Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமம், 2020 நிதியாண்டை சிறந்த நிதிப் பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலால் பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% வளர்ச்சியைப் பெற்று ரூ. 7.9 பில். ஆக பதிவாகியிருந்தது.
குழுமத்தின் வருமானம் ரூ. 91.1 பில்லியனாக அதிகரித்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6% வளர்ச்சியாகும். இதில் fibre விரிவாக்கம் மற்றும் மொபைல் புரோட்பான்ட் சேவைகளின் வளர்ச்சி அடங்கலாக, புரோட்பான்ட் பிரிவினூடாக கிடைத்திருந்த வருமானம் உயர்ந்தளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. PEOTV மற்றும் carrier business சேவைகளுக்கான வருமானமும் குறித்த நிதியாண்டில் அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
SLTகுழுமம் தனது EBITDA (Earnings Before Interest, Tax, Depreciation and Amortisation) ஐ முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% இனால் அதிகரித்து ரூ. 34.7 பில்லியனாக பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டில் பதிவு செய்திருந்த 35% எனும் EBITDA எல்லைப் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டு 38% ஐ பதிவு செய்திருந்தது. வெற்றிகரமான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக இந்தப் பெறுமதிகளை எய்தக்கூடியதாக இருந்தது.
2020 நான்காம் காலாண்டின் குழுமத்தின் வருமானம் முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4% இனால் அதிகரித்து ரூ. 24.0 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2020 நிதியாண்டில் பதிவு செய்திருந்த உயர் காலாண்டு வருமானத்தை பதிவு செய்திருந்தது. குறித்த காலாண்டுக்கான செயற்பாட்டு இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 27% இனால் அதிகரித்து ரூ. 1.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2020 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 33% வீழ்ச்சியாகும். காலாண்டுக்கான குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 1.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 48% வீழ்ச்சியாகும். உயர் செயற்பாட்டு செலவுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் அசாதாரண பெறுமதி ஏற்றத்தாழ்வுகள் போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன.
SLT குழுமத்தின் மொபைல் பிரிவான மொபிடெல் (பிரைவட்) லிமிடெட், 2020 ஆம் ஆண்டில் பாரதூரமான பெரும் பொருளாதாரச் சூழ்நிலைகள் காணப்பட்ட போதிலும், அதன் வருமானத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. வருமானத்தின் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டு செலவீனத்தை கட்டுப்படுத்தியது போன்றவற்றை ஒரே வேளையில் அமுல்படுத்தியதினுடாக உறுதியான இலாபகரமான வளர்ச்சியை மொபிடெல் பதிவு செய்திருந்தது. 2020 நிதியாண்டில் மொபிடெலின் வருமானம் ரூ. 43.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 2019 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 8% வளர்ச்சியாகும். வருமானத்தில் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் ஆகியவற்றின் பின்னணியில் மொபிடெலினால் சகல இலாபமீட்டும் குறிகாட்டிகளிலும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்தது. EBITDA இல் நிறுவனம் 3.1 பில்லியன் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23% வளர்ச்சியாகும். 2020 நிதியாண்டில் EBIT பெறுமதி ரூ. 2.6 பில்லியனினால் அதிகரித்திருந்தது. இது 2019 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 50% வளர்ச்சியாகும். 2020 நிதியாண்டில் மொபிடெல் இதுவரை காலத்திலும் பதிவு செய்திருந்த தனது உயர்ந்த வரிக்கு பிந்திய இலாபமான ரூ. 4.9 பில்லியனை மொபிடெல் பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54% அதிகரிப்பாகும்.
2020 நிதியாண்டில், குழுமத்தினால் மொத்தமாக 17.1 பில்லியன் ரூபாய் நேரடி மற்றும் மறைமுக வரியாக இலங்கை அரசாங்கத்துக்கு செலுத்தப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
19 minute ago
24 minute ago