2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நிலைபேறான செயற்பாடுகளுக்கு Forbes Marshall லங்காவின் அர்ப்பணிப்பு

Freelancer   / 2024 ஜூன் 28 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச பதப்படுத்தல் தொழிற்துறைக்கு வலுப் பேணல் மற்றும் தன்னியக்கமயமாக்கல் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Forbes Marshall Lanka Pvt Ltd, அண்மையில் “Partnering KPI Sustenance” எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்றையும், விசேட நிகழ்வையும் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்துறைகளின் 500 க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

இரு தொழினுட்ப அமர்வுகளை இந்த நிகழ்வு உள்ளடக்கியிருந்ததுடன், அதில் ஒரு அமர்வு, KPI தீர்வுகளை தக்க வைத்துக் கொள்வதனூடாக நிலைபேறாண்மைக்கான வழிமுறையில் கவனம் செலுத்துவதாகவும், மற்றைய அமர்வு, டிஜிட்டல் தக்க வைப்பு சேவைகளில் கவனம் செலுத்துவதாகவும் அமைந்திருந்தது. ஸ்டீம் பொயிலர்கள் மற்றும் ஸ்டீம் உதிரிப்பாகங்கள் மற்றும் Control Instrumentation கட்டமைப்புகள் போன்றவற்றுக்கான சந்தை முன்னோடியாக Forbes Marshall Lanka திகழ்கின்றது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் லொஷான் பலயன்கொட தமது வரவேற்புரையின் போது, இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலான பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆதரவளித்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். பல்கலைக்கழங்களில் மூன்று ஸ்டீம் ஆய்வுகூடங்களை Forbes Marshall எவ்வாறு நிறுவியிருந்தது என்பது பற்றியும் அவர் விளக்கமளித்திருந்ததுடன், பட்டம் பயிலும் பொறியியலாளர்கள் அடங்கலாக, ஆயிரக் கணக்கான பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு திறன் கட்டியெழுப்பல் அமர்வுகளை முன்னெடுத்திருந்தமை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

Forbes Marshall இன் பணிப்பாளர் சத்யதியோ புரோஹித் விளக்கமளிக்கையில், பதப்படுத்தல் தொழிற்துறைகளின் பிரதான முன்னுரிமைகளாக உற்பத்தித் திறனை மேம்படுத்துவது மற்றும் கட்டணப் பட்டியல் செலவுகளை குறைத்தல் போன்றன அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். காலப் போக்கில், துறைசார் சூழல் மற்றும் ஒழுங்குபடுத்தல் அர்ப்பணிப்புகள் போன்றவற்றுடன் இவை மிகவும் சிக்கல்கள் நிறைந்ததாக அமைந்திருந்த போதிலும், Forbes Marshall தமது ஆழமான அறிவு மற்றும் பிரயோகங்களினூடாக ஆலைகளுக்கு வினைத்திறனில் நியம மட்டங்களை எய்துவதற்கு அவசியமான தயாரிப்புகள் மற்றும் டிஜிட்டல் தக்க வைப்பு சேவைகளை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டார்.

Forbes Marshall இன் டிஜிட்டல் செயற்பாடுகளுக்கான தலைமைத்துவ அணி செயற்பாட்டாளர் யஷஸ்வி சஹாஜ்பால் குறிப்பிடுகையில், தமது டிஜிட்டல் தக்க வைப்பு சேவைகளினூடாக 600க்கும் அதிகமான ஆலைகளுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், தமது வாடிக்கையாளர்களின் KPIகளை மேம்படுத்துவது தொடர்பில் வெற்றிகரமான கதைகள் மற்றும் ஆய்வுகளை பகிர்ந்திருந்தார். அதன் செயன்முறை நிபுணர்கள் தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளில் கவனம் செலுத்தி, சரியான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் தம்மை ஈடுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். Forbes Marshall உடன் கைகோர்க்குமாறு நிறுவனங்களுக்கு அவர் அழைப்புவிடுத்திருந்தார்.

Forbes Marshall International PTE Ltd, Singapore இன் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாக Forbes Marshall Lanka Pvt Ltd (FML) திகழ்வதுடன், 1992 ஆம் ஆண்டு முதலீட்டு சபையின் கீழ் நிறுவப்பட்டது. இலங்கையில் ஸ்டீம் பொயிலர்கள் மற்றும் ஸ்டீம் சாதனங்கள் மற்றும் Control Instrumentation கட்டமைப்புகளுக்கு சந்தை முன்னோடியாக FML திகழ்கின்றது. 500 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதுடன், செயன்முறை மற்றும் வலு வினைத்திறன் போன்றவற்றினூடாக உள்நாட்டு தொழிற்துறைக்கு ஆதரவளிக்கின்றது. இதனூடாக, உயர் கட்டமைப்பு தங்குதிறனுடன் அதிகளவு சிக்கனமான தீர்வுகளை எய்துகின்றது.

75 வருடங்களுக்கு மேலாக பதப்படுத்தல் தொழிற்துறைக்கு புத்தாக்கமான மற்றும் நவீன வலுச் சேமிப்பு மற்றும் தன்னியக்கமயமாக்கல் தீர்வுகளை வழங்குவதில் Forbes Marshall முன்னோடியாகத் திகழ்கின்றது. உலகளாவிய ரீதியில் 50 க்கு மேற்பட்ட நாடுகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், ஆறு உற்பத்திப் பகுதிகள் மற்றும் 40,000க்கும் அதிகமான சதுர மீற்றர் தொழிற்சாலை இட வசதியையும் கொண்டுள்ளது. சராசரியாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமது எரிபொருள் கட்டணத்தில் 1.5 சதவீதத்தை சேமித்துக் கொள்ள முடிகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X