Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
S.Sekar / 2023 பெப்ரவரி 10 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ. பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரொல்ஃவ் பிலாசருக்கு, கடந்த ஆண்டில் பல சவால்களுக்கு மத்தியிலும், தூரநோக்குடைய தலைமைத்துவம், மீண்டெழுந்திறன் மற்றும் வளர்ச்சியுடனான-புத்தாக்க மனநிலை ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தமையை கௌரவிக்கும் வகையில், “2022 ஆம் ஆண்டின் வியந்து பாராட்டுதலுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி” எனும் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
The CEO சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு, அண்மையில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில், இலங்கையின் கூட்டாண்மைத் துறையையும் பொருளாதாரத்தையும் முன்நோக்கி கொண்டு செல்வதில் பங்களிப்பு வழங்கும் புகழ்பெற்ற நபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பிலாசரின் தலைமைத்துவத்தின் கீழ், தனது தந்திரோபாய வழியில் பவர் பெருமளவு மாற்றத்தை எதிர்கொண்டிருந்ததுடன், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிகளவு நாடப்படும் விநியோகப் பங்காளராகத் திகழும் இலக்குடன், புகழ்பெற்ற வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. நூற்றுக் கணக்கான இலங்கையர்களின் தெரிவுக்குரிய தொழில் வழங்குநராகத் திகழ்வதுடன், பல தசாப்த காலமாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற நிறுவனமாக திகழ்வதை தொடர்ந்தும் வழிநடத்திச் செல்லும் பொறுப்பை இவர் வகிக்கின்றார்.
ஏனையவர்களை பின்தொடரச் செய்யும் வகையில் பல செயற்திட்டங்களை அறிமுகம் செய்த பெருமையை பவர் தன்வசம் கொண்டுள்ளது. அண்மையில், இலங்கையில் முதன்முறையாக, பவர் நிறுவனத்தினால் அதன் சகல ஊழியர்களுக்கும் சிறுவர் ஆதரவு அனுகூலத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. சுவிஸ் பாரம்பரியத்துக்கமைய கட்டியெழுப்பப்பட்ட முன்னேற்றகரமான புத்தாக்கம் மற்றும் பெறுமதிக் கட்டமைப்புகளுடனான கூட்டாண்மை கீர்த்தி நாமத்தில் 125 வருட கால பூர்த்தியை கொண்டாடும் நிலையில், மாபெரும் தனியார் உர நிறுவனம் என்பது மட்டுமன்றி, இதர பல துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் நாமமாக பவர் திகழ்கின்றது.
இதன் பங்காளர்களில் Sandoz, Norvatis, Roche (Pharma), Omron, Nouvag, Medtronic (சத்திரசிகிச்சை மற்றும் நோய் இனங்காணல்), Johnson & Johnson, Nestle, Marico (நுகர்வோர்), Kluber Lubrication, Kisco, Datacolor (ஆடைகள் இயந்திர சாதனங்கள்), Elanco, Lonza, AgBiTech (விவசாயம்), மற்றும் Swiss Air Lines, Swiss Tours, Edelweiss, மற்றும் Ecole hôtelière de Lausanne (பிரயாணம் மற்றும் கல்வி) போன்றன அடங்கியுள்ளதுடன், வியாபார பங்காளர்களுடன் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் வியாபார உறவுகள் மேலும் வளர்ச்சியைப் பதிவு செய்த வண்ணமுள்ளன.
பவர் நிறுவனத்தைச் சேர்ந்த சக ஊழியர்களும், நிறுவனத்தினால் பேணப்படும் நம்பிக்கை, பெருமை, நீண்ட கால நட்புறவு மற்றும் களிப்பூட்டும் அம்சங்கள் நிறைந்த பணியிடக் கலாசாரத்தை வரவேற்கின்றனர். சகல ஊழியர்களுக்கும் தமது வெற்றிகரமான செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சியை உறுதியாக வெளிப்படுத்துவதுடன், நபர் ஒருவரின் பிரத்தியேக மற்றும் நிபுணத்துவ விருத்தியில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டு, புதிய வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் ஏற்கச் செய்வதற்கு ஆதரவளிப்பதுடன், பரஸ்பர மதிப்பு, பராமரிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை உறுதி செய்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளில் சிலதான தலைமைத்துவ பண்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் பவர் டோஸ்ட்மாஸ்டர் கழகம் ஆகியன சிலவாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago