Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங், தனது ‘தங்கக் கடன்’ பிரிவினூடாக, தங்கக் கடன் அடகுச் சேவையைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கை -யாளர்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கி, குறைந்த வட்டி வீதத்தில் ‘தங்கக் கடன்’ பெற்றுக் கொடுப்பதைத் தற்போது ஆரம்பித்துள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் ‘தங்கக் கடன்’ வசதியினூடாக 24 கெரட் தங்கப் பவுண் ஒன்றுக்கு, 70,000 ரூபாய் வரை முற்பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதுபோன்று, இலங்கையில் தங்கக் கடன் அடகு சேவைகளை வழங்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டி வீதங்களையும் பீப்பள்ஸ் லீசிங் பேணுகின்றது.
அதாவது பீப்பள்ஸ் லீசிங் ‘தங்கக் கடன்’ அடகுச் சேவையினூடாக ஆயிரம் ரூபாய் முற்பணத்துக்கு நாளொன்றுக்கு 35 சதம் எனும் குறைந்த வட்டி அடிப்படையில் வருடாந்தம் 12.5 சதவீத வட்டியை அறவிடுகின்றது.
இதற்கு மேலதிகமாக, பீப்பள்ஸ் லீசிங் ‘தங்கக் கடன்’ சேவையில் எவ்வித மறைமுகக் கட்டணங்களும் இல்லை என்பதுடன், மேலும், அடகுக்கான முழுத் தொகையும் உங்கள் கைகளில் கிடைப்பதுடன், உங்கள் வசதி கருதி, தங்கக் கடன் அடகுச் சேவைகளை வழங்கும் சகல கிளைகளும் சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்.
அத்துடன் வழங்கப்படும் ஏனைய விசேட வசதிகளில் ஒரு வார காலப்பகுதிக்கு அடகு வைக்கும் வசதி, தங்க ஆபரணங்களுக்கு இலவச காப்புறுதி, தெரிவு செய்து கொள்ள ஏராளமான அடகு முறைகள் (1 மாதம், 3 மாதம், 6 மாதம், 12 மாதம்) காணப்படுகின்றமை, பகுதிகளாக மீளச் செலுத்தக்கூடிய வசதி, முன்னறிவித்தலின்றி தங்க நகைகளை மீட்டுக் கொள்ளக்கூடிய வசதி, வட்டித் தொகையைச் செலுத்தி, கடன் தொகையைப் புதுப்பித்துக் கொள்ளும் வசதி, துரிதமானதும் நட்பானதுமான வாடிக்கையாளர் சேவை போன்றனவும் வழங்கப்படுகின்றன.
அக்குரெஸ்ஸ, பதுளை, பத்தரமுல்ல, தம்புள்ளை, கம்பளை, கிரான்ட்பாஸ், ஹட்டன், ஹொரணை, யாழ்ப்பாணம், கண்டி, கந்தளாய், கிளிநொச்சி, கிரிந்திவெல, குருநாகல், மதவாச்சி, மாத்தறை, மாத்தளை, மீரிகம, கல்கிசை, நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, நுகேகொட, நுவரெலியா, புறக்கோட்டை, தங்காலை, திருகோணமலை, வவுனியா, வெள்ளவத்தை, அம்பாறை, கொழும்பு 7 ஆகிய பீப்பள்ஸ் லீசிங் கிளைகள் 31 இல் தங்கக் கடன் அடகு சேவைப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago