2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

பிஎம்எப் பினான்ஸ் பிஎல்சி இன் 6 அறிக்கை வளர்ச்சி

Mayu   / 2025 ஜனவரி 07 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிஎம்எப் பினான்ஸ் பிஎல்சிபுரட்டாசி 30, 2024 இல் முடிவடைந்த ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க செயல்திறனை வழங்கியது,வலுவான அடித்தளத்தை நிறுவும் தீர்க்கமான செயல்களின் மூலம் கணிசமான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைந்தது.
 
முக்கியசிறப்பம்சங்கள்:
•இலாபத்தில் 500% அதிகரிப்பு, நிறுவனத்தின் வலுவான நிதிநிலைமையை அடிக்கோடிட்டுக்  காட்டுகிறது.
•மேம்படுத்தப்பட்ட சொத்துதரம், செயலற்று காணப்படும் கடன்களில் கணிசமான குறைவு.
• மூலோபாய முன்முயற்சிகள் மூலமானசெயல்பாட்டுதிறன் வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களை பெறல்.
 
நிறுவனத்தின் செயல்திறன் குறித்துபேசிய பி எம் எப் பினான்ஸ் பிஎல்சி இன் தலைவர்  சந்துலஅபேவிக்ரம,“எமது இந்த அற்புதமான பெறுபேறுகள் எங்கள் குழுவின் சிறந்த மூலோபாயமுடிவுகளின் மூலமானபின்னடைவானநிலைமையிலிருந்து மீளகட்டி எழுப்பப்பட்டதற்கான ஓர் சான்றாகும். நிலையற்ற பொருளாதார தன்மைகள் நிலவிய காலகட்டத்தில், எங்கள் பங்குகளின் கட்டுப்பாட்டாளர்கள், முதலீட்டாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்திற்கு நன்மைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இந்த வளர்ச்சி எங்களின் சவால்களை வெல்லவும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் உறுதியினையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது”என்றார்.
 
தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் அஜித் மெடிஸ் தலைமையில், பிஎம்எப் பினான்ஸ் பிஎல்சி ஒரு நிலைமாற்றத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. அவரது நியமனம் முதல்,நிறுவனம் செலவை மேம்படுத்துதல், கிளையின் செயல்திறன், பணப் பரிமாற்றங்களில் கணிசமான அதிகரிப்புமற்றும் டிஜிட்டல் சேனல்கள் மற்றும் மூலோபாய கூட்டாண்மை மூலம் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
 
நிறுவனத்தின் சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில்,பேராசிரியர் அஜித் மெடிஸ் பின்வரும் தகவல்களைபகிர்ந்துகொண்டார்:
 
"எங்கள் மறுசீரமைப்பு முயற்சிகளின் செயல்திறனையும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளில் கவனம் செலுத்துவதையும் பிரதிபலிக்கின்றன. சந்தை வளர்ச்சியைப் ஏற்படுத்துவதில்  நாங்கள் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளோம்.
 
மேலும், எங்கள் விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ளஅனைத்து சமூகங்களுக்கும் சிறந்த நிதிச் சேவைகளை அணுகக்கூடியதாக வழங்குவதை குறிகோளாகக் கொண்டுள்ளோம்” என்றார்.
 
பிஎம்எப் பினான்ஸ் பிஎல்சி ஆனது யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் காலி ஆகிய இடங்களில் மேலும் மூன்றுகிளைகளைத் திறந்து அதன் வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் எதிர்வரும் மாதங்களில் மேலதிக கிளைகளைஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. திறமை, வளங்கள் மற்றும் தொழில்நுட்பகருவிகளின் சரியான பயன்பாட்டினை உறுதிசெய்வதன் மூலம் நிலையான வளர்ச்சிக்கு தயாராகிவரும் எஸ்எம், (SME)  துறைக்கானஉறுதிப்பாட்டைநிறுவனம் வலியுறுத்துகிறது.
 
பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவமிக்க வல்லுநர்களை உள்ளடக்கிய இயக்குநர்கள் குழு,நிர்வாகத்தின் மிக உயர்ந்ததரத்தைப் பேணுவதன் மூலம் அதன் இலட்சிய இலக்குகளை அடைவதற்கு நிறுவனத்தைத் தொடர்ந்து வழி நடத்துகிறது.
 
அதன் ஜப்பானிய முதலீட்டுப் பிரிவின் வலுவான ஆதரவுடன், பிஎம்எப் பினான்ஸ் நீண்டகால வெற்றிக்கு தயாராக உள்ளது. நிதித் திறனைமேம்படுத்தவும் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவதையும் அதன் சர்வதேச கூட்டாண்மைகளை மீண்டும் உருவாக்குவதையும் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
பிஎம்எப் பினான்ஸ் இந்த புதிய கட்டத்தைத் தொடங்குகையில், நிதிச் சேவைத் துறையில் ஒரு மறுசீரமைப்பு மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் தனது நிலையை வலுப்படுத்தி, புரட்சிகரமான வளர்ச்சியை வழங்க உறுதிபூண்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X