2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

2020/21 ஆண்டுக்காக பிரதான மாணவர் சேர்ப்பை முன்னெடுக்கும் SLIIT

Gavitha   / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரமான உயர் கல்விக் கற்கைகளை வழங்கும் தேசத்தின் முன்னணி அரச சாரா உயர் கல்வியகமான SLIIT, 2020 ஆண்டுக்கான தனது பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

மாணவர்களுக்கு கணனியியல், வியாபாரம், பொறியியல், கல்வியியல், உளவியல், தாதியியல், சட்டம், கட்டடக்கலை, நில அளவையியல் மற்றும் விருந்தோம்ல் மற்றும் உணவு தயாரிப்பு, மனிதநேயம் மற்றும் விஞ்ஞானங்கள் போன்ற கற்கைகளில் பரந்தளவு உயர் கல்வி வாய்ப்புகளை SLIIT வழங்குகின்றது. SLIIT இனால் வழங்கப்படும் சகல பட்டப்படிப்புகளும், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புதிய மாணவர் சேர்ப்பு தொடர்பில் கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசஹஸ் மல்லவாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் நன்மதிப்பைப் பெற்ற கல்வியகமாக SLIIT திகழ்கின்றது. மாணவர்களுக்கு சிறந்த கல்வி அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதுடன், நவீன வசதிகளுடன், கல்வி நிலை முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை வழங்கி, எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது. எமது பட்டதாரி மாணவர்களுக்கு தமது கனவுகளை எய்த நாம் முறையான வழிகாட்டல்களை வழங்குகின்றோம்” என்றார்.

புகழ்பெற்ற சரவதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியகங்களுடன் பங்காண்மைகளை SLIIT ஏற்படுத்தியுள்ளது. Curtin University, Australia, Liverpool John Moores University, United Kingdom; and the William Angliss Institute, Australia போன்றவற்றினால் வழங்கப்படும் கற்கைகளை மாணவர்கள் தொடர்ந்து, தமது உயர் கல்வியை பூர்த்தி செய்வதற்கு அந்நாடுகளுக்கு மாற்றம் பெற்றுச் செல்வது தொடர்பிலும் கவனம் செலுத்தலாம்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் நவீன வசதிகளில் பெருமளவு கற்பித்தல் இடவசதி, ஆய்வுகூடங்கள் மற்றும் அலுவலகப் பகுதிகள், கற்றல் பகுதிகள், மாணவர்களுக்கான பொது இடங்கள், மாணவர் சேவைகள் உதவிப் பகுதி, மாணவர் மன்றம், ஆங்கில மொழி உதவி பகுதி போன்றன அடங்குகின்றன.

புதிய வழமைக்கமைவாக, SLIIT இனால் நவம்பர் 15 ஆம் திகதியன்று Virtual Open Day 2020 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனூடாக மாணவர்களுக்கு கல்வியகத்தின் பெருமளவு கற்கைகளை பின்தொடர்வதற்கான வசதிகள் பற்றியும், காணப்படும் கல்விசார் வசதிகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .