Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூன் 26 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மது அகற்றப்பட்ட வைன் வகைகளை EDENVALE என்ற நாமத்தில் Favourite International மற்றும் Austrade Sri Lanka ஆகியன கூட்டிணைந்து அறிமுகப்படுத்துவது தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மது அகற்றப்பட்ட வைன் வகைக்கான சர்வதேச சந்தை துரிதமாக வளர்ச்சி கண்டு வருவதுடன், ஆரோக்கியமான, மது அகற்றப்பட்ட பானவகைத் தெரிவுகளுக்கான கேள்வி நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வருகின்றமையே இதற்கான காரணமாகும்.
ஒரு முன்னணி அவுஸ்திரேலிய வர்த்தகநாமமான EDENVALE என்பது இப்போக்கில் முன்னிலை வகித்து வருவதுடன், சுவை அல்லது தரத்தில் எவ்விதமான மாற்றங்களுமின்றி மது அகற்றப்பட்ட உயர் ரக வைன் வகையை வழங்கி வருகின்றது.
Favourite International மற்றும் Austrade ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டாண்மை, மூலோபாய விநியோக வளர்ச்சி மற்றும் நுகர்வோரை இது தொடர்பில் அறியச் செய்யும் முயற்சிகள் மூலமாக, இப்பிரிவில் முன்னணி ஸ்தானத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மது அகற்றப்பட்ட வைன் வகை குறித்து Alcobev and FMCG, Favourite International ஆகியவற்றின் பணிப்பாளர்/தலைமை அதிகாரியான ராஜன் துஷியந்தன் கருத்து வெளியிடுகையில்,
“மது அகற்றப்பட்ட வைன் வகையானது வழக்கமான வைன் நடைமுறையுடன் ஆரம்பிப்பதுடன், தொடர்ந்து அதிலுள்ள மதுக்கலவையை பெரும்பாலும் அல்லது முற்றாக அகற்றுகின்ற நடைமுறை மிகக் கவனமாக முன்னெடுக்கப்படுகின்றது. முதற்படியாக, தரமான வைனை தெரிவு செய்து, வைனில்அடங்கியுள்ள பிரதான சுவை வடிவங்கள் மற்றும் சுவையை எவ்விதமான மாற்றமுமின்றி பேணியவாறு அதிலுள்ள மதுக்கலவையைப் பிரித்து அகற்றும் வடிகட்டல் நடைமுறை இடம்பெறுகின்றது.
இதன் போது வைனின் பழரச, புத்தம்புதிய மற்றும் மென்தன்மை அவ்வாறே காணப்படும். நடைமுறையின் தொடக்கத்திலிருந்தே மதுவை உள்ளடக்காத மதுக்கலவையற்ற வைன் வகையைப் போலன்றி, மது அகற்றப்படுகின்ற வைன் வகையானது பாரம்பரியமான வைன் வகையின் செழுமையான சுவை வடிவங்கள் மற்றும் வாசனைகளை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்கின்றது. reverse osmosis போன்ற தொழில்நுட்பத்தை பிரயோகித்து மது அகற்றப்படுவதுடன், உயர் அமுக்க முறையில் வைனின் அத்தியாவசிய மூலக்கூறுகளிலிருந்து மதுவும், நீரும் வேறாகப் பிரிக்கப்படுகின்றன.
அதன் பின்னர் நீரிலிருந்து மது வடிகட்டப்பட்டு, மது அகற்றப்பட்ட நீரானது வைனின் ஏனைய பாகங்களுடன் மீளிணைக்கப்படுவதால், இது 0.5% க்கும் குறைவான மதுச்செறிவு கொண்ட தயாரிப்பாக எமக்கு கிடைக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய வாணிப மற்றும் முதலீட்டு ஆணைக்குழுவின் (Australian Trade and Investment Commission - Austrade) வாணிப மற்றும் முதலீட்டு ஆiணையாளரும், தூதுவருமான (வர்த்தகம்) ஜோன்-சௌத்வெல் கருத்து வெளியிடுகையில்,
“அவுஸ்திரேலிய தயாரிப்பான மது அகற்றப்பட்ட வைன் வகை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதைக் கண்டு நாம் பெருமை கொள்கின்றோம். பாரம்பரிய வைன்கள் தருகின்ற அதே சுவையை, மது அகற்றப்பட்ட வடிவத்தில் சுவைத்து மகிழ்வதை இலங்கையிலுள்ள நுகர்வோர் நிச்சயமாக வரவேற்பர் என உறுதியாக நம்புகின்றோம். மது அகற்றப்பட்ட பான வகைகளை தயாரிக்கும் புத்தாக்கத்தில் அவுஸ்திரேலிய வணிக நிறுவனங்கள் முன்னிலை வகித்து வருகின்றன. இலங்கைக்கான அவுஸ்திரேலிய ஏற்றுமதிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலிய உயர் ரக பான வகைகள் போன்றவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை அவுஸ்திரேலிய வாணிப மற்றும் முதலீட்டு ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.
