Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியு அந்தனீஸ் குரூப் தொடர்ச்சியான முன்னெடுத்து வரும் சூழல்சார் மற்றும் நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்காக சான்பிரான்சிஸ்கோ மெரியட் மார்கிசில் நடைபெற்ற Soy Connext, Global U.S. Soy மாநாட்டில் கௌரவிப்பைப் பெற்றிருந்தது. இந்த மாநாடு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
U.S. Soybean Export Council (USSEC) இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆண்டுக்கான Soy Connext மாநாட்டில், 60 க்கு மேற்பட்ட நாடுகளின் 700 க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். தற்போதைய சந்தை விருத்தி மற்றும் எதிர்கால போக்குகள், U.S. Soy விவசாயிகளின் கருத்துகள், போஷணை விஞ்ஞானம், உணவு லேபலிடல் மற்றும் பொதியிடல், விநியோக சங்கிலி மற்றும் நிலைபேறாண்மை போன்றன தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஜுலை மாதம், நியு அந்தனீஸ் குரூப்பின் தயாரிப்புகளுக்கு, நிலைபேறான U.S. Soy and Fed உடன் நிலைபேறான U.S. Soy லேபிள்கள் போன்றன வழங்கப்பட்டிருந்தன. அதனூடாக முழு தெற்காசிய பிராந்தியம் மற்றும் உப சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்திலும் இந்த சான்றை பெற்ற முதல் நிறுவனமாக திகழ்கின்றது. இதனைத் தொடர்ந்து, துறையைச் சேர்ந்த பலரும் இந்த முறைமையை பின்பற்றியிருந்தனர்.
சிறந்த தலைமைத்துவம் மற்றும் தூர நோக்குடைய செயற்பாடுகளினூடாக, நியு அந்தனீஸ் குரூப் நிலைபேறான வழிமுறைகளை பின்பற்றியிருந்தது. நிலைபேறான U.S. Soy பயணத்தில் அதன் பணிகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக USSEC அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளதுடன், நேரடியாக அவர்களுடனம் மற்றும் பல இதர தரப்பினருடனும் பணியாற்றுகின்றது என USSEC இன் தெற்காசிய மற்றும் உப சஹாரா ஆபிரிக்க பிராந்திய பணிப்பாளர் கெவின் ரோப்கே தெரிவித்தார்.
U.S. Soy Sustainability Assurance Protocol (SSAP) இனால் உறுதி செய்யப்பட்ட சோயா அடங்கியிருக்கும் தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் லேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. USSEC இனால் வடிவமைக்கப்பட்ட முதலாவது நிலைபேறான உறுதிப்படுத்தல் திட்டமாக அமைந்துள்ளது. நியு அந்தனீஸ் இனால் தற்போது தமது சோயா கொள்வனவுகளின் போது, காபன் வெளிப்பாட்டில் SSAP சான்றிதழை பயன்படுத்த முடியும். இதனை காபன் கணக்கீட்டில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
தொழிற்துறை மற்றும் பிராந்தியத்தில் நியு அந்தனீஸ் தொடர்ந்தும் அதன் நிலையை பேணுவதுடன், நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளராக உறுதியாக திகழ்கின்றது. நிலைபேறான U.S. soy ஐ பெற்றுக் கொள்வது முதல், உயிரியல் ரீதியில் உக்கும் பொதியிடல் முறைகள் வரை பல இதர வழிமுறைகளையும் பின்பற்றுகின்றது. நியு அந்தனீஸ் தனது செயற்பாடுகள் மற்றும் விநியோக செயற்பாடுகளின் போது நிலைபேறான அம்சங்களை பின்பற்றுகின்றது. FSSC 22000 சான்றிதழை பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது கோழி இறைச்சி உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது.
U.S. Soy ஐ பெற்றுக் கொண்ட நியு அந்தனீஸ், வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பதில் அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குகின்றமை வெளிப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் சோய் தயாரிப்புகள் உயர் தரமானவை என்பதுடன், கால்நடை பண்ணைகள், உணவு ஆலைகள் மற்றும் எண்ணெய் க்ரஷர்களின் வினைத்திறனை மேம்படுத்துகின்றன என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சோயா உணவூட்டல் பிரிவில் சிறந்த சுவைகளை அறிமுகம் செய்துள்ளதுடன், பண்ணை வழிநடத்தல் மற்றும் பேணல் முயற்சிகளில் முக்கிய பங்காற்றுகின்றது. குறைந்தளவு காபன் வெளியீட்டை ஏற்படுத்தவும் பங்காற்றுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago