Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 30 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு நிர்மாணத் துறையில் மாற்றத்தை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, துறையின் பிரதான பங்காளர் பிரிவான மேசன்மாருக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் தனது முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
எதிர்காலத்துக்கான மேசன்மாரை தயார்ப்படுத்துவதற்காக INSEE சீமெந்து முன்னெடுக்கும் ‘INSEE Sathkara’ ஊடாக, இலங்கையின் உள்நாட்டு நிர்மாணத்துறைக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கி, நிபுணத்துவ, சமூக மற்றும் நிதிசார் வலுவூட்டலை மேற்கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
INSEE சீமெந்தின் நிறைவேற்று உப தலைவர் ஜான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில், “INSEE Sathkara ஊடாக புதிய தலைமுறை மேசன்மாரின் திறன்களை மேம்படுத்தல், சமூக கௌரவம் மற்றும் நிதி உறுதித் தன்மை ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான வலுவூட்டல் மற்றும் விருத்தி போன்றன வழங்கப்படுகின்றன. துறையில் எழும் கேள்விகளுக்கு ஏற்ற வகையில் மேசன்மாரை புதிய திறன்கள், அறிவு மற்றும் ஆற்றல் கொண்டவர்களாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்றார்.
நிர்மாணத்துறையில் காணப்படும் திறன் இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் திறன் மற்றும் ஆற்றல் படைத்த பணியாட்களை கட்டியெழுப்புவதை INSEE சீமெந்து எதிர்பார்க்கின்றது. தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) உடன் இணைந்து தேசிய தொழிற்பயிற்சி தகைமைகள் (NVQ) மேசன்மாருக்கு வழங்கி நிலைபேறான திறன் விருத்தியை இந்தத் திட்டம் உறுதி செய்கின்றது.
மேசன்மாருக்கு பணியை பயில்வதற்கு, விசேட திறன்களுடன் செயலணியில் இணைந்து கொள்வதற்கான 120 நாள் பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் மேசன் பயிற்சித் திட்டமொன்றையும் INSEE சீமெந்து அறிமுகம் செய்துள்ளது.
அம்பதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் குமார திசாநாயக்க, 16 வருட காலமாக மேசனாக பணியாற்றுவதுடன், INSEE Sathkara ஊடாக பயிற்சிகளை பெற்றுள்ளார். “ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, INSEE சீமெந்து மற்றும் NAITA இணைந்து முன்னெடுத்திருந்த பயிற்சியை என்னால் பயில முடிந்தது. அதனூடாக, NVQ நிலை 3 சான்றிதழை நான் பெற்றுள்ளேன். மேசன் என என்னை நிபுணத்துவ ரீதியில் அடையாளப்படுத்தும் முதல் சான்றிதழாக இது அமைந்துள்ளது. மேசனாக நான் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக பணியாற்றிய போதிலும் பெற்றுக் கொள்ள முடியாத அறிவையும் ஆற்றலையும் இந்த பயிற்சி எனக்கு வழங்கியிருந்து. எனது பணித்திறன்களை என்னால் மேம்படுத்திக் கொள்ள முடிந்ததுடன், அதனூடாக எனது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் முடிந்திருந்தது.” என்றார்.
நாடு முழுவதையும் சேர்ந்த மேசன்மாருக்கு அவசியமான சமூக ஏற்றுக் கொள்ளல் மற்றும் கௌரவிப்பை INSEE சீமெந்தின் இந்த நிபுணத்துவ திறன் கட்டியெழுப்பும் நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நிர்மாணத்துறையின் பெறுமதி சங்கிலியில் முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பாக இது அமைந்துள்ளது. மேசன் உரைகள், மேசன் சந்திப்புகள் மற்றும் INSEE கொங்கிறீற் சங்கத்துக்கான (ICS) பிரத்தியேக அங்கத்துவம் ஆகியவற்றினூடாக உள்நாட்டு மேசன் துறையில் அதிகளவு கௌரவிப்பு ஏற்படுத்தப்பட்டு, வருமானமீட்டக்கூடிய புதிய வழிகள் மற்றும் தொழில் முயற்சியாண்மைகள் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட காலமாக திகழும் ICS-அங்கத்தவ மேசன்மார்கள் உள்நாட்டு நிர்மாணத்துறைக்கு ‘INSEE Garu Sara’ ஊடாக வழங்கும் பங்களிப்புக்கு வெகுமதிகள் கிடைத்துள்ளது.
மேசன்மாருக்கு உறுதியான நிதி எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக INSEE சீமெந்து பரிபூரண ஆயுள் காப்புறுதி திட்டமொன்றையும் அங்கவீனம், மருத்துவ மற்றும் விபத்து காப்பீடுகளை உள்வாங்கி அறிமுகம் செய்துள்ளது. இலங்கை ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையுடன் (ETFB) இணைந்து மேசன்மாருக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு மேலதிகமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
கண்டியைச் சேர்ந்த இரு தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட மேசனான ரத்ன ரவீந்திர கருத்துத் தெரிவிக்கையில், “ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக நான் INSEE திட்டத்தில் இணைந்து கொண்டேன். நான் எதிர்பாராத வகையில் பல அனுகூலங்களைப் பெற்றுக் கொண்டுள்ளேன். துறை, இலங்கை கட்டளைகள் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு தேவைப்பாடுகள் தொடர்பாக நான் பெற்றுக் கொண்ட அறிவினூடாக, என்னால் நிபுணத்துவமாக இயங்க முடிகின்றது. இதனால் எனது வாடிக்கையாளர்களும் எனக்கு அதிகளவு மதிப்பளிக்கின்றனர்.” என்றார்.
“அறிவு மாத்திரமல்ல, லோயல்டி இலக்குகளை எய்துகின்றமைக்காக எமக்கு வெகுமதிகளும் வழங்கப்பட்டன. INSEE சீமெந்தின் வெகுமதித் திட்டத்தினூடாக என்னால் கொங்கிறீற் மிக்சர் ஒன்றை என்னால் வெற்றியீட்ட முடிந்தது. இதனூடாக எனது பணிக் கொள்ளளவையும், வருமானத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. துறை தொடர்பில் நான் பெற்றுக் கொண்ட அறிவைக் கொண்டு நான் தற்போது மிகவும் உறுதியுடன் பணியாற்றுகின்றேன். அத்துடன், 500,000 ரூபாய் பெறுமதியான ஆயுள் காப்புறுதியும் எனக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. எம்மைப் பற்றி அதிகளவு சிந்தித்து INSEE Sathkara திட்டத்தை INSEE சீமெந்து முன்னெடுக்கின்றது. இந்தத் திட்டத்துடன் இணைந்து கொள்வதனூடாக, என்னைப் போன்று ஒவ்வொரு மேசன்மாரும் பெருமளவு பயன்பெறுவார்கள் என்பதை என்னால் உறுதியளிக்க முடியும்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago