Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆகாயமார்க்க பிரயாணத் தொழிற்றுறைக்கான தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற SITA, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் நவீன விமான நிலைய டிஜிட்டல் மயமாக்கல் சேவைகளை அமுலாக்கம் செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
SITA வின் தனித்த, Self- Baggage Drop சாதனத்தின் அமுலாக்கம் பிரயாணிகள் பாவனை ஆற்றலை 20% ஆல் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் புத்தாக்கமான முயற்சியானது சௌகரியம் மற்றும் வினைத்திறனுக்கு முன்னுரிமையளித்து பிரயாண அனுபவத்தை மேம்படுத்தும் அதேசமயம், சர்வதேச பிரயாணிகளுக்கு சீரமைக்கப்பட்ட சேவைகளை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகாயமார்க்க பிரயாணத் தொழிற்றுறையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான SITA, அதன் நவீன அங்க அடையாளத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பிரயாணத் தீர்வுகளுடன் ஆகாய மார்க்க பிரயாணத்தில் டிஜிட்டல் புரட்சியில் முன்னிலை வகித்து வருகின்றது. சந்தையிலுள்ள ஒரேயொரு முழுமையான தீர்வு வழங்குனர் என்ற வகையில், புத்தாக்கத்தை முன்னெடுத்து, பிரயாணத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான தனித்துவமான ஸ்தானத்தில் SITA காணப்படுகிறது.
இக்கூட்டாண்மையின் ஓர் அங்கமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது பிரயாணிகள் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு SITA வின் TS6 Kiosk Self-Baggage Drop தீர்வுகளைப் பயன்படுத்தும்.
1968 ஆம் ஆண்டு முதல் நீண்ட கால மற்றும் வெற்றிகரமான கூட்டாண்மையை SITA மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியன அனுபவித்துள்ளன. இப்புதிய ஒப்பந்தமானது அவற்றுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு கூடுதல் பலத்தைச் சேர்ப்பிப்பதுடன், புத்தாக்கமான மற்றும் பெறுமதிமிக்க தீர்வுகளை வழங்குவதில் SITA மீது விமானசேவை கொண்டுள்ள நம்பிக்கைக்கும் தெளிவான சான்றாகக் காணப்படுகின்றது.
SITA Smart Path மற்றும் Advance Passenger Processing (APP) போன்ற SITA வின் நிரூபிக்கப்பட்ட தீர்வுகள், பிரயாணத்தில் டிஜிட்டல் எதிர்காலத்தை மேம்படுத்தும் அதன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
Indicio மற்றும் Arab Air Carriers Organization (AACO) ஆகியவற்றுடனான கூட்டாண்மைகள் அடங்கலாக, நிறுவனத்தின் இணைப் புத்தாக்க முயற்சிகள். இத்துறையில் புத்தாக்கத்தை முன்னெடுத்து மற்றும் ஒத்துழைப்பதில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது.
SITA யின் 75 ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் இத்தருணத்தில் ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றினூடாக சமூகத்தின் தேவைகளை தீர்த்துவைக்கும் எமது மரபை நாம் பிரதிபலிக்கின்றோம்.
நாம் இன்று டிஜிட்டல் பிரயாணத்தின் வழிமுறையை தொடர்ந்தும் முன்னின்று வழிநடத்தி வருவதுடன், பிரயாணிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு தங்குதடையின்றிய பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க தீர்வை வழங்கி விமான நிலையங்கள் மற்றும் அவற்றுக்கப்பால் முழுமையான டிஜிட்டல் பிரயாணத் தீர்வை வழங்கும் ஒரேயொரு சேவை வழங்குனராகக் காணப்படுகின்றது.
நாம் வெறுமனே சர்வதேச விமானப் போக்குவரத்து தொழில்துறையை இணைப்பது மட்டுமல்லாது, ஆகாயமார்க்க போக்குவரத்தில் கிட்டத்தட்ட அனைத்து பிரதான வணிகங்கள், செயற்பாடு, பிரயாணப் பொதி மற்றும் பிரயாணிகள் செயல்முறையில் புத்தாக்கத்தில் ஓயாத அர்ப்பணிப்புடன் பல தசாப்த கால அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி வருகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
5 hours ago