மது அகற்றப்பட்ட வைன் வகைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக Edenvale பான வகை காணப்படுவதுடன், Chardonnay, Sauvignon Blanc, Shiraz, மற்றும் Cabernet Sauvignonஉள்ளிட்ட விரிவான தயாரிப்பு வரிசையை வழங்கி வருகின்றது. காப்புரிமை பெற்ற spinning cone தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தனது மதுவகைகளின் அதே சிறப்புத் தன்மையை பேணுகின்றவாறு வைன் வகையை உற்பத்தி செய்யும் தனது தொழில்நுட்பங்களுக்கு Edenvale மீள்வரைவிலக்கணம் வகுத்து வருகின்றது.
Favourite Group தலைவர் குமார் மிரச்சண்டாணி அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,
“மதுக்கலவையற்ற பான வகைகளுக்கான கேள்வி உலகளாவில் அதிகரித்து வருவதுடன், இப்பிரிவானது 2023 முதல் 2027 வரை 7% என்ற கூட்டு வருடாந்த வீதத்தில் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரோக்கியம் மற்றும் நலனை நோக்கிய உலகளாவிய மாற்றம், புதிய சமூக நிகழ்வுகள், சமூகப் பொறுப்புணர்வு மீதான கவனம் ஆகியனவே இவ்வளர்ச்சிக்கான உந்துசக்தியாக காணப்படுகின்றன. விருந்தோம்பல் மற்றும் சில்லறை வியாபாரத் துறைகளைப் பொறுத்தவரையில் மதுக்கலவையற்ற பான வகைகள் பான வகை பட்டியலில் ஒரு பிரதான பானமாக மாறி வருகின்றன. இலங்கையில் இப்பிரிவுக்கு மகத்தான வளர்ச்சிவாய்ப்புக்கள் உள்ளதாக Favourite International எண்ணுகின்றது.
நாட்டிற்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், உள்நாட்டில் மக்கள் தமது ஆரோக்கியம் தொடர்பில் தொடர்ச்சியாக அதிகளவில் அக்கறை கொண்டுள்ளமையாலும் EDENVALE மது அகற்றப்பட்ட வைன் வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு இதுவே மிகவும் சரியான தருணமாகும்,” என்று குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உயர் ரக பான வகைகளை இறக்குமதி செய்வதில் செழிப்பான வரலாற்றை Favourite International கொண்டுள்ளது. Austrade இன் அனுசரணையுடன், Edenvale உடனான இப்புதிய கூட்டாண்மை இலங்கை நுகர்வோர் மத்தியில் பரிமாண வளர்ச்சி கண்டு வருகின்ற தெரிவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில், புத்தாக்கமான தயாரிப்புக்களை அறிமுகம் செய்வதில் Favourite International இன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
Favourite International தொடர்பான விபரங்கள்
1996 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Favourite International, உலகெங்கிலுமிருந்து வைன் வகை, சாம்பெய்ன் வகை, மது வகை (liqueurs, and spirits) ஆகியவற்றை இறக்குமதி செய்து, விநியோகித்து, சில்லறை வியாபாரம் செய்வதில் இலங்கையில் முன்னணி வகித்து வருகின்றது. பரந்த வகை மற்றும் விசாலமான சர்வதேச வலையமைப்பு ஆகியவற்றுடன், பல்வேறு துறைகள் மத்தியில் நம்பிக்கைக்குரிய பான வகை தீர்வுகள் வழங்குனராக இந்நிறுவனம் திகழ்ந்து வருகின்றது. 1941 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு, உணவு மற்றும் பான வகை, ஆதனம், நிதியியல் தற்றும் மூலோபாய முதலீடுகள் அடங்கலாக பல்வேறு வர்த்தகத்துறைகளில் ஈடுபட்டுள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட Favourite Group இன் அங்கமே Favourite International ஆகும்.
Austrade Sri Lanka தொடர்பான விபரங்கள்
அவுஸ்திரேலிய வாணிப மற்றும் முதலீட்டு ஆணைக்குழு (Australian Trade and Investment Commission - Austrade), வணிகங்களுக்கு தரமான வாணிப மற்றும் முதலீட்டுச் சேவைகளை வழங்கி அவுஸ்திரேலியாவின் சுபீட்சம் வளர உதவுவதுடன், அவுஸ்திரேலியாவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, அவுஸ்திரேலியாவில் கிடைக்கும் கல்விச்சேவைகளை உலகெங்கிலும் பிரபலப்படுத்தி, ஊக்குவித்து வருகின்றது. தாயகத்திலும், உலகளாவிலும் 100 க்கும் மேற்பட்ட அலுவலகங்களுடன், அவுஸ்திரேலிய வணிகங்கள் பரந்துபட்ட ஏற்றுமதி விளைவுகளை அடையப்பெற்று, வளர்ச்சிக்கு தேவையான முதலீடுகளை வெற்றி கொள்வதற்கு Austrade உதவி வருகின்றது. வாணிபம் மற்றும் முதலீட்டுக்கு உதவுகின்ற அரசாங்க திட்டங்களையும் Austrade வழங்கி வருகின்றது. அரசாங்க கொள்கைகளை அறிவிப்பதற்காக வர்த்தகரீதியான அறிவுகளை நாம் பகிர்ந்து வருகிறோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
5 hours ago