2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பரந்தளவு வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க AMF திட்டம்

S.Sekar   / 2021 மார்ச் 22 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பழமையான இரு நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களான அசோசியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சி (AMF) மற்றும் ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சி (AFC) ஆகியன ஒன்றிணைந்து, இலங்கையின் வளர்ந்து வரும் நிதிச் சேவைகள் துறையில் எழும் தேவைகளை நிவர்த்தி செய்ய முன்வந்துள்ளன. தற்போதைய சர்வதேச மட்டத்தில் காணப்படும் சவால்கள் நிறைந்த சூழலிலும் இலங்கையின் நிதியியல் துறையின் வலிமையின் அடையாளமாக இந்த இரு நிறுவனங்களின் ஒன்றிணைப்பு அமைந்துள்ளதுடன், குடும்ப வியாபார கூட்டாண்மையின் நிதியியல் முகாமைத்துவ திறன்களை கொண்டுள்ளதுடன், பங்காளர்களுக்கான முறையான நிர்வாக கட்டமைப்பு மற்றும் பொறுப்பையும் கொண்டுள்ளது.

அசோசியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி ரி.எம்.ஏ. சாலே கருத்துத் தெரிவிக்கையில், 'இரு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு தற்போது அசோசியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனியாக திகழ்வதுடன், எமது மீண்டெழும் திறன் மற்றும் தூர நோக்குடைய செயற்பாடுகள் போன்றன இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியை துறையில் காணப்படும் ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு வினைத்திறன் வாய்ந்த வகையில் கடந்து செல்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். இந்த இரு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில், ரூ 20 பில்லியனுக்கு அதிகமான உறுதியான சொத்துக்கள் இருப்பை கொண்டிருக்கும்.' என்றார்.

குறைந்த செலவீன வியாபார மாதிரியினூடாக AMF அதிகளவு அனுகூலமடைந்திருந்ததுடன், யுகுஊ கையகப்படுத்தலுக்கு முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு கள முகவர்களின் உதவியுடன் பிரதான கிளை இயங்கியிருந்தது. தற்போது, AMF உடன் இணைக்கப்பட்டுள்ளதனூடாக, கிளைகளுக்கு அதிகளவு பெறுமதியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதுடன், செயற்பாட்டு உட்கட்டமைப்புகளை அதிகளவு வினைத்திறன் வாய்ந்த வகையில் செயற்படுத்தி, பங்காளர்களுக்கு பெறுமதி சேர்க்கக்கூடியதாக அமைந்திருக்கும். இதனூடாக ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனத்தை, இலங்கையின் நிதியியல் துறையில் தாக்கம் செலுத்தும் நிறுவனமாக அசோசியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சி (AMF) நாமத்தின் கீழ் திகழச் செய்யும். 2014 ஒக்டோபர் மாதம் AFC இன் 94 சதவீதமான பங்குகளை AMF கையகப்படுத்தியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .