Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
S.Sekar / 2023 மார்ச் 17 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக மீள்சுழற்சி தினத்தைக் குறிக்கும் வகையில், நெஸ்லே லங்கா நிறுவனம், பூஜ்ஜியக் கழிவை நோக்கிய எதிர்காலத்திற்கான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ள ஒரு தொடக்க வணிக முயற்சியான Chakra Suthra உடன் தனது கூட்டு முயற்சியை அறிவித்துள்ளது. அந்த வகையில், 'நல்லுணவு, நல்வாழ்வு' நிறுவனத்தின் தனித்துவமான வர்த்தகநாமமான நெஸ்லே மைலோ, Chakra Suthra வின் ஸ்மார்ட் மீள்சுழற்சித் தொட்டியான ‘Trash2Cash’ க்கான நுண்ணுயிர் நீக்கிய பான அட்டைப்பெட்டிகளுக்கான பிரத்தியேக தயாரிப்பு வகை கூட்டாளராகச் செயல்படும். இந்த ஸ்மார்ட் மீள்சுழற்சித் தொட்டியானது நுகர்வோர் தங்கள் பிளாஸ்திக் கழிவுகளை பலன் பெறும் வகையில் அப்புறப்படுத்த இடமளிக்கிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் நுண்ணுயிர் நீக்கிய பான அட்டைப்பெட்டிகள் மீள்சுழற்சி செய்யப்பட்டு, உள்நாட்டு மீள்சுழற்சி செயல்பாட்டாளரான EcoMaximus இல் காகிதாதிகளை உற்பத்தி செய்யும் வண்ணம் மேம்படுத்தப்படும்.
இதன் முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் இயந்திரங்கள் யூனியன் பிளேஸ், டாலி வீதி, டுப்ளிகேஷன் வீதி, தலாஹேன, தலவத்துகொட 2, மஹரகம, கொஹுவல 2, இரத்தினப்பிட்டிய, மொரட்டுவையில் உள்ள K Zone Mall அங்காடி மற்றும் கொரக்கான ஆகிய இடங்களில் உள்ள பிரபலமான பல்பொருள் அங்காடி சங்கிலியின் 10 விற்பனை நிலையங்களில் தற்போது கிடைக்கின்றன. இந்த கூட்டு முயற்சியைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட Chakra Suthra வின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கலாநிதி ஹிமேஷ் பெர்னாண்டோ, “Trash2Cash முயற்சியானது முதலில் பிளாஸ்திக் போத்தல்களுக்கான புத்தாக்கமான சேகரிப்பு தளமாக வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், அட்டைப்பெட்டிகளுக்கு இதேபோன்ற தீர்வைத் தேடி நெஸ்லே லங்கா நிறுவனம் எம்முடன் கூட்டிணைய எம்மை அணுகிய போது நாங்கள் பெருமகிழ்ச்சியடைந்தோம். சில மாதங்களாக இந்த கூட்டு முயற்சி சீரமைக்கப்பட்ட பிறகு, இலங்கையில் முதன்முறையாக ஊக்குவிப்புப் பலன் அளிக்கும் அட்டைப்பெட்டி சேகரிப்புத் தளத்தை இன்று நாங்கள் ஸ்தாபித்துள்ளோம். நெஸ்லே லங்கா போன்ற முன்னோக்கிச் சிந்திக்கும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு கௌரவமாகும். மேலும் இந்த கூட்டு முயற்சியானது மற்றவர்களையும் எங்களுடன் கைகோர்க்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்,' என்று குறிப்பிட்டார்.
பிளாஸ்திக் மாசுபாட்டைக் கையாள்வதில் அதன் உறுதியான அர்ப்பணிப்புடன், நெஸ்லே லங்கா நிறுவனம், நெஸ்லே மைலோவில் தொடங்கி, உள்நாட்டுத் தொழில் துறையில் Ready-To-Drink தயாரிப்புகளுக்கான காகித straw க்களுக்கு மாறுவதில் முன்னோடியாக திகழ்ந்தது. இது ஒட்டுமொத்த பொதியிடலையும் மீள்சுழற்சி செய்யக்கூடியதாக மாற்றியது. இந்த பசுமைநேய முயற்சிக்கு இணையாக, இலங்கையில் நுண்ணுயிர் நீக்கிய பான அட்டைப்பெட்டிகளுக்கான சுழற்சிப் பொருளாதாரத்தைத் தோற்றுவிக்கும் முயற்சியில் தொடர்ச்சியான திட்டங்களை நெஸ்லே லங்கா தொடங்கியுள்ள அதே நேரத்தில், தனது நுகர்வோர் மத்தியில் நடத்தை மாற்றத்தையும் ஊக்குவிக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
எனவே, நிறுவனம் இலங்கையில் பதப்படுத்தல் மற்றும் பொதியிடல்; தீர்வுகள் நிறுவனமான Tetra Pak உடன் இணைந்து நுண்ணுயிர் நீக்கிய பான அட்டைப்பெட்டிகளை மீள்சுழற்சி செய்வதற்கான முதல் ஆலையை நிறுவ உதவியதுடன், நாட்டில் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. Chakra Suthra உடனான இந்த பரீட்சார்த்தத் திட்டம், ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தைத் தோற்றுவிப்பதற்கான நிறுவனத்தின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்காகும். ஏனெனில் இது நுகர்வோர் தாம் பயன்படுத்திய நெஸ்லே மைலோ Ready-To-Drink பக்கெட்டுகள் மற்றும் பிற நுண்ணுயிர் நீக்கிய பான அட்டைப்பெட்டிகளை அந்தந்த சேகரிப்பு மையங்களில் இட்டு அப்புறப்படுத்த இடமளிக்கிறது. அதன் பின்னர் காகிதாதிப் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவற்றுக்கு இரண்டாவது வாழ்வைக் கொடுக்க EcoMaximus க்கு அனுப்பப்படும்.
'இலங்கையில் பிளாஸ்திக் மாசுபாட்டைக் கையாள்வதற்கான எமது முயற்சிகளில் Chakra Suthra போன்ற ஒருமித்த சிந்தனை கொண்ட நிறுவனத்துடன் ஒன்றுசேர்ந்து உழைப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இலங்கையில் நுண்ணுயிர் நீக்கிய பான அட்டைப்பெட்டிகளுக்கான சுழற்சிப் பொருளாதாரத்தை தோற்றுவிக்கும் நோக்கில் எங்களின் பணியானது, 2021 ஆம் ஆண்டில் எங்களின் மிகவும் அபிமானம் பெற்ற நெஸ்லே மைலோ Ready-To-Drink பக்கெட்டுகளுக்கான காகித straw க்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒரு எழுச்சி அலை விளைவைக் கண்டதுடன், இது வரை எங்கள் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி கூட்டாளர்களுடன் சேர்ந்து நாம் கடந்து வந்த பயணத்தையிட்டு நான் பெருமைப்படுகிறேன். கழிவுகள் அற்ற எதிர்காலத்தை உருவாக்க உதவுவதும், எமது பொதியிடல் சார்ந்த எதுவும் நிலப்பரப்புகளிலோ அல்லது பெருங்கடல்களிலோ சென்றடைவதை தடுப்பதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். இந்த நோக்கத்திற்காக நாங்கள் எங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துவதுடன், இது சம்பந்தமாக குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். தூய்மையான மற்றும் பசுமையான இலங்கையை நோக்கி, நன்மைக்கான முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்!' என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பாலை மூலமாகக் கொண்ட தயாரிப்புத் துறைக்கான பணிப்பாளரான ருவான் வெலிகல கருத்து வெளியிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
36 minute ago