Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 28 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணத்திலுள்ள தனியார் துறை வைத்தியசாலையான ருகுணு மருத்துவமனை, 2025 பெப்ரவரியில் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 1995ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை, சமூகத்தின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளை நிறைவேற்றுவதில் தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
ருகுணு மருத்துவமனை கடந்து மூன்று தசாப்த காலத்தில் தனது சேவைகளை கணிசமான அளவில் விரிவுபடுத்தியுள்ளது. இன்று அது கிட்டத்தட்ட 100 உள்நோயாளர் படுக்கை அறைகளையும், 150க்கும் மேற்பட்ட விசேட வைத்திய நிபுணர்களையும், 30 விசேட சிகிச்சைப் பிரிவுகள்/மையங்களையும், அதிநவீன MRI ஸ்கானிங் மையத்தையும், பூரண வசதிகளைக் கொண்ட Cath ஆய்வுகூடத்தையும், ஒன்பது படுக்கைகளைக் கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவையும் (HDU), நான்கு சத்திர சிகிச்சைக்கூட வளாகத்தையும், 500க்கும் மேற்பட்ட மாதிரி சேகரிப்பு மையங்களுடன், தென் மாகாணத்திலேயே மிகப் பாரிய ஆய்வுகூட வலையமைப்பையும் கொண்டுள்ளது.
2021ம் ஆண்டில் தனது முதலாவது அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு மையத்தை மாத்தறையில் திறந்து வைத்த ருகுணு மருத்துவமனை, வெகுவிரைவில் தனது இடைநிலை சுகாதாரப் பராமரிப்பு மையத்தையும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது.
King’s Court மற்றும் Presidential Suite வசதிகளுடன், இலங்கையிலேயே மிகவும் ஆடம்பர வசதி கொண்ட வைத்தியசாலை என்ற அங்கீகாரத்தையும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்ற ருகுணு மருத்துவமனை, 24 மணி நேர மருத்துவ சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. மிகவும் திறமை வாய்ந்த வைத்தியர்கள், தாதியர் மற்றும் சுகாதாரத் துறை தொழில் வல்லுனர்கள் அடங்கிய அணி, இங்கு வருகை தரும் அனைத்து நோயாளர்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த மற்றும் தனிப்பட்ட கவனிப்புடனான சிகிச்சை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்கின்றது.
இச்சாதனை மைல்கல் குறித்து பிரதிபலித்து கருத்து தெரிவித்த தலைவர் தீபால் விக்கிரமசிங்க, வைத்தியசாலையின் அர்ப்பணிப்பு மிக்க அணி மற்றும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தனது நன்றிக்கடனை வெளிப்படுத்தினார். வைத்தியசாலையின் குறிக்கோளும், பணி நோக்கமும் இந்த ஆண்டில் மீள்வரையறை செய்யப்பட்டுள்ளதை வலியுறுத்திய அவர், ருகுணு மருத்துவமனையை அதிநவீன சேவைகளுடன், தென்பிராந்தியத்தில் மிகப் பாரிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டும் தான் ஆரம்பத்தில் கொண்டிருந்த கனவு தற்போது நனவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். வைத்தியசாலையின் எதிர்கால பயணம் குறித்து சுட்டிக்காட்டிய பிரதம நிறைவேற்று அதிகாரி ரவீன் விக்கிரமசிங்க, மருத்துவ தொழில்நுட்பத்தில் எதிர்வரும் முதலீடுகள், டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்புத் தீர்வுகள், நோயாளர் பெற்றுக்கொள்ளும் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் சேவை மேம்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிட்டார். வரும் காலங்களில் ருகுணு மருத்துவமனையை மூலோபாய ரீதியாக முக்கியமான ஸ்தானத்தில் நிலைநிறுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தனது மகத்தான பயணத்தில் 30 ஆண்டுகளை ருகுணு மருத்துவமனை எட்டியுள்ள தருணத்தில், தேசத்தில் மருத்துவத்தில் மகத்துவத்திற்கான புதிய தரஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டி, தலைசிறந்த சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்கும் தனது இலக்கில் தொடர்ந்தும் மிகவும் உறுதியாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago
50 minute ago