற்றுப் பரவல், சமூக-பொருளாதார நெருக்கடி மற்றும் பரந்த பொருளாதார பிரச்சனைகள் போன்ற நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த சூழலில் நிறுவனத்தை வழிநடத்தியதில் இவர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர். Baurs இன் நிலைபேறான வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கின்றமையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

Baurs இன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் மீண்டெழும் திறன், இணைந்த செயற்பாடு மற்றும் தூர நோக்குடைய வழிமுறை போன்றவற்றை இந்த விருது உறுதி செய்திருந்தது. விருது வென்ற அணியினரில் விவசாய பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்/பணிப்பாளர் ஜனக குணசேகர, சுகாதார பராமரிப்பு பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்/பணிப்பாளர் நிஷாந்த வீரசிங்க, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் அனோஜா பஸ்நாயக்க, நிதியியல் பணிப்பாளர் பவித்ரா சமரசிங்க, மனித வளங்கள், நிர்வாகம், கொள்முதல் மற்றும் நிலைபேறாண்மை சிரேஷ்ட பொது முகாமையாளர் கென் விஜயகுமார், விவசாய சிரேஷ்ட பொது முகாமையாளர் நிலங்க சமரசிங்க, ஆய்வு மற்றும் தயாரிப்பு விருத்தி சிரேஷ்ட பொது முகாமையாளர் தக்ஷின ஹெட்டியாரச்சி, சுற்றுலா மற்றும் கல்வி சிரேஷ்ட பொது முகாமையாளர் டானியெலா முனசிங்க, உதவிச் சேவைகள் சுகாதார பராமரிப்பு பொது முகாமையாளர் அனுர வீரசிங்க மற்றும் தொழிற்துறை மூலப்பொருட்கள் சிரேஷ்ட முகாமையாளர் தேவபிரிய அர்த்தநாயக்க ஆகியோர் அடங்கியுள்ளனர்.

Baurs முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரொல்ஃப் பிளாசர் குறிப்பிடுகையில், “Baurs ஐச் சேர்ந்த அணியினரின் திரண்ட செயற்பாடு மற்றும் அர்ப்பணிப்பை கொண்டாடும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. இலங்கையில் நாம் சிறந்தவர்களாக திகழ மாத்திரம் நாம் முயற்சி செய்யாது, இலங்கைக்கு சிறப்பானவர்களாக திகழ முயற்சி செய்கின்றோம்.” என்றார்.

ரொல்ஃப் மற்றும் அணியினரின் தூர நோக்குடைய தலைமைத்துவத்தின் கீழ், Baurs பல முக்கியத்துவம் வாய்ந்த மைல்கற்களை எய்தியுள்ளது. கடந்த நான்கு வருடங்களில் அதன் சுகாதார பராமரிப்பு வியாபாரம் இரட்டிப்படைந்துள்ளதுடன், உலகின் சிறந்த 10 மருந்துப்பொருட்கள் முன்னோடிகளுடனான பங்காண்மைகளையும் கொண்டுள்ளது. இலங்கையின் நிலைபேறான சேதன விவசாயத்தில் முக்கியமான பங்காற்றியிருந்ததை தொடர்ந்து, பரந்தளவு பங்காளர்களுடன் இணைந்து சிறப்புக்கான நிலையத்தை Baurs நிறுவியுள்ளதுடன், சூழல் தாக்கத்தை தணிப்பதற்காக சுப்பர் யூரியாவையும் அறிமுகம் செய்திருந்தது. Swiss Hotel Management Academy (SHMA) மற்றும் Skills for Sustainable Growth (SSG) செயற்திட்டங்கள் போன்றன இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றுகின்றமை ஆகிய இதர முக்கிய செயற்பாடுகளாக அமைந்துள்ளன.

முன்னர், ஆண்டின் அதிகளவு பின்பற்றப்படும் பிரதம நிறைவேற்று அதிகாரி 2022 விருதை ரொல்ஃப் பிளாசர் வெற்றியீட்டியிருந்ததுடன், ஆண்டின் சிறந்த மனித வளங்கள் வியாபார தலைவர் விருதை கென் விஜயகுமார் பெற்றிருந்தார். இலங்கை கணினி சங்கத்தின் அறிமுக தேசிய பிரதம தகவல் அதிகாரி வரிசை 2023 இல் Baurs தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் அனோஜா பஸ்நாயக்க உள்ளடக்கப்பட்டிருந்தார்.

சுவிஸ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் விழுமியங்களை பின்பற்றி இயங்கும் Baurs, தொடர்ந்தும் மீட்சித்திறனுடனும், தூர நோக்குடைய தலைமைத்துவ அணியை கொண்டு புத்தாக்கங்களை வெளிப்படுத்தி, பல்வேறு வியாபாரங்களில் முன்னிலையில் திகழ்கின்றது. திரண்ட தலைமைத்துவத்தின் வலிமையுடன் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த விருது அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X