Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மார்ச் 17 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 ஆம் ஆண்டில் தேசத்துக்கு சேவைகளை வழங்குவதில் 25 வருட பூர்த்தி எனும் மைல்கல்லை யூனியன் வங்கி கடந்திருந்தது. கடந்த ஆண்டில் வங்கியின் செயற்பாடுகள் மற்றும் அத்திவாரம் ஆகியவற்றுக்கு பெரும் சவால்கள் நிலவியிருந்ததுடன், அச்சவால்களுக்கு உறுதியாக முகங்கொடுத்து வங்கி மீண்டிருந்தது. பொருளாதாரச் செயற்பாடுகள் மந்த கதியை அடைந்திருந்தமை காரணமாக தொழிற்படு வினைத்திறன் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்வதற்காக செலவு செம்மையாக்கங்கள், வளங்கள் மற்றும் உற்பத்தித்திறன் வினைத்திறனான முறையில் நிர்வகித்திருந்தமை மற்றும் கடுமையான இலாகா நிர்வாகம் போன்றவற்றில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்தது.
சவால்கள் நிறைந்த சூழலிலும், தனது திரள்வு இருப்புகளை துரிதமாக யூனியன் வங்கி அதிகரித்திருந்ததுடன், உறுதியான மேலதிக திரள்வு நிலையை பேணியிருந்தது. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் 2020 ஆம் ஆண்டுக்கான தனது தரப்படுத்தல்களின் போது, யூனியன் வங்கியின் தற்போதைய தரப்படுத்தலை மீள உறுதி செய்திருந்தது. இதற்கு உறுதியான திரள்வு நிலை மற்றும் மூலதனம் ஆகியன பக்கபலமாக அமைந்திருந்தன. தொற்றுப் பரவலுடனான பொருளாதார தாக்கங்களின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு உதவ, குறிப்பிடத்தக்களவு நிதியியல் நெகிழ்ச்சித் தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யூனியன் வங்கி நம்பிக்கையுடனும், துறையின் முன்னோடியான மூலதன நிலையையும் பேணியிருந்தது. வருடம் முழுவதிலும் வங்கி துரிதமான மூலதன போதுமை விகிதத்தை பேணியிருந்ததுடன், வருட இறுதியில் 16.95% மொத்த மூலதன விகிதத்தை பதிவு செய்திருந்தது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்வாக அமைந்திருந்தது.
வங்கி துரிதமாக தனது செயற்பாடுகளை மீள ஒழுங்குபடுத்தியிருந்ததுடன், தொற்றுப் பரவல் காரணமாக புதிய சந்தை போக்குகள் மற்றும் வாடிக்கையாளர் சாய்வில் அதிகளவு முன்னுரிமையளித்து கவனம் செலுத்தியிருந்தது. உள்ளார்ந்த வியாபார தந்திரோபாயத்தை வங்கி நிறைவேற்றியிருந்ததுடன், அதன் சேவைகள் மிருதுவாக தொடர்ந்தும் இடம்பெறுவதை உறுதி செய்திருந்தது. அத்துடன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமையளித்திருந்தது. ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் மாற்று பணித் தீர்வுகளை வழங்கியிருந்ததுடன், வீட்டிலிருந்து பணியாற்றும் வசதிகள், தொடர்ச்சியாக பணிகள் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு மேலதிக உட்கட்டமைப்பு வசதிகள் போன்றன நாட்டில் முடக்க நிலை அமுலில் இருந்த காலப்பகுதியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.
வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அவர்களின் வழமையான வாழ்க்கைக்கு மீளத்திரும்புவதற்கு அவசியமான பிரத்தியேகமான திட்டங்களை முன்னெடுப்பதில் இலங்கை மத்திய வங்கி கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக பரிந்துரைத்திருந்த நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலமைந்த ஒழுங்குபடுத்தல் மற்றும் நாணயக் கொள்கை குறைப்புகள் போன்றவற்றை யூனியன் வங்கி அமுலாக்கியிருந்ததுடன், கடன் அட்டைகள் அடங்கலாக தனது கடன் திட்டங்களின் மீது வட்டி வீதங்களையும் குறைத்திருந்தது. இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நிவாரணத் திட்டத்தின் பிரகாரம் கடன் பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட முதல் தொகை மற்றும் வட்டியின் மீதான மீளச் செலுத்தல் சகாய முறைமையை யூனியன் வங்கி வழங்கியிருந்ததுடன், வங்கியின் உள்ளக கடன் கொகை வழிகாட்டல்களின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு அப்பாலும் வாடிக்கையாளர்களுககு கடன் நிவாரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த சகாயத்திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட தீர்வுகளில் கடன்கள், லீசிங்கள், மேலதிகப் பற்றுகள், அடைமானங்கள் மற்றும் வர்த்தக நிதியளிப்பு வசதிகள் போன்றன அடங்கியிருந்தன. தொழிற்பட கடன் பெறுநர்களும் இந்த கடன் சகாயத் திட்டத்துக்கு தகைமை பெற்றதுடன், அவர்களுக்கு பொருத்தமான மீளமைக்கப்பட்ட மீளச் செலுத்தும் முறைமைகள் வழங்கப்பட்டிருந்ததுடன், மேலதிக வசூலிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவு ரூ. 67,518 மில்லியனாக பதிவாகியிருந்தது. வருட நிறைவில் வங்கியின் வைப்பு இருப்பு ரூ. 82,384 மில்லியனாக பதிவாகியிருந்தது. குறைந்த வட்டிச் சூழலிலும் 7.6% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. குறைந்த செலவு வைப்புகளின் மீதான தந்திரோபாய நோக்கு தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளை ஏற்படுத்தியிருந்தது. வியாபார அலகுகளினால் CASA மீதான வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளினூடாக இதை எய்த முடிந்தது. வங்கியின் CASA இலாகா சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், 2020 டிசம்பர் மாதத்தில் 26.8% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த 25% என்பதை விட 2020 ஆம் ஆண்டில் 30% ஆக திரண்ட CASA பெறுமதி பதிவாகியிருந்தது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிவாரணத் திட்டங்கள் வழங்கப்பட்டமை மற்றும் குறைந்த வட்டி சதவீதச் சூழல் போன்றவற்றினூடாக வங்கியின் தேறிய வட்டி எல்லை (NIM) 3.2 % ஆக பதிவாகியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் இது 3.6 % ஆக காணப்பட்டது. 2020 நவம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கமைய வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) பெறுமதி மேலும் பாதிக்கப்பட்டிருந்தது. 2020 மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டிருந்த கடன் மீளச் செலுத்தும் சகாய கால நிவாரணத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிப்பது தொடர்பில் இது அமைந்திருந்ததுடன், ஆகக்கூடிய நிவாரண வட்டி வீதமாக 7% ஐ அறிவித்திருந்தமை போன்றவற்றினூடாக சம அளவுகளில் மாதாந்தம் மீளச் செலுத்தப்படும் வகையில் வழங்கப்பட்டிருந்த கடன் வசதிகளில் வட்டி வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
மோசமான சந்தை சூழல்களின் காரணமாக கட்டண வருமானம் பாதிப்படைந்து முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.4% சரிவை பதிவு செய்திருந்தது. கொவிட்-19 நிவாரணத்தினூடாக வழங்கப்பட்ட கட்டண விலக்கழிப்புகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தக வருமானங்களில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் வருடம் முழுவதிலும் காணப்பட்ட குறைந்த கடன் வளர்ச்சி காரணமாக காணப்பட்ட கடன்களுடன் தொடர்புடைய கட்டணங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றன அடங்கலாக வழங்கப்பட்ட கட்டண விலக்கழிப்புகள் இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.
திறைசேரி சிறப்பாக செயலாற்றியிருந்ததுடன், உறுதியான மூலதன வருமதிகளைப் பதிவு செய்திருந்தது, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84.2% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. வங்கியின் இதர தொழிற்படு வருமானம் ரூ. 162 மில்லியனால் அதிகரித்திருந்தது. இதில் வெளிநாட்டு நாணயப் பரிமாற்று வருமானம் மற்றும் வாடிக்கையாளர் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட வளர்ச்சி, நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி மற்றும் 2020 ஆம் ஆண்டில் மாற்றுக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.
வங்கி எவ்விதமான வர்த்தக பங்குகளைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அறிக்கையிடப்பட்ட திகதியில் எந்தவொரு பங்கிலும் முதலீடுகளை மேற்கொண்டிருக்கவில்லை.
ஆண்டின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 5,890 மில்லியனாக பதிவாகியிருந்தது. சவால்கள் நிறைந்த சந்தைச் சூழல்களில் எல்லையளவு வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.
நிகர NPL விகிதம் வருட நிறைவில் 6.05% ஆக காணப்பட்டது. ஒட்டுமொத்த NPL அதிகரிப்பு ரூ. 230 மில்லியனாக மாத்திரம் பதிவாகியிருந்தது. கடன் இலாகாவின் ஒட்டுமொத்த குறைப்பு என்பது இந்த விகிதத்தில் அதிகரிப்பை பிரதிபலித்திருந்தது. இலாகாவின் தரத்தை பேணுவதில் வங்கியினால் பேணப்பட்ட கடுமையான வழிமுறைகளினூடாக, சந்தையில் காணப்பட்ட தளம்பல்களின் போது தொழிற்படாக் கடன்களை (NPL) கட்டுப்படுத்த முடிந்தது.
மதிப்பிறக்க கட்டணம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88.5% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. அதன் கடன் இழப்புகள் குறைவாக காணப்பட்டதுடன், மதிப்பிறக்கமான சூழலில் நிர்வாக மேற்கட்டமைப்புகளினூடாக குறிப்பிடத்தக்களவு ஒதுக்கங்களை வங்கி பதிவு செய்திருந்தது. இடர் உயர்ந்து காணப்படும் துறைகளாக மூன்று துறைகள் இனங்காணப்பட்டதுடன், நிலை மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததனூடாக இவற்றின் மீது மேலதிக ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பொருளாதாரக் காரணிய சீராக்கங்களின் (EFA)தொடர்பில், 2020 டிசம்பர் 31ஆம் திகதி சிறந்த நிலையிலிருந்து மோசமான நிலைக்கு ஒதுக்கீடுகள் அதிகரித்து, வலுவிழந்து செல்லும் சூழலுக்கு பொறுப்புக்கூறும் வகையில் அமைந்திருந்தன. மதிப்பிறக்கங்களின் மீது இது அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. நாட்ன் இடர் தரப்படுத்தல் குறைப்புடன், திறைசேரியின் மதிப்பிறக்க பெறுமதிகளும் வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பிறக்கம் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்தன. கொவிட்-19 நிவாரணத் திட்டம் காரணமாக எழுந்த முழுயைமான மாற்றியமைப்பு இழப்பு இந்த மதிப்பிறக்க கட்டணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதுடன், இது இலங்கை கணக்காய்வு நியம-9 (SLFRS 9) முறைமையின் பிரகாரம் அமைந்திருந்தது.
வங்கியின் பரந்தளவு செலவு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக மொத்த தொழிற்படு செலவீனங்கள் நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், ரூ. 3,772 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5% வீழ்ச்சியாகும்.
தொழிற்படு எல்லைப் பெறுமதி என்பது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.3% இனால் குறைந்து ரூ. 2,118 மில்லியனாக பதிவாகியிருந்தது. செலவுகளில் 1.5% வீழ்ச்சிக்கு நிகராக வருமானத்தில் 2.2% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. வட்டி வருமானத்தை 7% ஆக குறைத்திருந்த 60 நாள் கடன் நிவாரணத் தாக்கத்தை தவிர்த்து நோக்கும் போது, தொழிற்படு எல்லைப் பெறுமதி 3.4% இனால் அதிகரித்திருக்கும்.
2020 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் பங்கின் மீதான இழப்பு ரூ. 29 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் UB ஃபினான்ஸிலிருந்து வரித் திருப்பங்களின் காரணமாக ஒரு முறைக்கான வருமதி ரூ. 127 மில்லியனாக பதிவாகியிருந்தது. துணை நிறுவனங்களின் இலாபங்களும் பொருளாதாரச் சவால்கள் நிறைந்த சூழல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன. ஆண்டுக்கான மொத்த வரி ரூ. 777 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 417 மில்லியன் குறைவாகும்.
வங்கியின் மாத்திரமான வருமானம் 2020 ஆம் ஆண்டில் ரூ. 605 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுப் பெறுமதிக்கு நிகரானதாக இருந்தது. துணை நிறுவனங்களின் மீதான பங்கு உரிமையாண்மை அடங்கலாக வங்கியின் இலாபம் என்பது ரூ. 577 மில்லியனாகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.8% வீழ்ச்சியாகும். 2019 ஆம் ஆண்டில் UB ஃபினான்ஸ் மீது பதிவாகியிருந்த ஒரு தடவை வருமானம் இதில் பிரதான தாக்கத்தை செலுத்தியிருந்தது. ஆண்டுக்கான இதர பரிபூரண வருமானம் ரூ. 183 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த பரிபூரண வருமானம் ரூ. 759 மில்லியனாகும்.
வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியன ரூ. 623 மில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.6% வீழ்ச்சியாகும். குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 129.6 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்களில் 95%ஐ வங்கி தன்வசம் கொண்டிருந்தது. எனவே, குழுமத்தின் பெறுபேறுகள் பெருமளவில் வங்கியின் செயற்பாடுகளில் தங்கியிருந்தது.
சவால்கள் மத்தியிலும் செயற்பாடுகள் மற்றும் வியாபாரத் தொடர்ச்சி நிலை
வாடிக்கையாளர் இருப்பில் தொற்றுப் பரவல் ஏற்படுத்திய தாக்கத்தை கவனத்தில் கொண்டு, வங்கியின் கூட்டாண்மை, சிறிய, நடுத்தர தொழிற்முயற்சியாண்மை மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவுகளுக்கு கொவிட்-19 தொற்றுப் பரவல் தொடர்பான நிதி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் 2020 மார்ச் மாதம் முதல் கவனம் செலுத்தியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான நிதித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் எவ்விதமான உறுதி மொழியை தொடர்ந்து பேணியிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுய தொழிலில் ஈடுபடும் நபர்கள், வெளிநாட்டு நாணய வருமானமீட்டுவோர், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் போன்றன கடன் மீளச் செலுத்தலுக்காக இனங்காணப்பட்டனர். சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு பெருமளவு நிவாரணத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் காசோலை திரும்பல் கட்டண விலக்கழிப்புகள் மற்றும் கொடுப்பனவு நிறுத்தல் கட்டணங்கள் போன்றன அடங்கியிருந்தன. நிவாரணத் திட்டங்களின் அங்கமாக, வங்கியின் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களில் 58 சதவீதமானவர்களுக்கு கடன் நிவாரணத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கொவிட்-19 நிவாரண கடன் திட்டத்தின் கீழ் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு 1.3 பில்லியன் ரூபாய் பெறுமதியான தொழிற்படு மூலதன கடன்களை வழங்கியிருந்தது. பாதிக்கப்பட்ட தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி உடனடியாக கடன் அட்டை நிலுவைத் தொகைகள் நீடிப்புகள் மற்றும் சகல கடன்கள் மற்றும் குத்தகைகள் போன்றவற்றுக்கு இரு மாத கால மீளச் செலுத்தல் நீடிப்புகள் வழங்கப்பட்டன. தனிநபர் வங்கியியல் நிவாரணத் திட்டத்தில் சகல கடன்களுக்குமான தகைமையின் பிரகாரம் கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலம் மற்றும் ஆகக்குறைந்த கட்டண செலுத்தும் நிவாரணம் மற்றும் கட்டண விலக்கழிப்புகள் அடங்கலாக கடன் அட்டைகளுக்கான நிவாரணம் போன்றன வழங்கப்பட்டிருந்தன. 2020 ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான கடன் நிவாரணம் சகல பிரிவுகளிலும் நீடிக்கப்பட்டதுடன், இனங்காணப்பட்ட துறைகளில் வியாபார செயற்பாடுகள் தொடர்ச்சியான மீண்டெழுவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தது.
யூனியன் வங்கியின் டிஜிட்டல் பண முகாமைத்துவ தீர்வான BizDirect தொடர்ச்சியாக அதன் கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அவசியமான திரள்வு முகாமைத்துவ வினைத்திறனை உறுதி செய்திருந்ததுடன், வங்கிக்கு CASA மற்றும் கட்டண அடிப்படையிலான வருமானத்தையும் உறுதி செய்திருந்தது. டிஜிட்டல் தீர்வுகளுக்கான அதிகரித்துச் சென்ற கேள்வியின் காரணமாக, பல புதிய கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கியியல் வாடிக்கையாளர்கள் 2020 இல் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர். யூனியன் வங்கி BizDirect வங்கியில் கொடுக்கல் வாங்கல் சிறப்புக்காக, ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல் நிதியியல் விருதுகள் 2020 இல், “இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. சிறியளவு வங்கியியல் வியாபாரம் என்பது CASA கையகப்படுத்தல், வைப்பு பகிர்வு மற்றும் கடன் அட்டை இலாகா வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மேம்பட்டிருந்தது. சொப்பிங் மீது விலைக்கழிவுகள், உணவகங்கள் மற்றும் e-வணிக கட்டமைப்புகள் போன்றவற்றில் 0% வட்டியில்லா தவணை முறை கொடுப்பனவுத் திட்டங்களுடன் நோக்குடைய வாழ்க்கை முறை சேமிப்புகள் அட்டைதாரர்களுக்கு வங்கி தொடர்ச்சியாக பெறுமதியை வழங்கியிருந்தது.
தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு, முடக்கநிலைகள், ஊரடங்கு நிலைகள் மற்றும் பிராந்திய தனிமைப்படுத்தல்கள் போன்றன அமுல்ப்படுத்தப்பட்ட போதிலும், வங்கி தொடர்ந்தும் தனது தந்திரோபாய வியாபாரத் தொடர்ச்சித் திட்டத்தைப் பின்பற்றி தடங்கலில்லாத வங்கிச் சேவைகளை தனது கிளைகள், ATM இயந்திரங்கள் மற்றும் இதர வசதிகளினூடாக வழங்கியிருந்தது. வங்கியின் ஒன்லைன் பாங்கிங் போர்டல் மற்றும் மொபைல் வங்கிச் சேவை app ஆகியன 2020 ஆம் ஆண்டில் மேலும் மேம்படுத்தப்பட்டிருந்தன. இதனூடாக பரந்தளவு வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்தவாறே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
2020 நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது தாங்குதிறன் மற்றும் தொடர்ச்சியான வியாபார முன்னெடுப்பு போன்றவற்றினூடாக யூனியன் வங்கியை சிறந்த நிலையில் பேண முடிந்தது. சவால்கள் நிறைந்த சூழலில் பங்காளர்களின் ஈடுபாடுகளை பாதுகாத்திருந்தது. ஆரோக்கியமான திரள்வு நிலைகளைப் பேணி உறுதியான மூலதனச் சந்தையையும் கொண்டிருந்தது. இதனூடாக, பாரதூரமான சந்தைச் சூழல்களுக்கு நிலையாக முகங்கொடுத்திருந்தது. செம்மையாக்கங்கள் வழிமுறையை நாம் தொடர்ந்து பின்பற்றுவதுடன், 2021 ஆம் ஆண்டில் தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவோம். இதை நாம் மீளமைத்துள்ளதுடன், உறுதியான வளர்ச்சியை தொடர்ந்தும் எய்தி, எமது பிரதான வலிமைகளை இதற்கு பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்கும். புதிய வழமையில் எமது வாடிக்கையாளர்களின் மற்றும் ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து செயலாற்றுவது என்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago