2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

ஹேமாஸ் மற்றும் SLIIT இணைந்து இலங்கையில் இணை ஸ்தாபனத்தை நிறுவல்

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சுகாதார பராமரிப்பு கல்வியை சர்வதேச நியமங்களுக்கு கொண்டு செல்லும் நோக்குடன் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்துடன் (SLIIT) இணைந்த கல்வி ஸ்தாபனத்தை நிறுவ ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி முன்வந்துள்ளது. புத்தாக்கமான தாதியியல் மற்றும் இணைந்த சுகாதார பராமரிப்பு கல்வியை SLIIT-HEMAS Allied Health Sciences Institute (SHAHSI)எனும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பினூடாக பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் புதிதாக ஆட்சேர்ப்புக்கு முன்வந்துள்ள இந்த நிறுவனத்தில் 300க்கும் அதிகமான மாணவர்கள் இணைய முன்வந்துள்ளதுடன், மேலும் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

தனியார் சுகாதார பராமரிப்பு வழங்கலில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் கொண்டுள்ள ஆழமான அனுபவத்துடன், SLIIT இன் புகழ்பெற்ற தரமான கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கான கீர்த்தி நாமத்துடன் அமைந்த இந்த பங்காண்மையினூடாக, சர்வதேச ரீதியில் தொழில்புரியக்கூடிய இணைந்த சுகாதார பராமரிப்பு நிபுணர்களுக்கான அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு பொருத்தமான பரிபூரண கற்கைகளை வழங்குகின்றது.  நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் காணப்படும் திறன் படைத்த சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முக்கிய படியாக இந்த கைகோர்ப்பு அமைந்திருக்கும்.

தாதியர் மற்றும் சுகாதார பராமரிப்பு நிபுணர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பங்காண்மையினூடாக துரித கல்வி வழங்கப்படவுள்ளதுடன், முன்னணி விரிவுரையாளர்கள் மற்றும் நிபுணர்களை இணைத்து மாணவர்களுக்கு கல்வியறிவூட்டவும் பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தினூடாக வழமையான கல்விசார் கைகோர்ப்புகளுக்கு அப்பால் சென்று, தனது பரிபூரண தொழிற்துறை வெளிப்படுத்தல் மற்றும் பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். தற்போதைய கற்கைகள், அவுஸ்திரேலியாவின் Deakin University மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores University ஆகியவற்றுடன் இணைந்ததாக அமைந்திருக்கும். மேலும், தாதியியல் கற்கைகள் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (TVEC) NVQ நிலை 6 சான்றிதழை வழங்குவதாக அமைந்திருக்கும்.

இலங்கையின் சுகாதார பராமரிப்புத் துறையில் பெருமளவு புத்திஜீவிகளின் வெளியேற்றம் காரணமாக, அடுத்த தலைமுறை சுகாதார பராமரிப்பு நிபுணர்களை தயார்ப்படுத்துவதற்கு ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. தனது மூலோபாய திட்டங்களின் அங்கமாக, மனித மூலதனத்தில் இந்த முதலீடு என்பது நாட்டின் சுகாதார பராமரிப்பு பணியாளர்களை வலிமைப்படுத்துவதுடன், தொழிற்துறைக்கு நிலைபேறான எதிர்காலத்தை உறுதி செய்வதாக அமைந்திருக்கும்.

சுகாதார பராமரிப்புத் துறை என்பது திறன் படைத்த பணியாளர்களுக்கு சர்வதேச ரீதியில் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ளது. உள்நாட்டில் தனியார் துறையின் தேவைப்பாட்டில் வருடாந்தம் 1000 முதல் 2000 தாதியருக்கு பற்றாக்குறை காணப்படும் நிலையில், சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கு அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் SLIIT ஆகியன பிரத்தியேகமான நிலையில் தம்மை நிலைநிறுத்தியுள்ளன. வத்தளை மற்றும் தலவத்துகொட பகுதிகளில் இரண்டு நவீன வசதிகள் படைத்த வைத்தியசாலைகளை கொண்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 43 கம்பனி உரிமையாண்மையில் இயங்கும் மருத்துவ ஆய்வுகூடங்களையும் கொண்டுள்ள ஹேமாஸ், இலங்கையின் சுகாதார பராமரிப்பு துறைக்கான முக்கியத்துவம் வாய்ந்த பங்காளராக திகழ்கின்றது. ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் மொரிசன் ஆகியன மருந்தாக்கல் துறையில் முன்னோடிகளாக திகழ்வதுடன், ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் பிரதான விநியோகத்தராகவும், இலங்கையில் முதலாவதும் பாரியதுமான பொது வாய்மூல திண்ம மற்றும் திரவ மருந்துப் பொருட்களின் உற்பத்தி நிறுவனமாகவும் மொரிசன்ஸ் திகழ்கின்றது.

அதுபோன்று, ஒழுங்குபடுத்தல் அதிகாரத் தரப்புடன் இணைந்து பாடவிதானங்களை வடிவமைப்பதில் SLIIT கொண்டுள்ள வினைத்திறனானது, சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்களில் கற்கைகளை மேம்படுத்துவதில் சிறந்த பங்காளராக திகழச் செய்துள்ளது. புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகமாக SLIIT இன் 25 வருட கால வெற்றிகரமான செயற்பாடு என்பது, 25000 க்கும் அதிகமான மாணவர்களை தன்வசம் கொண்டுள்ளது. Curtin, Deakin மற்றும் லிவர்பூல் John Moores University போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் நீண்ட காலமாக பங்காண்மைகளையும் பேணுகின்றது.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழும பணிப்பாளர் மற்றும் சுகாதார பராமரிப்பு துறை தவிசாளர் முர்தஸா ஈசுபாலி கருத்துத் தெரிவிக்கையில், “ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸினூடாக அர்ப்பணிப்பான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் உத்தரவாதமளிக்கப்பட்ட தொழில் வாய்ப்புகள் போன்றன வழங்கப்படும். SLIIT இன் கல்விசார் ஆற்றல்களுடன் எமது நிபுணத்துவத்தை இணைத்து, உலகின் சுகாதார பராமரிப்பு நிறுவனங்களுக்கு தங்கியிருக்கக்கூடிய சுகாதார பராமரிப்பு நிபுணர்களை வழங்கக்கூடியதாக இருக்கும். அதனூடாக சிறந்த சுகாதார பராமரிப்பை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

SLIIT இன் உப வேந்தர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “ஹேமாஸ் உடன் கைகோர்த்து இந்த நிகழ்ச்சிகளை சாத்தியமாக்கியுள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். பல இலக்குகளை எய்தும் எமது நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது. சுகாதார பணியாளர்களுக்கான உறுதியான கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டிய எமது தேவையை நிவர்த்தி செய்வது மாத்திரமன்றி, கல்வி மற்றும் மூலோபாய தொழிற்துறை கைகோர்ப்பினூடாக எமது தேசத்தின் நலனுக்கு பங்களிப்பு வழங்குவதையும் வெளிப்படுத்தும். அதற்காக நாம் முயற்சிகளையும் கைகோர்ப்புகளையும் முன்னெடுத்துச் செல்வதற்காக முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X