2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சேதன உரத்துக்காக பவர் ஆய்வுகூட சேவைகளுக்கு ISO தரச் சான்று

S.Sekar   / 2023 மே 12 , மு.ப. 05:43 - 0     - 107

இலங்கையில் விவசாயத்துறையில் ஈடுபாட்டைக் கொண்டுள்ள, பவர் நிறுவனத்தின் ஆய்வுகூட சேவைகளுக்கு, சேதன உரங்களுக்கான சர்வதேச தரச் சான்று வழங்கப்பட்டிருந்தது.

தொழிற்துறையின் முன்னோடிகள் எனும் வகையில், சேதன நாட்டில் உரப் பரிசோதனையை முன்னெடுக்கின்றமைக்காக ISO/IEC 17025 தரச் சான்றைப் பெற்றுள்ளது. முகாமைத்துவ கட்டமைப்பு, தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் ஆய்வுகூட பரிசோதனை செயன்முறைகளின் செல்லுபடிக் காலம் போன்ற அனைத்தையும் தேவைப்பாடுகளுக்கமைய முன்னெடுக்கின்றமைக்காக கடந்த மாதத்தின் முற்பகுதியில் இந்த தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயத்துறையின் பல்வேறு பங்காளர்களுடன் கைகோர்த்து, நிலைபேறான வளர்ச்சிக்குரிய சிறப்பு மத்திய நிலையமாக தம்மை நிலைநிறுத்தும் நிறுவனத்தின் பயணத்தில், முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக இது அமைந்துள்ளது. இதனூடாக பவர் நிறுவனத்துக்கு நிலைபேறான பண்ணைச் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், விளைச்சல்களை அதிகரிக்கச் செய்யவும் வளர்ச்சியையும், சமூகத்தாருக்கு ஆரோக்கியமான உணவை உறுதி செய்யவும் முடியும். அத்துடன், விவசாயிகளுக்கும், பரந்தளவு சமூகத்தாருக்கும் சூழல்சார் இடர்களை தணித்துக் கொள்வதிலும் பங்களிப்பு வழங்கும்.

நிலைமாற்றச் செயற்பாட்டில் பவர் முன்னிலையில் திகழ்வதுடன், அதற்காக சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற நிபுணர்களுடன் இணைந்து சேதன விவசாயம் தொடர்பான பல்வேறு அறிவுப் பகிர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையின் பல்வேறு பங்காளர்களுடனும் இணைந்து செயலாற்றுவதுடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியான நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்கின்றது.

மேலும் பல நிறுவனங்களுக்கு பின்தொடரக்கூடிய வகையில் இந்த தரச் சான்று அமைந்துள்ளதுடன், சேதன உரங்களுக்கான தரப் பரிசோதனைக்குரிய நியமமாக அமைந்துள்ளது. சான்று பெற்ற ஆய்வுகூடம் எனும் வகையில், ISO ISO-17025-2017 என்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வுகூடங்களுக்கான பரிசோதனை நியமமாக அமைந்துள்ளது. சேதன உர பரிசோதனைகள் துல்லியமாக, நம்பத்தகுந்த வகையில், அதியுயர் நுணுக்கமான முறையில் தேசிய மற்றும் சர்வதேச நியமங்களுக்கமைய வாடிக்கையாளர்கள் மற்றும் ஒழுங்குபடுத்துநர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்கின்றது.

2015 ஆம் ஆண்டில் அசேதன உரங்களுக்கான பரிசோதனைகளை முன்னெடுக்கும் ஆய்வுகூடமாக பவர் ஆய்வுகூடம் முதலில் தரப்படுத்தப்பட்டிருந்தது. அன்று முதல், படிப்படியாக வளர்ச்சியடைந்து, உரத் தொழிற்துறையில் முன்னணி மற்றும் நவீன ஆய்வுகூட சேவைகள் வழங்குநராக மாற்றம் பெற்றுள்ளதுடன், நவீன ISO நியமங்களின் பிரகாரம் அமைந்த பல்வேறு உரப் பரிசோதனை முறைகளைக் கொண்டுள்ளது. 1997 முதல் இயங்கும் இந்த ஆய்வுகூடம், SLS, ISO நியமங்களை கடுமையாக பின்பற்றுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X