Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமை ஆராய்ச்சி நிலையமானது, "பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில் வறுமை ஒழிப்பு" எனும் தலைப்பின் கீழ் ஆய்வுக்கருத்தரங்கை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் துறைசார் நிபுணர்கள், தொழில் விற்பனர்கள் மற்றும் பலதரப்பு ஆர்வலர்கள் பங்கேற்று இலங்கையின் வறுமை தொடர்பான மிகமுக்கிய பலதரப்பட்ட விடயங்களை ஆராய்ந்திருந்தனர்.
1990 ம் ஆண்டுகளில் இருந்து வறுமைக் குறைப்பு தொடர்பாக இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. 1990 களில் 26.1% ஆக இருந்த வறுமை நிலையானது, 2016 க்குள் சுமார் 4% ஆகக் குறைந்தது எனக்கூறலாம். என்றபோதிலும், COVID-19 பரவலைத் தொடர்ந்து எமது பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிக்கு முகம் கொடுத்தது. இதன் விளைவாக எம் நாட்டின் வறுமை நிலை 26% ஆக அதிகரித்தது.
இவ்வியத்தகு மாற்றத்தினைத் தூண்டும் அடிப்படைக் காரணிகள் மிகச்சிக்கலானவை என்பதோடு பன்முகத்தன்மை கொண்டவையுமாகும். இந்த சிக்கலினைத் தீர்க்க, வறுமைக் குறைப்புக்கு பங்களித்த கொள்கைகள் மற்றும் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை CEPA இனங்கண்டுள்ளது. முன்னேற்றங்கள், அபிவிருத்திகள் என்பன தலைகீழாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதனைக் கண்டறிந்துள்ளது. இப்புரிதலானது எதிர்காலத்தில் வறுமையை சமாளிக்க பயனுள்ள வெற்றிகாண் செயல்திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றும்.
இவ்வாய்வுக் கருதரங்கானது ஒன்றுடன் ஒன்று பூர்த்தி செய்யும் இரு கூறுகளைக் கொண்ட ஒரு அணுகுமுறையைப் பின்பற்றும் வகையில் "பின்நோக்கிய மீளாய்வு" மற்றும் "எதிர்கால அபிவிருத்தியை நோக்கியவை" எனும் தொனிப்பொருளில் எமது புரிதலை விரிவுபடுத்துவதோடு காலப்போக்கில் வறுமை தொடர்பான பிரச்சனைகளை மதிப்பாய்வு செய்து அவை தொடர்பான அளவீடுகளில் கவனம் செலுத்தி தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் அதற்கு அப்பாலும் சென்று வறுமை நிலையினை நிவர்த்தி செய்தலுமாகும்.
இந்நிகழ்வில் முக்கிய உரைகளை முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிராந்தியங்கள் தொடர்பான பொருளாதார நிபுணரான கலாநிதி ராணா ஹசன் ஆகியோர் ஆற்றியிருந்தனர். இவ்வாய்வுக் கருத்தரங்கின் முக்கிய விளைவாக எதிர்கால வறுமைக் குறைப்பு மற்றும் கடந்த கால வெற்றிகரமான அணுகுமுறைகளில் மிகப் பொருத்தமானவற்றை மதிப்பீடு செய்யப்பட்டமை அமைந்திருந்தது.
நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் வறுமையை நிவர்த்தி செய்வது என்பது தனித்துவமான பல சவால்களை முன்வைக்கின்றது. பெரும் பொருளாதாரம் தொடர்பான சவால்கள், வறுமை மற்றும் சமத்துவமின்மை மீதான அவற்றின் விளைவுகள் பற்றிய தொடர்ச்சியான காலத்துக்கு ஏற்ற புத்தம் புது பேச்சுமேடை தளம் என்பன பற்றி இவ் ஆய்வுக் கருத்தரங்கில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. நிலையான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுதிப்படுத்தல் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் என்பனவற்றை எடுத்துக்காட்டுவது இதன் சிறப்பம்சமாகும். பொருளாதார நிலைப்படுத்தலானது முக்கியமானதென்ற போதிலும், அது மட்டுமே போதுமானதாகாது. வறுமையைக் குறைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் பொருளாதார வளர்ச்சி, முக்கிய பங்கு வகிக்கின்றது. பொருளாதார சீர்திருத்தங்கள், உறுதிப்படுத்தல் கொள்கைகளுக்கு அப்பால், ஏழைகளை நியாயமற்ற விதத்தில் பாதிக்கக் கூடும் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, இப்பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பல துணைக் கொள்கைகளும் அவசியமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago