2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

திருத்துவ கல்லூரி ரக்பி அணியின் தொலைத்தொடர்பாடல் பங்காளராக SLT-MOBITEL

Freelancer   / 2024 ஜூன் 28 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, கண்டி திருத்துவ கல்லூரி அணியின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் பங்காளராக 2024 ஆம் ஆண்டு ரக்பி பருவகாலத்துக்காக கைகோர்த்துள்ளது. தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக இவ்வாறு கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் திறமைசாலிகள், விளையாட்டை ஊக்குவிப்பது மற்றும் தனிநபர்களுக்கு தமது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்த வாய்ப்பளிப்பது போன்றவற்றுக்கு தொழினுட்பத்தின் மாற்றியமைப்பு சக்தியினூடாக வலுவூட்டும் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2024 பாடசாலை ரக்பி பருவம் என்பது விறுவிறுப்பானதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருத்துவ கல்லூரி அணி தமது திறமைகளையும், சிறந்த போட்டித்திறனையும் களத்தில் வெளிப்படுத்துவார்கள் என கருதப்படுகின்றது. இந்த கைகோர்ப்பின் அங்கமாக, விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரக்பி அனுபவத்தை மேம்படுத்துவதற்கான நவீன தொழினுட்ப மற்றும் இணைப்புத்திறன் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க SLT-MOBITEL முன்வந்துள்ளது. ஒப்பற்ற live streaming முதல் ரசிகர் ஈடுபாடு வரை, SLT-MOBITEL இனால் நாடு முழுவதிலும் ரக்பி ஆர்வலர்கள் மத்தியில் இந்த போட்டித் தொடரை நெருக்கமடையச் செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இளம் திறமைசாலிகளை ஊக்குவித்தல், ஒழுக்கப்பண்புகளை கட்டியெழுப்பல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளை ஊக்குவித்தல் போன்றவற்றில் பாடசாலை விளையாட்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பதில் SLT-MOBITEL நம்பிக்கை கொண்டுள்ளது. தேசத்தின் இளைஞர்களுக்கு வலுவூட்டி, சிறப்பான கலாசாரத்தை தோற்றுவிப்பது என்பதில் SLT-MOBITEL எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளது. தொலைத்தொடர்பாடல்கள் என்பதற்கு அப்பால் சென்றதாக இந்த உறுதிமொழி அமைந்திருப்பதுடன், நாடு முழுவதிலும் பாடசாலை விளையாட்டை ஊக்குவித்து ஆதரவளிப்பதில் நிறுவனம் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X