Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
பல தசாப்த காலமாக பேணப்பட்டு வந்த பொருளாதார சுதந்திரத்தை கட்டுப்படுத்தி, அதனூடாக இலங்கை ரூபாயின் மதிப்பை சீரழிப்பதாக சர்வதேச போக்குகள், நிலைவரங்கள் குறித்து கணிக்கும் சர்வதேச அமைப்பான பெல்வெதர் அறிக்கை வெளியிட்டுள்ளது. விசேட ஈடுபாடுகள் மற்றும் அரசாங்க அனுகூலங்களுக்காக பொது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு கட்டுப்பாட்டான நிலையாக தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார இறுக்கமான சூழலை அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்களின் வினைத்திறனற்ற கொள்கைகள், வீழ்ச்சியுடனான சந்தைகள், உறுதியற்ற தீர்மானங்கள் போன்றவற்றின் காரணமாக, ஆட்சியிலுள்ளவர்கள் பொது மக்களிடமிருந்து அறவிடப்பட்ட வரிப் பணங்களையும், சேமிப்புகளையும் முறையற்ற வகையில் ஒதுக்கீடு செய்வதற்கு வழிகோலியுள்ளதுடன், தூர நோக்கற்ற கொள்கையின் காரணமாக, விரைவில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதீட்டு துண்டு விழும் தொகையை சீராக்கம் செய்வதற்கு, இலங்கை மத்திய வங்கி தொடர்ச்சியாக நாணயத்தை அச்சிடும் பணிகளை முன்னெடுப்பதுடன், புற நிகழ்வொன்றில் சடுதியான நிறுத்தமொன்றை நோக்கிய நிலைக்கு இலங்கை பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதாரத் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில், இந்த இடர் நிலையிலிருந்து மீள்வதற்கு பொது மக்கள் மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் பெருமளவில் எவ்வாறான பங்களிப்பையும் மேற்கொள்ள முடியாத ஒரு சூழல் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தின் முறிகள் மற்றும் அரசாங்கத்தின் பணம் (ரூபாய்) ஆகிய இரண்டுமே நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. இலங்கையில் மக்களின் பணம் எனும் ஒரு நிலை இல்லை அத்துடன் நாணய போட்டிகரச் சூழலும் இல்லை –மாறாக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்படும் நாணயச் சூழலே காணப்படுகின்றது.
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக தனியார் துறை முதலீட்டை ஊக்குவிப்பது என்பது உண்மையில் சிறந்த தந்திரோபாயமாகும். முன்னைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த சில சம்பள உயர்வுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை தனது புவியியல் அமைவிட அனுகூலத்தை முறையாக பயன்படுத்தினால், பல நாடுகளை விட உயர்வான வளர்ச்சியை இலங்கையால் எய்தக்கூடியதாக இருக்கும். இதையே பழங்கால அரசர்களும் மேற்கொண்டனர். அவ்வாறான நடவடிக்கைகளினூடாகவே பாரிய நினைவுச்சின்னங்களை நிர்மாணித்திருந்தனர்.
நீண்ட கால வளர்ச்சிக்கு, சமூகத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அரசாங்க கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதுடன், விசேட தரப்பினர் மீது காண்பிக்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும்.
இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து சீரான நிதிக் கொள்கையை கொண்டிருக்கவில்லை. மிதக்கும் நாணயக் கொள்கைகளில் பெருமளவில் தங்கியிருந்தது.
தொடர்ச்சியாக நாணயத்தை அச்சிடுவது என்பது நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்யும் என்பது பாரம்பரிய பொருளாதார நிபுணர்கள் என்பதை விட சாதாரண குடிமகனினாலும் கற்பனை செய்து பார்க்கக்கூடிய ஒரு விடயமாகும்.
இந்த நிலை சீராக்கப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் அமெரிக்க டெலாருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை 185 ஆக பேண எதிர்பார்க்கின்றது. இது தவறில்லை. நாணய மாற்றுப் பெறுமதியொன்றை இலக்கு வைப்பது என்பது எளிமையான நாணயக் கொள்கைத் திட்டமாகும்.
ஆனாலும், தற்போது முன்னெடுக்கப்படும் நாணய அச்சிடல் மற்றும் திறந்த சந்தை செயற்பாடுகள் போன்றன முழுமையாக புறக் காரணிகளுக்கு எதிரானதாக அமைந்திருக்கும்.
கிழக்கு ஆசிய பிராந்தியத்திலுள்ள சகல சிறப்பாக செயலாற்றும் நாடுகளும், நாணயப் பெறுமதி இலக்கை தமது வளர்ச்சியடைந்து வரும் காலப்பகுதில் இலக்கு வைத்திருந்ததுடன், பல நாடுகள் தற்போதும் இந்த முறையை பின்பற்றுகின்றன. அவ்வாறு நாணயப் பெறுமதியை வெற்றிகரமாக இலக்கு வைப்பதற்கு, அதற்கு வழிகோலும் கொள்கை ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறான கொள்கைகள் எதுவுமின்றி, நாடு தற்போதும் சீரான நிலையில் காணப்படுகின்றது எனத் தெரிவிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, செயற்கை முறையில் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதை தளர்த்தி, சர்வதேச சந்தையின் ஓட்டத்துக்கு இலங்கையின் நாணயத்தையும் இயங்கச் செய்ய வேண்டும். அப்போது உள்நாட்டு நாணயம் சீரான முறையில் வீழ்ச்சியடைந்து உறுதி நிலையை எய்தும். அல்லது, தற்போது அமெரிக்க டொலருக்கு நிகராக 195 ரூபாயாக காணப்படும் இலங்கை ரூபாயின் பெறுமதி, சில மாதங்களில் 230-250 ரூபாய் எனும் நிலையை எய்துவதை தவிர்க்க முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
16 minute ago
21 minute ago