2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மட்டக்களப்பில் தொழிற்பேட்டை நிறுவ அனுமதி

Gavitha   / 2020 நவம்பர் 09 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

துணி பதப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பகுதியில் 275 ஏக்கர் காணியில் தொழிற்பேட்டை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  தொழிற்துறைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

மூலோபாய அபிவிருத்தித் திட்டம் என இந்த வலயத்தை பிரகடனம் செய்யவும் அமைச்சரவை அனுமதித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கலாநிதி. ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இந்த வலயத்தை நிறுவுவது என்பது தொழிற்துறை அமைச்சினால் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுவதுடன், இந்த பேட்டையை நிறுவுவதற்கு அவசியமான 275 ஏக்கர் காணிப்பகுதியை ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கைகளை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மேற்கொள்ளும். இந்த வலயத்தில் முதுலீடுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு முதலீட்டு சபையினூடாக முதலீட்டுச் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் துணி பதப்படுத்தல் வலயமொன்றை நிறுவுவது என்பது பல ஆண்டுகளாக ஆடைத் தொழிற்துறையின் இலக்காக அமைந்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள இந்தத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்த நடவடிக்கை உதவியாக அமைந்திருக்கும் என நிபுணர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள தாக்கத்திலிருந்து மீண்டெழுவதற்கும் உதவியாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரேரிக்கப்பட்ட வலயத்துக்கான காணி, மின்சாரம் மற்றும் நீர் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில், முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களை அழைத்து வருவது தொடர்பில் கடந்த ஆண்டு இலங்கை ஆடை ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

GSP+ வரிச்சலுகை காரணமாக ஊக்குவிக்கப்படும் பெறுமதி சேர் நடவடிக்கைகள் காரணமாக, புதிய தொழிற்துறைகளை நிறுவி, அதனூடாக புதிய தொழில் வாய்ப்புகளை நாட்டில் உருவாக்குவது தொடர்பில் தொழிற்துறை நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் பிரகாரம், பிரேரிக்கப்பட்டுள்ள ஆடை வலயத்தில் ஆடை உற்பத்தியுடன் தொடர்புடைய பல்வேறு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தொழிற்சாலைகள் நிறுவப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .