2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நெஸ்டமோல்ற்றின் SALARY for LIFE திட்டம் ஆரம்பம்

S.Sekar   / 2021 பெப்ரவரி 19 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்டமோல்ற்று தனது ‘SALARY for LIFE’ ஊக்குவிப்புத் திட்டத்தை இரண்டாவது ஆண்டாகவும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக வெற்றியாளராக மாறவுள்ள மற்றுமொரு நுகர்வோருக்கு இப்போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக 55 வயது வரை மாதந்தோறும் ரூ. 50,000 தொகையையும் வழங்கவுள்ளது. விசுவாசமிக்க தனது நுகர்வோருக்கு வாழ்க்கையை சிறப்பாக ஆரம்பிக்க உதவி, வாழ்வில் தமது இலட்சியங்களை அடைந்து, உயர்வு பெற உதவுவதே நெஸ்டமோல்ற்றின் நோக்கமாகும். 18 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட எந்தவொரு நெஸ்டமோல்ற்று நுகர்வோரும், 400 கிராம் நெஸ்டமோல்ற்று பக்கெட்டின் மேலுறையை அனுப்பி இந்த குலுக்கல் சீட்டிழுப்பிற்கு தகமை பெற முடியும். அவர்கள் எத்தனை மேலுறைகளையும் அனுப்பலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுந்தமான அடிப்படையில் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.

கடந்த ஆண்டில் நெஸ்டமோல்ற்று SALARY for LIFE போட்டியின் முதன்முதல் வெற்றியாளராக பிலிமத்தலாவ என்ற இடத்தைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய அவிஷ்கா கொஸ்வத்த தெரிவு செய்யப்பட்டதுடன், இப்போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக, 35 வயது வரையில் நெஸ்டமோல்ற்று இடமிருந்து மாதந்தோறும் ரூ. 50,000 தொகையை பெற்று வருகின்றார். இந்த மேலதிக பண உதவியை அவர் தனது வாழ்வில் ஒரு ஆசிரியராக மாறி, குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற இலட்சியத்தை சிறப்பாக அடைந்து கொள்ளும் பயணத்திற்கு உபயோகித்து வருகின்றார்.

நெஸ்டமோல்ற்று SALARY for LIFE இன் உதவியால் எனது எதிர்காலப் பயணம் தடையின்றி தொடருகின்றது. தொற்றுநோய் பரவல் காரணமாக ஆசிரியத் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற எனது இலட்சியம் சற்று தள்ளிப் போனாலும், இத்தகையதொரு காலகட்டத்தில் நெஸ்டமோல்ற்றிடமிருந்து எனக்குக் கிடைக்கப்பெறுகின்ற மாதாந்த சம்பளத்தின் உதவியால், எனது கற்றல் பயணம் மற்றும் எனது இலட்சியங்களை அடைந்து கொள்ள வழி பிறந்துள்ளது. எனக்காக மடிகணினியொன்றை நான் வாங்கியுள்ளதுடன், எனது எதிர்கால தொழிலை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் என்னைத் தயார்படுத்த ஒன்லைன் முறையில் நான் கற்று வருகின்றேன்,' என்று அவிஷ்கா குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .