Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2022 ஜூன் 27 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணத்தில் இயங்கும் Ruhunu Hospital (Pvt.) Ltd, தென்னிலங்கையில் முதலாவது தனியார் துறை Cath Lab ஆய்வுகூடத்தை ஆரம்பித்துள்ளது.
மருத்துவமனையானது Philips Cath Lab இயந்திரத்திற்காக ரூ. 250 மில்லியனை முதலீடு செய்துள்ளது. இது உலகளவில் முன்னணி இருதய சிகிச்சை வழங்கல் இயந்திரமாக உள்ளது. உறைந்த இரத்தத்தை அகற்றுதல் (Percutaneous coronary intervention - PCI) போன்ற இரத்தக் குழாய் நிலைமைகளைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான Catheterization சிகிச்சை மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்தல் (Temporary pacemaker -TPM) போன்ற பல்வேறுபட்ட சேவைகளை நோயாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
Cath Lab ஆய்வுகூடத்தை ஆரம்பித்ததன் மூலம், இலங்கையில் iFR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதலாவது தனியார் துறை மருத்துவமனையாக ருஹுணு மருத்துவமனை மாறியுள்ளது. iFR முறையானது நோயறிதல் மற்றும் சிகிச்சை நடைமுறைகளில் குருதி அமுக்கத்தை அளவிட பயன்படுவதுடன், Philips ஆல் மாத்திரமே வழங்கப்படுகிறது. Philips iFR சுகாதார பராமரிப்பில் தங்கத் தரநிலையாகக் கருதப்படுவதுடன், ACC/AHA/SCAI (American College of Cardiology/American Heart Association/Society for Cardiovascular Angiography and Interventions) ஆல் உயர்மட்ட மருத்துவச் சான்றுகளின் அடிப்படையில் அதன் துல்லியத்திற்காக Class IAபரிந்துரையைப் பெற்றுள்ளது.
அனைத்து நோயாளிகளுக்கும் உயர் தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் ருஹுணு மருத்துவமனையின் அர்ப்பணிப்புக்கு புதிய Cath Lab ஒரு சான்றாகும். Cath Lab மிகவும் திறமையான மற்றும் தொழில்முறை தகைமை கொண்ட பணியாளர்களால் பேணிப் பராமரிக்கப்பட்டு, மிக உயர்ந்த தரமான சேவையை வழங்கும் அர்ப்பணிப்புடன் எப்போதும் இருக்கும் என்பதை நோயாளர்கள் உறுதியாக நம்பலாம். நாடளாவிய ரீதியில் பயிற்சியளிக்கும் மிகவும் அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு பயிற்சி பெற்ற இருதய நோய் வைத்திய நிபுணர்களால் Cath Lab இயக்கப்படும். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள் இந்த நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருப்பார்கள். ருஹுணு வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுபவம் வாய்ந்த தாதியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் உள்ள நோயாளர்கள், இதே சேவைக்காக கொழும்புக்கு பயணிப்பதால் ஏற்படும் சிரமங்களையும் செலவுகளையும் தலையில் சுமக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், Cath Lab அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் அவர்கள் பெரிதும் பயனடைவார்கள். தென் மாகாணத்தின் மருத்துவ மையத்தில் அமைந்துள்ள ருஹுணு வைத்தியசாலையானது அனைத்து நோயாளர்களுக்கும் வழங்கப்படும் பிரத்தியேக கவனிப்புடனான சிகிச்சைக்காகப் புகழ்பெற்றது. ருஹுணு மருத்துவமனை மொத்தம் 09 ICU, HDU மற்றும் CCU படுக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Cath Lab இன் ஆரம்பம் குறித்து கருத்து தெரிவித்த இணை - பிரதம நிறைவேற்று அதிகாரி ரவீன் விக்ரமசிங்க, 'தென் மாகாணத்தில் வசிப்பவர்களின் அதிகரித்து வரும் இருதய சுகாதாரப் பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய அதிநவீன Cath Lab ஆய்வுகூடத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளோம். தென் மாகாணத்தில் முன்னணி சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குனராக ருஹுணு வைத்தியசாலையின் 27 வருட பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்காகும். ஈடிணையற்ற சுகாதார பராமரிப்பு சேவைகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்,' என்று குறிப்பிட்டார்.
இணை - பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜனித் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், 'தென் மாகாணத்தில் உள்ள நோயாளர்களுக்கு சிறந்த Cath Lab வசதிகளை வழங்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ருஹுணு வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளில் ஈட்டியுள்ள சிறந்த நற்பெயரைக் கொண்டு, நோயாளர்கள் எமது இருதய நோய் வைத்திய நிபுணர்கள் மூலம் நிபுணத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெறுவதில் நம்பிக்கையுடன் இருக்க முடியும். நாங்கள் கடினமாக உழைத்து, தென் மாகாணத்தில் உயர்தர சுகாதார பராமரிப்பு சேவை வழங்குனராக எங்களின் அந்தஸ்தை தொடர்ந்து உறுதிப்படுத்துவோம்,'என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
32 minute ago