Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
S.Sekar / 2022 ஒக்டோபர் 24 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் ஹரசார ஊடாக, சிரேஷ்ட பிரஜைகளின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு, அதற்கு பொருத்தமான நிதித் தீர்வுகளுடன் பல சிறப்புரிமைகளும் வழங்கப்படுகின்றன. வழமையான மருத்துவ தேவைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதுடன், அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கியினால், ஹரசார டெபிட் அட்டைதாரர்களுக்கு மருத்துவ சேவைகள் மற்றும் தினசரி தேவைகள் பலவற்றுக்கு பரந்தளவு விலைக்கழிவுகளை வழங்க முன்வந்துள்ளது.
செலான் ஹரசார டெபிட் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெகுமதிகளில், சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய தேவையாக அமைந்துள்ள மருத்துவ தேவைகள் தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு, ஆசிரி வைத்தியசாலையுடன் செலான் வங்கி கைகோர்த்து, OPD ஆய்வுகூட சேவைகள், CT மற்றும் MRI ஸ்கான்கள், ECG, X-ray, மம்மோகிராம்கள் மற்றும் பல தெரிவு செய்யப்பட்ட சேவைகளுக்கு செலான் டெபிட் அட்டையினூடாக கொடுப்பனவை மேற்கொள்ளும் போது 20% வரை விலைக்கழிவையும், ஆசிரி ஆய்வுகூடங்களில் 10% வரை விலைக்கழிவையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்தச் சலுகை விஷன் கெயாரிலும் வழங்கப்படுவதுடன், ஹரசார அட்டைதாரர்களுக்கு செவிப்புலன் கருவிகளுக்கு 20% வரையிலும், மூக்குக் கண்ணாடி மற்றும் சன்கிளாஸ்களுக்கு 10% வரையிலும் விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், செலான் ஹரசார கணக்குதாரர்களுக்கு ஹோர்டன் பிளேஸ் மற்றும் கல்கிசையில் அமைந்துள்ள சித்தாலேப சிகிச்சை நிலையங்களில் எந்தவிதமான சிகிச்சைகளையும், சித்தாலேப ஆயுர்வேத வைத்தியசாலையில் OPD மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறும் போது 25% சேமிப்பைப் பெற முடியும். சித்தாலேப ஆயுர்வேத வைத்தியசாலையில் 2 இரவுகளுக்கு மேல் தங்கியிருந்து சிகிச்சைகளைப் பெறும் போது அறைக் கட்டணங்களுக்கும் இந்த விலைக்கழிவு வழங்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு தின கவர்ச்சிகரமான சேமிப்புகளும் வழங்கப்படுவதுடன், காகில்ஸ் புட்சிட்டியில் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு தினத்திலும், அதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்கையில் 10% விலைக்கழிவு வழங்கப்படுகின்றது. மேலும், விஜித யாபா புத்தகசாலைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தகங்களுக்காக 15% விலைக்கழிவு வழங்கப்படுகின்றது.
செலான் வங்கியின் கிளைகள், வலயம் 1 உதவி பொது முகாமையாளர் திமுத் சிகேர கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு நிதித் தீர்வுகளை வழங்குவது என்பதற்கு அப்பாற்பட்டதாக செலான் வங்கியின் பிரதான பெறுமதிகள் அடங்கியுள்ளன. எமது சிரேஷ்ட பிரஜைகள் எமக்கு மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் சமூகத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தற்போது தாம் ஆற்றிய பணிக்கான அனுகூலங்களை அனுபவிக்க வேண்டிய நிலையிலுள்ளனர். பொறுப்பு வாய்ந்த வங்கி எனும் வகையில், அவர்களின் மிகவும் அத்தியாவசியமான தேவைகளை இனங்காண்பதற்கு நாம் எப்போதும் முயற்சி செய்வதுடன், இயலுமானவரை சிறந்த முறையில் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம். எமது சமூகத்தில் மீண்டும் மீண்டும் எழும் மருத்துவத் தேவைகள் என்பது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ள நிலையில், தற்போதைய பொருளாதாரச் சூழலில், மருத்துவத்துடன் தொடர்புடைய செலவுகள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்தத் தேவைகளுக்கு நிவாரணத்தை வழங்குவதில் செலான் ஹரசார கவனம் செலுத்துவதுடன், ஏனைய அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றது. இதனூடாக எமது சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவிகளை வழங்க முடியும் என்பதிலும், அவர்களின் சுமைகளை ஓரளவு குறைப்பதற்கு பங்களிப்பு வழங்க முடியும் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
செலான் ஹரசார கணக்குதாரர்களுக்கு வழங்கப்படும் பிரதான அனுகூலங்களில், 5 மில்லியன் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவோருக்கான கடன் வசதி, தமது ஓய்வூதியக் கொடுப்பனவை ஹரசார கணக்குக்கு மாற்றி, தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அனுப்புவோருக்கு ரூ. 5000 வரையான ஒரு தடவை கட்டணப் பட்டியல் கொடுப்பனவு, பொது சத்திரசிகிச்சையின் போது ரூ. 200,000 வரை மீளளிப்பு வசதி மற்றும் விழிவெண்படல் சத்திரசிகிச்சைக்கு கண் வில்லைகள் மற்றும் சாதனங்களுக்கான செலவு போன்றன அடங்கியுள்ளன. ஓய்வூதிய அனுகூலங்களுக்கு மேலதிகமாக, 60 ஆவது பிறந்த தின வெகுமதி, e-கூற்றுகள் மற்றும் ஹரசார கணக்குதாரர்களுக்கு வழங்கப்படும் விசேட விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொள்ள பயன்படுத்தக்கூடிய அங்கத்துவ அட்டையாக பயன்படுத்தக்கூடிய பெயர் பொறிக்கப்பட்ட டெபிட் அட்டையை பெறும் தெரிவு போன்றனவும் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பல சேவைகள் மற்றும் திட்டங்களினூடாக, இலங்கையர்களுக்கு தமது வாழ்வின் எதிர்பார்ப்புகளை எய்துவதற்கான பங்களிப்பை செலான் வங்கி தொடர்ந்தும் வழங்குகின்றது. கணக்குதாரர்களுக்கு நிதி உறுதித் தன்மையை செலான் ஹரசார வழங்கி வலுவூட்டுவதுடன், தமது முதிர்ந்த வயதில் அனுபவிக்கக்கூடிய அனுகூலங்களையும் வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
55 minute ago
59 minute ago
2 hours ago