2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷில் மிகவும் நிலைபேறான வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

S.Sekar   / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி பங்களாதேஷ், 2021 இன் நிறைவுப் பகுதியில் 'பங்களாதேஷில் மிகவும் நிலைபேறான வங்கியாக' பெயரிடப்பட்டதுடன், இந்தக் காலப்பகுதியில் இரண்டு சுயாதீன அமைப்புக்களால் 'பங்களாதேஷில் சிறந்த வெளிநாட்டு வங்கியாக' பெயரிடப்பட்டு, அதன் ‘AAA’ கடன் தரப்படுத்தலைத் தக்கவைத்துக்கொண்டது.

'பங்களாதேஷில் மிகவும் நிலைபேறான வங்கி' விருது சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி தொடர்பான பல்வேறு செயற்தளங்களின் சிறப்பான சாதனைகளை கௌரவிக்கும் துபாயைத் தளமாகக்கொண்ட சர்வதேச வர்த்தக சஞ்சிகை விருதுகள் 2021 நிகழ்வில் வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரமானது கடந்த வருடங்களாக கொமர்ஷல் வங்கி பங்களாதேஷ் வெளிப்படுத்திவரும் நிலைபேறானதும் நிலையானதுமான வளர்ச்சியை அங்கீகரித்துள்ளது.

2021இல் கொமர்ஷல் வங்கி பங்களாதேஷ் ஐக்கிய இராஜ்ஜியத்தை தளமாகக்கொண்ட இரண்டு நிறுவனங்களால் - குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் (GBO) சஞ்சிகை மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு வகை நிதியியல் பிரிவில் மிகச்சிறந்த பெறுபேற்றாளர்களை அங்கீகரிக்கும் நிதியியல் பிரசுரமான குளோபல் எக்கனமிக்ஸ் லிமிட்டட் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு பிரசுரங்களுமே கொமர்ஷல் வங்கி பங்களாதேஷை 'பங்களாதேஷில் உள்ள மிகச்சிறந்த வெளிநாட்டு வங்கி' என்று முடிசூட்டின. இந்த விருதானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து வரும் வங்கிக்கான போட்டித்தன்மையை எதிர்கொள்ளும் ஆற்றல், அதன் சேவையின் சிறப்புத்தன்மை மற்றும் வாடிக்கையாளருக்கு சேவையாற்றுவதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒப்புக்கொள்வதாக அமைகிறது.

2021இல் வங்கியின் ஆற்றலானது Credit Rating Information and Services Ltd (CRISL) நிறுவனத்திடமிருந்து கிடைத்த ‘AAA’ (Triple A) கடன் தரப்படுத்தல் மூலமாக அடிக்கோடிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இயக்கத்தின் 2021 சாதனைகள் பற்றிக் கருத்துரைத்த கொமர்ஷல் வங்கியின், முகாமைத்துவப் பணிப்பாளரும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியுமான S. ரெங்கநாதன் 'பெருந்தொற்றி;னால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரச் செயற்பாட்டு சரிவு மற்றும் ஏனைய சவால்கள் இருந்தாலும், கொமர்ஷல் வங்கி  பங்களாதேஷ் தனது உறுதியை நிலைநாட்டியிருப்பதோடு தனது வழியில் நிலையாக நின்றுள்ளது. வங்கி பெற்றுள்ள விருதுகளும் சான்றாண்மைகளும் அதன் உறுதித்தன்மை, பெறுபேறுகளில் தொடர்ச்சியான தன்மை மற்றும் சேவை வழங்குதல் ஆகியவற்றுக்கான உறுதிச்சான்றாக அமைகின்றன. இன்னொரு வெற்றிகரமான வருடத்தின் நிறைவை நாம் கொண்டாடும் இந்நேரத்தில் பங்களாதேஷில் உள்ள எமது பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர் ஆகியோருக்கு எம் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம்.' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .