2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

பண்டிகைக்கால ஷொப்பிங்கை தீவிரப்படுத்தும் கொமர்ஷல் வங்கி

Freelancer   / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் கால ஷொப்பிங்கானது நுகர்வோர் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது, கடனட்டை மற்றும் டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்காக அதன் வருடாந்த ஆண்டு இறுதி விலைக்கழிவு சலுகை பொனான்ஸாவை வெளியிட்டது.

இலங்கை முழுவதும் உள்ள 4,000 வர்த்தக விற்பனை நிலையங்கள் 2024 டிசம்பர் 31 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் 50% வரையிலான விலைக்கழிவு சலுகையை அதன் அட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

இந்த விலைக்கழிவு சலுகைகள் 187 வர்த்தக பங்குதாரர்களான  ஆடை மற்றும் ஆடை அணிகலன் விற்பனையாளர்கள், 62 வாழ்க்கை முறை உற்பத்தி பங்குதாரர்கள், 26  காலணிகள் விற்பனை பங்குதாரர்கள் மற்றும் தோல் பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள், 74 ஹோட்டல் பங்குதாரர்கள், 22 ஆபரண பங்குதாரர்கள், 18 சுகாதார பராமரிப்பு பங்குதாரர்கள், ஒன்பது சிகையலங்கார நிலையங்கள், ஸ்பா மற்றும் அழகுசாதனப் பங்குதாரர்கள், ஐந்து அங்காடிச் சந்தை பங்குதாரர்கள்  ஒன்பது வாகன விற்பனை பங்குதாரர்கள், ஆறு கடிகாரங்கள் மற்றும் அணிகலன்கள் பங்குதாரர்கள் மற்றும் ஏழு உணவு பங்குதாரர்கள் ஆகியோரால் வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, 90 இணையத்தள விற்பனையாளர் பங்குதாரர்கள் இந்த பண்டிகை ஊக்குவிப்பு காலத்தில் கொமர்ஷல் வங்கியின் கடனட்டை மற்றும் டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விலைக்கழிவு சலுகைகளை வழங்கவுள்ளனர்.

இந்த ஊக்குவிப்பு குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் அட்டை நிலையத்தின் தலைவர் நிஷாந்த டி சில்வா, 'எங்கள் பருவகால அட்டை ஊக்குவிப்பு ஒவ்வொரு வருடமும் விரிவாக்கப்பட்டு வருகிறது, மேலும் பல வர்த்தக பங்குதாரர்கள் இந்த திட்டத்தில் இணைந்திருப்பதால், அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, கொமர்ஷல் வங்கி அட்டை ஊக்குவிப்புத் தொழிலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவும், சலுகையில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் மிகவும் மாறுபட்ட ஒன்றாகவும் மாறியுள்ளது. பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் போது சேமிக்க இது ஒரு சிறந்தவாய்ப்பாக திகழ்கிறது.

இந்த பண்டிகைக்கால ஊக்குவிப்பில் பங்குபெறும் வர்த்தகர்கள் மிகப்பெரிய அளவிலான சலுகைகளை வழங்குகின்றனர், வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும் பரந்த அளவிலான விற்பனை நிலையங்களில் இருந்து ஏராளமான விலைக்கழிவு சலுகைகள்  கிடைக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .