Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 15 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்தின் இரு கூட்டுறவு சங்கங்களுக்கு “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் மானிய உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் தலைவர் ஏ.என்.மனுநீதி மற்றும் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.கேதீஸ்வரன் ஆகியோருடன் கைச்சாத்திட்டிருந்தார்.
இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஜப்பானிய அரசாங்கம் மொத்தமாக 103,924 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக ரூ. 32 மில்லியன்) வழங்கியுள்ளது. அதனூடாக வடக்கு மாகாணத்தில் மருத்துவ மற்றும் கால்நடை வசதிகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவது என்பது இலங்கைக்கான ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையில் பிரதானமாக கவனம் செலுத்தப்படுகின்றது. நாட்டில் சமாதான கட்டியெழுப்பல் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் உதவிகளை வழங்குகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இது போன்ற பல்வேறு உதவித் திட்டங்களினூடாக இதை முன்னெடுக்கின்றது.
தூதுவர் மிசுகொஷி குறிப்பிடுகையில், சமூக சேவை உட்கட்டமைப்பு மேம்படுத்தல், தனிநபர்களுக்கு பயனளித்தல் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் காணப்படும் பிரதான தொழிற்துறைகளின் நிலைபேறாண்மை போன்றவற்றுக்கு இந்த திட்டங்களினூடாக மேற்கொள்ளப்படும் பங்களிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார். மேலும், வட மாகாணத்திலுள்ள பரந்த இன மற்றும் மத குழுக்கள் மத்தியில் இதுபோன்ற செயற்பாடுகளினூடாக சுபிட்சம் ஊக்குவிக்கப்படும் எனவும், அழகிய நாட்டின் நீண்ட கால உறுதித் தன்மை மற்றும் சுபிட்சத்துக்கு இது முக்கியமானது என்பதையும் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவிய யுத்தத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட பிரதேசமாக கிளிநொச்சி அமைந்திருந்ததுடன், இடம்பெயர்வுகள் காரணமாக, மனிதர்களைப் போன்று கால்நடைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. கடினமான சூழ்நிலையிலும், கிளிநொச்சியை சேர்ந்த விவசாயிகள், தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், விவசாய செயன்முறைகளை நவீனமயப்படுத்துவதிலும் அக்கறை கொண்டுள்ளனர். பால் சேகரிப்பு மற்றும் சிறியளவு பால் பெறுமதி சேர்ப்பு பதப்படுத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள இந்த சங்கத்தினூடாக, இந்தத் திட்டம் பூர்த்தியடைந்ததும், பால் சேகரிப்பை ஆகக்குறைந்தது 80% இனால் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை ஆரம்பிக்கவும், ஜப்பானிய தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தவும் உதவியிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கு நன்றி தெரிவிக்கின்றோம். தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கியிருந்தமை போன்றவற்றுக்காக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், கூட்டுறவு விருத்தி திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் போன்றவற்றின் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.”
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago