Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
S.Sekar / 2023 ஜனவரி 16 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாமரை கோபுரத்தின் முதல் தளத்தில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அண்மையில் திறந்திருந்த அதிநவீன, புத்தாக்கங்களை மையமாகக் கொண்ட - Dialog Future Zone இல் (டயலொக் எதிர்கால வலயம்) காணப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை அனுபவிப்பதற்கு அனைத்து இலங்கையர்களுக்கும் டயலொக் அழைப்பு விடுத்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த Dialog Future Zone திறந்திருக்கும்.
Dialog Future Zone பார்வையாளர்களுக்கு 5G, இன்டர்நெட் ஒஃப் திங்ஸ் (IoT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மற்றும் வேர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality - VR) போன்ற நவீன வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. டயலொக்கின் தற்போதைய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் ஆகியனவற்றை உள்ளடக்கூடிய ஸ்மார்ட் நகரங்களின் வளர்ச்சி மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகளை செயல்படுத்துதல் போன்ற முன்முயற்சிகள் பற்றியும் பார்வையாளர்கள் இங்கு அறிந்து கொள்ள முடியும்.
"Dialog Future Zone ஐ பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் பற்றிய ஒரு பார்வையும் அவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்" என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "டயலொக்கில் சாத்தியமானவற்றின் எல்லைகளை நோக்கியவாறு தொடர்ந்தும் நாம் முன்நோக்கி கொண்டு செல்கின்றோம், மேலும் Dialog Future Zone என்பது புதுமை மற்றும் முன்னேற்றத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். இந்தக் கண்காட்சி அதை பார்வையிடும் அனைவருக்கும் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் கற்றலை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பிற பங்காளர்களுடன் இணைந்து பயிலரங்குகள், விரிவுரைகள் மற்றும் கல்விச் செயல்பாடுகளையும் இந்த Dialog Future Zone வழங்கும். இது மாணவர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் ஏற்றது. இதன் நடவடிக்கைகள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் தகைமைகள் மற்றும் புத்தாக்குனர்களை ஊக்குவிக்கும் நோக்கிலானதாக அமைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"Future Zone பொதுமக்களுக்கு உத்வேகம் மற்றும் கல்விக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், தொழில் வல்லுநர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான தளமாகவும் இருக்கும் எனவும் நாங்கள் நம்புகின்றோம்," என வீரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.
Dialog Future Zone, பிந்திய ஸ்மார்ட் ஹோம் மற்றும் இன்டர்நெட் ஒஃப் திங்ஸ் (IoT) தீர்வுகள், முன்னணி பல்கலைக்கழகங்களின் டயலொக் '5G Innovation Centre' சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நிறுவனத்தின் புத்தாக்கப் பிரிவான 'Innovation Foundry' ஆகியவற்றினால் இயக்கப்படும் புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago