Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், தனது சிறந்த செயற்பாட்டாளர்களின் சிறப்பான செயற்பாடுகளை கொண்டாடியிருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர்களின் சிறப்பாக செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் ஊடாக இந்த கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் போன்ற பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றும் நிறுவனத்தின் ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் அமைந்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் தமது விற்பனை செயலணியினரின் வெற்றிகரமான செயற்பாட்டைக் கொண்டாட வழிகோலுவதுடன், சகல ஆலோசகர்களுக்கும் சிறப்பாக செயலாற்ற ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 45 க்கும் அதிகமான வெற்றியாளர்களை நிறுவனம் கௌரவித்திருந்தது. இவர்களுக்கு பரந்தளவு சொகுசு மோட்டார் கார்கள், பணப் பரிசுகள் வாழ்க்கைமுறை வெகுமதிகள் மற்றும் வியாபார அபிவிருத்தி வெகுமதிகள் மற்றும் கௌரவிப்பு வெகுமதிகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.
பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது எமது இலக்காகும். யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான ஆதரவை எமது ஆலோசகர்களுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். அவர்களின் சாதனைகள் தொடர்பில் நாம் பெருமை கொள்வதுடன், நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் போன்றவற்றுக்கு தொழிற்துறைசார் நியமங்களை நிறுவியுள்ளனர்.” என்றார்.
பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் என்பது, எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக அயராது உழைத்து, சிறந்த செயற்பாடுகளை பதிவு செய்யும் ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கழகத்தின் சில அங்கத்தவர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் தமது திறமைகளை வியாபித்து வருவதை காண முடிந்துள்ளதுடன், நிறுவனத்தின் சேவைத் தரத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்குகின்றனர். எமது ஆலோசகர்களுக்கு பயிற்சிகள் மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புகளை வழங்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், தொழிற்துறையில் தமது அடையாளத்தை மேலும் வலிமைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றோம். அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 54.7 பில்லியனையும், 2022 செப்டெம்பர் மாதமளவில் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
50 minute ago
52 minute ago