2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

BNI மாநாடு 2024 இல் வியாபாரங்களுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது

Freelancer   / 2024 ஜூலை 22 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தொழில்முயற்சியாண்மை, கைகோர்ப்பு மற்றும் வியாபார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த BNI இலங்கை தேசிய மாநாடு 2024க்கு அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிகழ்வு 2024 ஜுன் 06 ஆம் திகதி நடைபெற்றது. பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜ்ஜில் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான அமர்வுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், SLT-MOBITEL இன் முகாமைத்துவ அணி தனது ஈடுபாட்டை கொண்டிருந்தது. பின்னர் மாலையில், இந்நிகழ்வு ஷங்கிரி-லா ஹோட்டலில் தொடர்ந்திருந்ததுடன், வியாபார கட்டமைப்பினுள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

டிஜிட்டல் மாற்றியமைப்பை எதிர்பார்க்கும் சகல அளவுகளிலுமான வியாபாரங்களுக்கு SLT-MOBITEL அனுசரணை வழங்கியிருந்தது. SLT-MOBITEL இன் நவீன தொழில்நுட்ப சேவை வழங்கல்களுடன், நிபுணத்துவ ஆலோசனை மற்றும் ஆதரவுடன், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், போட்டிகரமாக திகழ்வதற்கும் வசதியளிக்கின்றது. நிகழ்வில் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்திய SLT-MOBITEL, உள்நாட்டு வியாபார சமூகத்தின் வளர்ச்சி மற்றும் விருத்திக்கு தனது அதிவேக இணைய இணைப்புகள், cloud சேவைகள் மற்றும் சைபர்பாதுகாப்பு தீர்வுகள் போன்றவற்றினூடாக ஒன்றிணைக்கப்பட்ட தொடர்பாடல்கள், டேட்டா நிலைய சேவைகள் மற்றும் நிறுவனசார் நடமாடல் தீர்வுகள் போன்றவற்றுக்கு பங்களிப்பு வழங்கியிருந்தது.

மேலும், வருடாந்த BNI இலங்கை மாநாடு, வெள்ளி அனுசரணையாளராக இணைந்திருந்த SLT-MOBITEL இன் பங்கேற்புடன் பெருமளவு வலிமையைப் பெற்றுக் கொண்டது.  வியாபாரங்களின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை நிறுவனத்தின் பிரசன்னம் வெளிப்படுத்தியிருந்தது. நிகழ்வின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு இந்த அனுசரணை பங்களிப்பு வழங்கியிருந்தமை மட்டுமன்றி, தொழில்முயற்சியாண்மை மற்றும் நிலைபேறான வியாபார செயற்பாடுகள் போன்றவற்றுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தது.

BNI தேசிய மாநாட்டினூடாக, SLT-MOBITEL க்கு பரந்தளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வியாபார நிபுணர்களுடன் தொடர்பாடல்களை பேணுவதற்கு வாய்ப்பை வழங்கியிருந்தது. ஒரே சிந்தனைகளைக் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து கொண்டதனூடாக SLT-MOBITEL க்கு நேர்த்தியான மாற்றத்தை முன்னெடுக்கவும், தேசத்தின் நிலைபேறான எதிர்காலத்துக்கு அதிகளவு பங்களிப்பு வழங்கவும் உதவியாக அமைந்திருந்தது.

ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள், மூலோபாயங்களை கட்டியெழுப்பல் மற்றும் காணப்படும் வாய்ப்புகள் மத்தியில் சிறப்பாக செயலாற்றல் போன்றவற்றுக்கு திரண்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வருடாந்த BNI இலங்கை மாநாடு அமைந்துள்ளது. நிலைபேறாண்மையை நோக்கிய நகர்வில், இந்த ஆண்டுக்கான மாநாடு என்பது, முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்ட காபன் நடுநிலை BNI மாநாடாக அமைந்திருந்தது. சூழல் பொறுப்புக்கான BNI இன் அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை உறுதி செய்திருந்ததுடன், உலகளாவிய ரீதியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகளுக்கு முன்மாதிரியானதாகவும் அமைந்திருந்தது.

சர்வதேச வியாபார வலையமைப்பு (BNI) என்பது, “உலகின் மாபெரும் பரிந்துரைக்கும் நிறுவனம்” என்பதாக அமைந்திருப்பதுடன், உலகளாவிய ரீதியில் 77 நாடுகளில் 325,000 அங்கத்தவர்களை கொண்டுள்ளது.  பரஸ்பர ஆதரவு மற்றும் கைகோர்ப்பு ஆகியவற்றினூடாக வியாபாரங்களுக்கு வளர்ச்சியை பதிவு செய்வதற்கு அர்ப்பணித்த முன்னணி வியாபார வலையமைப்பு நிறுவனத்தின் அங்கமாக BNI இலங்கை அமைந்துள்ளது. தொடர்பாடல்களை கட்டியெழுப்பல் மற்றும் வியாபார வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கு வழமையான நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளை இந்நிறுவனம் முன்னெடுத்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X