Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயத்தில் நைதரசன் பாவனையினால் ஏற்படும் சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் கண்டறியப்பட்ட விடயங்களின் பிரகாரம், நிலைபேறான வகையில் நைதரசன் முகாமைத்துவத்துக்கான அவசர தேவை என்பது இலங்கைக்கு மிகவும் இன்றியமையாததாகும். சுப்பர் யூரியா தொடர்பான தொழில்நுட்ப அமர்வை, இலங்கையின் விவசாயத்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள பவர் என அறியப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் செப்டெம்பர் 4ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த அமர்வின் போது, துறையின் இரு நிபுணர்களான பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பயிர் விஞ்ஞான பிரிவின் பேராசிரியர். எஸ்.பி.நிஸ்ஸங்க மற்றும் Innovar Ag, LLC இன் உப தலைவரும் Kansas அரச பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறையின் முன்னாள் உதவி பேராசிரியருமான ரே அசேபெடோ ஆகியோர் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.
பவர் பிரதம நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவ பணிப்பாளர் ரொல்ப் பிளாசர், விவசாய செயற்பாடுகளுக்கான பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்/பணிப்பாளர் ஜனக குணசேகர மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் FAO ஸ்ரீ லங்காவின் சிரேஷ்ட விவசாய நிபுணர் கலாநிதி. டபிள்யு. எம்.டபிள்யு. வீரகோன் அவர்களும் அடங்கியிருந்தார். இவர், விவசாய முன்னாள் பணிப்பாளர் நாயகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளிமண்டலத்தில் நைதரசன் மிகையாக காணப்படுவதுடன், தாவர வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றது. ஆனாலும், தவறாக நிர்வகிக்கப்பட்டால், அதனால் பெரும் சூழல்சார் சவால் நிலை ஏற்படும். இலங்கையில், விவசாயத்திலிருந்து நைதரசன் கசிவுகள் அதிகரித்துள்ளன. இதனால் மண் வளம் குன்றுதல், நீர் மாசடைதல் மற்றும் பச்சை இல்ல வாயு வெளியேற்றங்கள் போன்றவற்றில் பங்களிப்பு செலுத்தப்படுகின்றது. நைதரசன் உரங்களிலிருந்து 40 சதவீதத்துக்கும் குறைந்த பகுதி தாவரங்களால் வினைத்திறனான வகையில் பயன்படுத்தப்பட்ட போதிலும், எஞ்சிய பகுதி சூழலில் வெளியிடப்பட்டு, பரந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
2016 ஆம் ஆண்டில் சுப்பர் யூரியா பயன்பாடு தொடர்பில் பவர் முன்னிலையிலிருந்து செயலாற்ற ஆரம்பித்திருந்தது. அமோனியா ஆவியாதல் மற்றும் மண்ணில் நைதரசன் உரங்கள் நைட்ரேற்றம் அடைவதை குறைக்கும் நைதரசன் இரட்டை உறுதியாக்கல் தன்மையை கொண்டதாக இது அமைந்திருந்தது. இந்த உறுதியாக்கல் கூறினால், நைதரசன் உர பிரயோகத்தின் வினைத்திறன் மேம்படுத்தப்படுவதுடன், நைதரசன் இழப்புகள் குறைக்கப்பட்டு, விளைச்சல் அளவை மேம்படுத்தி, சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைத்திருந்தது. இதன் பங்காளர்களில் இலங்கையில் பவர் பிரத்தியேக விநியோக உரிமையாண்மையை கொண்ட Innovar Ag அடங்கியுள்ளது.
Innovar Ag இன் தயாரிப்புகளான N-Yield மற்றும் NBound ஆகியன நைதரசன் இழப்புகளை பெருமளவில் குறைப்பதுடன், சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைத்து, பயிர் விளைச்சலை 22 சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. PENXCEL போன்ற தமக்குரிய தொழில்நுட்பங்களினூடாக, Innovar Ag இனால் விவசாயிகளுக்கு தமது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளக்கூடிய சாதனங்கள் வழங்கப்படுவதுடன், புவியின் சுகாதாரத்தை பேணுவதற்கும் பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
அமோனியா ஆவியாதல் மற்றும் நைதரசன் கசிவு போன்ற பொறிமுறைகளினூடாக நைதரசன் இழப்புக்கு எதிரான செயற்பாடுகளில் Innovar Ag கவனம் செலுத்துகின்றமை தொடர்பில் அசேபெடோ குறிப்பிட்டதுடன், தாவரங்களை பெருமளவு நைதரசன் சென்றடைவு, பாதிப்பை ஏற்படுத்தும் கசிவுகளை தணித்தல் மற்றும் நீர் களங்கமடைதலை குறைத்தல் போன்றவற்றை உறுதி செய்யும் நவீன தீர்வுகளை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இரட்டை செயற்பாட்டுத்திறன் மிக்க நைதரசன் உறுதியாக்கியான NEON எனும் தயாரிப்பு அடங்கலாக, அதன் பலதரப்பட்ட தெரிவுகளினூடாக, இலாபத்தை அதிகரிக்கச் செய்யும் நிலைபேறான விவசாய செயன்முறைகளை உருவாக்குவது மாத்திரமன்றி, ஆரோக்கியமான சூழலுக்கும் பங்களிப்பு வழங்குவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago