Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெஸ்லே லங்கா நிறுவனம் தனது பாடசாலை கழிவு முகாமைத்துவ திட்டத்தின் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கழிவு முகாமைத்துவத் தொகுதிகளை அண்மையில் வழங்கியிருந்தது. மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, கல்வி அமைச்சு மற்றும் உள்நாட்டு மாநகர சபைகள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் இலங்கையின் எதிர்கால சந்ததியினர் மத்தியில் நேர்மறையான நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கழிவுகளற்ற எதிர்காலத்தை அடைவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக 2020 ஜனவரியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 250 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு 400,000 க்கும் அதிகமான சிறுவர்களை இது எட்டவுள்ளது.
உரிய அதிகார சபைகளின் வழிகாட்டுதலின் பேரில், பாடசாலைக் கழிவு முகாமைத்துவத் திட்டம், பாடசாலை வளாகத்தில் உள்ள கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, பொறுப்புணர்வுடன் அகற்றப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அதிகாரிகள் பாடசாலைகளின் சுற்றுச்சூழல் முயற்சிகள் சார்ந்த சங்கங்களுடன் இணைந்து கழிவுகளை முறையாக அகற்றுதல் மற்றும் அவற்றின் முகாமைத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாணவர்கள் சுற்றுச்சூழல் நலனுக்கான தூதுவர்களாகச் செயல்படவும் ஊக்குவிக்கிறார்கள். அதன்பிறகு, அப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட நகராட்சி சபை, கழிவுகள் சேகரிக்கப்பட்டு முடிந்தவரை மீள்சுழற்சி அல்லது அதிலிருந்து எரிசக்தி பெறப்படுவதற்காக அனுப்பப்படுவதை உறுதி செய்கிறது.
இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வரான டிரோன் அத்தநாயக்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 'கழிவுகள் பொறுப்புணர்வுடன் அகற்றப்பட்டால் பெறுமதியான ஒரு வளமாகும். தரம் பிரிக்கப்பட்ட கழிவுகள் மூலம் நிறையப் பயனை அடைந்து கொள்ள முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்களுக்கு இது தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, இலங்கையின் எதிர்கால சந்ததியான பாடசாலை மாணவர்களின் நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான வலுவான அத்திவாரத்தை அமைப்பதால் இந்த வேலைத்திட்டம் மிகவும் அவசியமானது,' என்று குறிப்பிட்டார்.
நீண்ட கால அடிப்படையில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கு சிறுவயதிலேயே நல்ல பழக்கவழக்கங்களை உட்புகுத்துவதன் முக்கியத்துவம் குறித்து சப்பிரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளரான சேபால குருப்புஆராச்சி கருத்து தெரிவிக்கையில், 'நமது நாட்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றின் மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அரச-தனியார் கூட்டு முயற்சியில் ஒரு அங்கமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,' என்று குறிப்பிட்டார்.
பூமிக்கு நன்மைபயக்கும் செயல்களை முன்னெடுப்பதற்கு உறுதிபூண்டுள்ள, நல்லுணவு, நல்வாழ்வுக்கு வித்திடுகின்ற நிறுவனம், பிளாஸ்திக் உட்பட தனது பொதியிடல் எதுவும் நிலத்தையோ அல்லது நீர்நிலைகளையோ சென்றடைவதை தடுப்பதை உறுதி செய்யும் இலட்சியத்துடன், இலங்கையில் பிளாஸ்திக் கழிவு மாசுபாட்டைச் சமாளிக்கும் தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நோக்கத்திற்காக, நெஸ்லே லங்கா நிறுவனம் தனது தயாரிப்புகளை மீள்சுழற்சி செய்யக்கூடிய அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொதியிடலுக்கு மாற்றுவது, தொற்று அகற்றப்பட்ட பான அட்டைப்பெட்டிகளுக்கு ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தை உருவாக்க உதவுவது அத்துடன் இலங்கையில் பசுமையான மற்றும் தூய்மையான ஒரு நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் மற்றும் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது உட்பட பல பசுமை சார்ந்த முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .