2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நெருக்கடி நிறைந்த 2021 ஐ கொமர்ஷல் வங்கி திடமாகப் பூர்த்தி

S.Sekar   / 2022 மார்ச் 07 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கிக் குழுமம் 2021ம் ஆண்டை ரூ. 163.675 பில்லியன் மொத்த வருமானத்துடன் பூர்த்தி செய்துள்ளது. இது 7.70 வீத வளர்ச்சியாகும். கலவையான அதிர்ஷ்டத்துடன் கூடிய இந்த ஆண்டில் வட்டி வருமானம் 80 வீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி அதன் கிளைகள் மற்றும் இணை நிறுவனங்கள் என்பனவற்றைக் கொண்டு கொமர்ஷல் வங்கிக் குழுமம் என அறியப்படுகின்றது. இந்தக் குழுமம் 2021 டிசம்பர் 31ல் முடிவடைந்த ஆண்டில் ரூ. 132.818 பில்லியனை வட்டி வருமானமாகப் பதிவு செய்துள்ளது. இது 7.04 வீத வளர்ச்சியைப் பிரதி பலிக்கின்றது. வருடத்துக்கான வட்டி செலவினம் 9.31 வீதத்தால் குறைவடைந்து ரூ. 66.402 பில்லியனாக உள்ளது. குழுமத்தின் தேறிய வட்டி வருமானம் ரூ. 66.416 பில்லியன்களாகும். இது 30.56 வீத வளர்ச்சியாகும். ஆண்டின் கடைசிக் காலாண்டு வட்டி வருமானம் 17.84 வீதத்தால் வளர்ச்சி அடைந்து ரூ. 36.592 பில்லியனாக உள்ளதை காட்டி நிற்கின்றது. இது குழுமத்தின் மூன்று மாத கால மொத்த வருமானம் ரூ. 43.625 பில்லியனில் 83 வீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 2020ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 13.76 வீதத்துக்கும் அதிகமாக இது உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தில் வட்டிச் செலவுகள் 4.30 வீதத்தால் அதிகரித்து ரூ. 17.709 பில்லியனாக இறுதிக் காலாண்டில் வட்டி வீதங்களின் அதிகரிப்பு காரணமாக வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இது பதிவாகி உள்ளது.

ஆண்டுக்குரிய மொத்த செயற்பாட்டு வருமானம் 21.98 வீதத்தால் வளாச்சி கண்டு ரூ. 93.598 பில்லியன்களாக உள்ளது. வங்கியின் குறைபாட்டு கட்டணங்கள் மற்றும் ஏனைய நட்டங்கள் 17.37 வீதத்தால் அதிகரித்து ரூ. 25.140 பில்லியன்களாக உள்ளது.

நிதிச் சேவைகள் மீதான VAT வரிக்கு முந்திய செயற்பாட்டு இலாபம் குறிப்பிடத்தக்க வகையில் 33.58 வீதமாக வளர்ச்சி கண்டு 38.801 பில்லியன்களாக உள்ளது. குழுமத்தின் நிதிச் சேவைகள் மீதான VAT வரி குறிப்பிட்ட ஆண்டில் 28.99 வீத வளர்ச்சி கண்டு ரூ. 5.845 பில்லியன்களாக உள்ளது. அதேவேளை வரிக்கு முந்திய இலாபம் 34.41 வீதத்தால் அதிகரித்து ரூ. 32.957 பில்லியனாக உள்ளது. வருமானவரி கட்டணங்கள் குறைவான 16.60 வீதத்தில் அதிகரித்து 8.667 பில்லியனாக உள்ளது. வருமானவரி வீதக் குறைப்பே இதற்கு காரணம். குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் குறிப்பிட்ட ஆண்டில் ரூ. 24.290 பில்லியனாக உள்ளது. இது 42.16 வீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது முன்மொழியப்பட்டுள்ள கூடுதல் வரிக்கு முந்திய நிலையாகும். குறிப்பிட்ட சட்டம் இந்த அறிக்கையிடலின் போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கவில்லை. எனவே மீளாய்வுக்கு உட்பட்ட ஆண்டில் இதற்கான ஒதுக்கீடு இடம்பெறவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .