Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மே 31 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒளியேற்றும் தேசிய திட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. இதன் அங்கமாக, ஸ்ரீ லங்கா ரெலிகொம் தலைமையக வளாகத்தில் வண்ணமயமான வெசாக் பந்தங்களை ஒளியூட்டியிருந்தது. வெசாக் பௌர்ணமி தினமான மே மாதம் 25 ஆம் திகதி முதலாவது வெசாக் பந்தத்தை ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ ஒளியூட்டியிருந்தார். இந்த நிகழ்வில், SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டுக்கான SLT-MOBITEL இன் வெசாக் கருப்பொருளாக 'Singalovada Sutta' என்பது அமைந்திருந்தது. மக்களுக்கான பௌத்த ஒழுக்கக்கோவையை வலியுறுத்தும் வகையில், எமது பரந்த சமூக உறவுகளுக்கமைய எமது பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றி வாழ்வதனூடாக எமது வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பதை குறிப்பதாக இந்த ஒளியூட்டல் அமைந்திருந்தது. அனைவரிடத்திலும் வெசாக் பௌர்ணமியின் ஒளியை பரவச் செய்யும் வகையில், SLT-MOBITEL இனால் 'Singalovada Sutta'இன் தகவலை பரவச் செய்வதற்காக பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக கட்டமைப்புகள் போன்றன பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பான ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் வாழும் பௌத்தர்களின் புனித நாளாக வெசாக் பௌர்ணமி தினம் அமைந்துள்ளது. இலங்கையில், இந்த வெசாக் தினம் மிகவும் சவால்கள் நிறைந்த சூழலில் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையாக போராடி வருகின்றது. 'Singalovada Sutta' என்பது இந்த வெசாக் பௌர்ணமி தினத்தின் கருப்பொருளாக அமைந்திருந்தது. திரண்ட பாதுகாப்புக்கு தனிநபரின் பொறுப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது. மிகவும் நெருக்கடியான காலப்பகுதியில் சமூகத்துக்கு முக்கியத்துவமளித்து, வழமையான கொண்டாட்டங்களுக்கு பதிலாக இந்த நடவடிக்கை தற்போதைய காலப்பகுதிக்கு பொருத்தமானதாக அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன். புத்த பெருமானுக்கான அமிசா பூஜை வழிபாடுகளின் போது எமது ஒளியூட்டல்களை அர்ப்பணித்திருந்தோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago