Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருஹுனு ஹொஸ்பிட்டல் (பிரைவேட்) லிமிட்டெட் தனது மாத்தறையில் அதன் சமீபத்திய மருத்துவ நிலையத்தை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற திறப்பு விழா வைபவத்தில் இவ்வைத்திய நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டதுடன், பணிப்பாளர் சபைத் தலைவர் தீபால் விக்கிரமசிங்க மற்றும் இணைத் தலைமை நிர்வாக அதிகாரிகளான ரவீன் விக்கிரமசிங்க மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அதிநவீன வசதிகள் கொண்ட இந்த உயரிய மருத்துவ மையம் உயன்வத்தையில், மக்கள் மிகவும் எளிதில் சென்று வரக்கூடிய வகையில் மிகவும் சௌகரியமான இடத்தில் அமைந்துள்ளது. அண்மைக் காலங்களில் மாத்தறையில் உள்ள நோயாளர்களால் தமக்கு உயரிய சுகாதார சேவைகள் தேவையாகவுள்ளன என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. நோயாளர்கள் இந்த மருத்துவ நிலையத்தில் பலவிதமான மருத்துவ சேவைகளைப் பெறலாம். இங்கு வைத்தியரைச் சந்தித்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பத்து அறைகள், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே, Ruhunu Hospital Diagnostic (மருத்துவ ஆய்வுகூடம்), பார்மசி, Echocardiogram, Ultrasound Scan, PCR மற்றும் Rapid Antigen சோதனை போன்ற பல்வேறு சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன.
அனைத்து நோயாளர்களுக்கும் உயரிய தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ரு{ஹனு ஹொஸ்பிட்டல்ஸின் அர்ப்பணிப்பின் நெறிமுறைகளை இந்த மருத்துவ சிகிச்சை வசதி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மருத்துவ மையத்தில் மிகவும் திறமையான மற்றும் தொழில்முறை ஆளணி பணியமர்த்தப்பட்டு, மிக உயர்ந்த தரமான சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை, உயன்வத்தையில் உள்ள புதிய மையத்தில் வைத்தியரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறுதல், MRI ஸ்கேன், catheterization ஆய்வுகூடம் போன்று கராப்பிட்டியில் உள்ள ருஹுனு ஹொஸ்பிட்டல் வழங்கும் சேவைகளுக்கும் நோயாளர்கள் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.
ருஹுனு ஹொஸ்பிட்டல்ஸின் மாத்தறை மருத்துவ நிலையத்தை ஆரம்பித்து வைப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த இணைத் தலைமை நிர்வாக அதிகாரியான ரவீன் விக்கிரமசிங்க, 'மாத்தறை வாசிகளின் அதிகரித்து வரும் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சிகிச்சை வசதியை நாங்கள் திறந்துள்ளோம். தென் மாகாணத்திற்கு சிறந்த மருத்துவ சுகாதார சேவையை வழங்குவதில் ருஹுனு வைத்தியசாலையின் 26 வருட கால களங்கமற்ற சாதனையுடன், மாத்தறையிலுள்ள நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளுக்கு சேவை செய்ய நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். இந்த புதிய முயற்சியை 2022 ஆம் ஆண்டில் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் நீண்ட கால அடிப்படையில் இதனை 100 படுக்கையறைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்,' என்று குறிப்பிட்டார்.
'கராப்பிட்டியை மையமாகக் கொண்டு தென் மாகாணத்தின் ஏனைய முக்கிய நகரங்களுக்கும் எமது சேவைகளை விரிவுபடுத்துகிறோம்,' என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
26 minute ago