2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

2024/25 காலப்பகுதிக்கான தொலைபேசி கோவையில் கொலோனியல் என்ஜினியரிங்

Freelancer   / 2024 ஜூன் 26 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் ஸ்டீல் மற்றும் ஹார்ட்வெயார் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள கொலோனியல் என்ஜினியரிங் (பிரைவட்) லிமிடெட், SLT-MOBITEL குழுமத்தினால் வெளியிடப்படவுள்ள 2024/25 தேசிய வியாபார தொலைபேசிக் கோவையான ரேன்போ பேஜஸ் இல் பிரதான விளம்பரதாரராக இணைந்துள்ளது. தேசிய வியாபார தொலைபேசிக் கோவையின் முதல் 20 சிறந்த வாடிக்கையாளர்களில் ஒன்றாகத் திகழும் கொலோனியல் என்ஜினியரிங், இந்த பரிபூரண சந்தைப்படுத்தல் கட்டமைப்பில் காணப்படும் பெறுமதியை நன்கு உணர்ந்துள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தேசிய வியாபார தொலைபேசிக் கோவை 2024/25 இல், இலங்கையின் முன்னணி வியாபார தொழிற்துறைகளின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டு, பிந்திய தரவுகளைக் கொண்ட கோவையாக அமைந்திருக்கும். ஒப்பந்தத்தின் பிரகாரம், 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கொலோனியல் என்ஜினியரிங், குழாய்கள், ஸ்டீல், பொறியியல், நிர்மாணம் மற்றும் நீர் குழாய் பொருத்துகைகள் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் மொத்த விற்பனையில் ஈடுபடுவதுடன், தமது தேவைகளுக்கு பொருத்தமான வகையில் ஒன்லைன் மற்றும் ஓஃவ்லைன் விளம்பரப்படுத்தல் தெரிவுகளை பெற்றுக் கொள்ளும். அவற்றில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மூலோபாயங்கள், இணையத் தீர்வுகள், e-வணிகம், சொப்பிங் கார்ட் மற்றும் பொருளடக்க தயாரிப்பு சேவைகள் போன்றன அடங்கியிருக்கும்.

SLT-MOBITEL குழுமத்தின் துணை நிறுவனமாக திகழும் Sri Lanka Telecom (Services) Limited (SLT-SERVICES) இனால் நிர்வகிக்கப்படும் தேசிய வியாபார தொலைபேசி கோவையான ரேன்போ பேஜஸ், பல்வேறு தெரிவுகளில் விளம்பரப்படுத்தலுக்கான வாய்ப்பை வழங்குகின்றது. இதில் ஒன்லைன், eBook, அழைப்பு நிலையம் மற்றும் அச்சிடப்பட்ட புத்தகம் ஆகியன அடங்கியுள்ளன. அதன் பரிபூரண தெரிவுக்காக இந்தக் கோவை புகழ்பெற்றுள்ளதுடன், 10,000க்கும் அதிகமான தினசரி ஒன்லைன் தேடல்கள் மற்றும் 6000 க்கும் அதிகமான வியாபார பதிவிடல்கள் ஆகியவற்றை பல்வேறு துறைகளில் கொண்டுள்ளது. இதில் அரச நிறுவனங்கள் மற்றும் சமய வழிபாட்டுத் தலங்கள் போன்றனவும் அடங்கியுள்ளன.

பாவனையாளர்களுக்கு உள்நாட்டு தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், உறுதி செய்யப்பட்ட தொடர்பாடல் தகவல்களை கொண்டுள்ளமை ரேன்போ பேஜஸ் கோவையின் முக்கியமான உள்ளம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும், search engine optimization (SEO) ஊடாக பதிவு செய்யப்பட்ட வியாபாரங்களுக்கு அனுகூலம் கிடைப்பதுடன், தமது ஒன்லைன் பிரசன்னம் மற்றும் சென்றடைவை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும், அரசாங்க விலைமனுக்கோரல்களுக்கான தகைமையை வழங்குவதுடன், வளர்ச்சி மற்றும் விருத்திக்கான புதிய வாய்ப்புகளையும் வழங்குகின்றது.

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் இணைய வடிவமைப்பு தீர்வுகள் போன்றவற்றில் SLT-SERVICES கவனம் செலுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதிகளை பெற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X