Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
S.Sekar / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸின் ஊழியர்களுக்கான வருட இறுதி கொண்டாட்ட நிகழ்வு Shine Like a Diamond எனும் தலைப்பில் அண்மையில் கொழும்பு BMICH இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில், யூனியன் அஷ்யூரன்ஸ் குடும்பத்தார் அனைவரும் கலந்து கொண்டு, மனம் மறவாத இனிய மாலைப் பொழுதை அனுபவித்திருந்தனர்.
கடந்த ஆண்டுகளில் யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களின் சிறந்த செயற்பாடுகளை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் பாராட்டியிருந்ததுடன், அதற்காக இந்நிகழ்வுக்கு ‘Shine Like a Diamond’எனும் நாமமும் சூட்டப்பட்டிருந்தது. சவால்கள் நிறைந்த ஆண்டில் இயங்கிய போதிலும் அணியினரால் சிறந்த வினைத்திறன் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சம்பியன்களால் யூனியன் அஷ்யூரன்ஸ் கீர்த்தி நாமம் உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல குறிப்பிடப்பட வேண்டிய சாதனைகளை பதிவு செய்துள்ளனர். அவர்களின் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பில் நான் மிகவும் பெருமை கொள்கின்றேன்.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் அனீஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “அதன் பிரத்தியேகமான அம்சங்களின் காரணமாக, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பெறுமதியை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த வருடாந்த கொண்டாட்ட நிகழ்வு அமைந்துள்ளது. கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் பல வேளைகளில் இருப்பிடத்திலிருந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதால் நீண்ட இடைவேளைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததால், இந்த நிகழ்வு விசேடமானதாக அமைந்திருந்தது.” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியீட்டும் நிறுவனமாகும். நிறுவனத்தின் ஊழியர்கள் கொண்டிருக்கும் முழுத் திறனை அவர்களால் உணரக்கூடியதாக இருக்கும். நிறுவனம் தனது ஊழியர்களை பெறுமதியாக நடத்துவதுடன், பல்வேறு வழிகளில் வெகுமதியளிக்கின்றது. பயிலல் மற்றும் தம்மை விருத்தி செய்து கொள்வதற்கு அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதாக அமைந்துள்ளது. நேர்த்தியான பணி-வாழ்க்கை சமநிலைக்காக, ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.” என்றார்.
25 வருடங்களாக நிறுவனத்தில் நீண்ட கால சேவைகளை வழங்கும் 26 ஊழியர்களை கௌரவிக்கப்பட்டிருந்தமை இந்த நிகழ்வின் பிரதான அங்கமாக அமைந்திருந்தது. இதனூடாக நிறுவனம் தனது ஊழியர்களுடன் உறுதியான பிணைப்பையும், ஒன்றிணைவையும் மற்றும் நோக்கத்தையும் பகிர்ந்துள்ளது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடியான காலப்பகுதியில் ஊழியர்கள் ஆற்றியிருந்த பங்களிப்புக்காக இந்த மாலைப் பொழுது சிறந்த இசை நிகழ்வுகளுடன் களிப்பூட்டும் செயற்பாடுகளைக் கொண்டு மகிழ்விக்கும் வகையில் அமைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago