Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தொடர்ச்சியான மூன்றாவது வருடமாகவும் இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் சிறந்த வாடிக்கையாளர் சேவைச் சிறப்பு என்பதில் முதலாம் ஸ்தானத்தை உறுதி செய்துள்ளது.
ஆரம்பம் முதல், செலான் வங்கி தனது வியாபார மாதிரியில் முக்கிய மற்றும் மிகவும் பெறுமதி வாய்ந்த அங்கமாக வாடிக்கையாளர்களைக் கருதுகின்றது. கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதிக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், சேவை மேம்படுத்தல்கள் மற்றும் மெருகேற்றங்களினூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மீது செலான் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு மேலும் எடுத்துக்காட்டாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது.
செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக இலங்கையில் காணப்படும் சிறந்த வாடிக்கையாளர் சேவைச் சிறப்புக்கான முதல்தர வங்கி எனும் ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை எமக்கு மிகவும் பெருமையளிக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் வாடிக்கையாளர் சேவைச் சிறப்பு என்பது அத்தியாவசியமானதாக அமைந்திருப்பதுடன், எந்தவொரு நிறுவனத்தினதும் பிரதான குணவியல்பாக அமைந்துள்ளது. தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில், நடமாடுவதில் கட்டுப்பாடுகள் மற்றும் நேரடித் தொடர்புகளை பேணுவதில் கட்டுப்பாடுகள் போன்றன காணப்பட்ட நிலையில், சேவை மட்டங்களில் சிறப்பை உறுதி செய்வது என்பது மிகவும் சவால்கள் நிறைந்த காரியமாகும். எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வியாபாரச் செயற்பாடுகளை செலான் வங்கி முன்னெடுத்திருந்ததுடன், எமது வலையமைப்பைச் சேர்ந்த ஊழியர்களும் தமது வழமையான செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று, எமது சகல வாடிக்கையாளர்களினதும் தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியிருந்தனர்.” என்றார்.
செலான் வங்கியின் செயற்பாடுகளில் சேவைச் சிறப்பு என்பதற்கு ஆரம்பம் முதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் செயன்முறைகளில் வங்கி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவ முகாமைத்துவ அணியினால் உரிய காலப்பகுதியில் வாடிக்கையாளர் திருப்திகரம் தொடர்பான கருத்துக் கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு, சந்தையில் வங்கி தொடர்பில் நிலவும் கண்ணோட்டம் பற்றிய புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. வருடம் முழுவதிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுமாற்றாக இரகசியத்தன்மை வாய்ந்த வகையில் கருத்துக் கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு, சேவை வழங்கல்களின் வெற்றிகரமான நிலை தொடர்பில் அறிந்து கொள்கின்றது. வங்கிச் செயற்பாடுகளில் சேவைச் சிறப்பு என்பது ஒப்பற்ற வகையில் டிஜிட்டல் முறையிலும் நேரடியாகவும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் உதவியாக அமைந்துள்ளன.
வாடிக்கையாளர் சேவைச் சிறப்புகள் தரப்படுத்தல்கள் என்பது 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் LMD இனால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒன்லைன் கருத்துக் கணிப்பின் பிரகாரம் வழங்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர் தன்னிறைவு மற்றும் சேவைத் தரம் தொடர்பில் திருப்தி போன்ற பதினெட்டு பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த சேவை வர்த்தக நாமங்களுக்கு வாடிக்கையாளர்கள் வாக்களித்திருந்தனர். அதன் பிரகாரம், நாட்டிலுள்ள பத்தொன்பது அரச மற்றும் தனியார் துறை வங்கிகளிலிருந்து செலான் வங்கியை சிறந்த வாடிக்கையாளர் சிறப்புக்காக வாடிக்கையாளர்கள் வாக்களித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago