2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

யூனியன் வங்கியின் All-in-One தீர்வாக UBGO

Freelancer   / 2025 ஏப்ரல் 11 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது செயற்பாடுகளை மேம்படுத்தி மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் யூனியன் வங்கி, தனது டிஜிட்டல் செயற்பாடுகளை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், தனது மொபைல் வங்கியியல் கட்டமைப்பான UBgo இல் பல புதிய உள்ளம்சங்களை உள்ளடக்கி அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வங்கியியல் அனுபவத்தை எளிமைப்படுத்தி மேம்படுத்தும் வகையிலும், பணப்பரிமாற்றங்கள், சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளை உடனுக்குடன் ஆரம்பித்தல், வேகமான QR கொடுப்பனவுகள், நிர்வகிப்பு மற்றும் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள், கார்ட்கள் மற்றும் பல வங்கிசார் அம்சங்களை  சுலபமாக மேற்கொள்ளக்கூடிய வகையில் UBgo வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மெருகேற்றங்களினூடாக தற்போது app இல் வீடியோ KYC வசதி வழங்கப்பட்டு, கிளைக்கு விஜயம் செய்யாமல், கணக்கை ஆரம்பித்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கியுடன் சுலபமாக தொடர்புகளை பேணக்கூடிய வகையில் இந்த app இனூடாக Call-Back கோரிக்கைகளை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வங்கியியல் பிரிவின் உப தலைவர் மனீஷ பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் புத்தாக்கங்கள் மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றினூடாக எமது வாடிக்கையாளர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை வங்கி தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமுள்ளது. அதற்கமைய சிறந்த டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை வழங்குவது எமது முன்னுரிமை. UBgo மொபைல் வங்கிச்சேவை app இல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மெருகேற்றங்களினூடாக, எதிர்பார்க்கப்படும் இளம் வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு வெற்றிகரமாக சென்றடைய வங்கிக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், எமது ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வங்கியியல் அனுபவத்தையும், பெறுமதி சேர்ப்பையும் வழங்கவும் முடியும். ISO 27001:2022 சான்றிதழினால் கௌரவிக்கப்பட்ட முதலாவது வங்கியாக யூனியன் வங்கி திகழ்வதுடன், தரவு பாதுகாப்பில் உயர் நியமங்களை பேணுகின்றமைக்காக  Payment Card Industry Data Security Standard (PCI DSS) v4.0 ஐயும் கொண்டுள்ளது. app இனால் பாதுகாப்பான biometric உறுதிப்படுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வங்கியியல் அனுபவத்தைக் கொண்டிருக்க முடியும். மாற்றமடைந்து வரும் நுகர்வோரின் தேவைகள் மற்றும் சந்தை போக்குகளுக்கமைய எதிர்காலத்துக்கு தயாரான டிஜிட்டல் தீர்வாக இந்த app தொடர்ந்தும் மெருகேற்றப்படும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X