Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மீதான வருடாந்த மாற்றத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அளவீட்டின் பிரகாரம், 2021 நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் (நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி) 9.9 ஆக அதிகரித்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவாகியிருந்த உயர்ந்த பணவீக்கத்தைத் தொடர்ந்து, கடந்த 12 வருட காலப்பகுதியில் பதிவாகியிருந்த மிகவும் உயர்ந்த பணவீக்கமாக 2021 நவம்பர் மாத பெறுமதி அமைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஒக்டோபர் மாதத்தில் இந்தப் பெறுமதி 7.6 சதவீதமாக காணப்பட்டது.
உணவு மற்றும் உணவு சாரா பண்டப் பிரிவுகளின் மாதாந்த விலை அதிகரிப்பின் அடிப்படையில் பண வீக்கம் மாறுபடுகின்றது.
அதன் பிரகாரம், உணவுப் பொருட்கள் சார்ந்த பண வீக்கம் என்பது 2021 நவம்பர் மாதத்தில் 17.5 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், 2021 ஒக்டோபர் மாதத்தில் 12.8 சதவீதமாக அதிகரி்த்திருந்தது. உணவுப் பொருட்கள் சாராத பண வீக்கம் 2021 நவம்பர் மாதத்தில் 6.4 சதவீதமாகவும், 2021 ஒக்டோபர் மாதத்தில் 5.4 சதவீதமாகவும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பணவீக்க நிலைமை தொடர்பில் பொது மக்கள் எளிமையாக புரிந்து கொள்வதற்கு சாராம்சப்படுத்தப்படுமானால், 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நபர் ஒருவர் 100,000 ரூபாயை வருமானமாகப் பெற்றிருந்து, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் அந்தப் பெறுமதி மாறாமல் காணப்படுமாயின், இலங்கை மத்திய வங்கியினால் அந்நபருக்கு 10,000 ரூபாய சம்பளக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த பண வீக்கத்தினூடாக உணர்ந்து கொள்ள முடியும் என துறைசார் நிபுணர் ஒருவர் விளக்கமளித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago