Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, அனைத்து இலங்கையர்களையும் கொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி முன்னெடுத்திருந்த #ResponsibleMe பிரச்சாரத் திட்டத்துக்கு பொது மக்கள் மத்தியிலிருந்து மாபெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரச்சாரத் திட்டம், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படும் பொருளாக அமைந்திருப்பதுடன், பொது அமர்வுகள் மற்றும் ஊடகங்களில் விடயத்துடன் தொடர்புடைய நிபுணர்களால் பேசப்படும் பொருளாகவும் அமைந்துள்ளது.
#ResponsibleMe திட்டம் தொடர்பாக செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “கொரோனாவைரஸ் புதிய திரிபின் தாக்கத்துக்கு எதிராக நாம் போராடி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டல்களை பொது இடங்களில் மக்கள் பின்பற்றாமை காரணமாக, நாட்டில் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. #ResponsibleMe எனும் பிரச்சாரத் திட்டத்தினூடாக, தொற்றுப் பரவலிலிருந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தனிநபர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுப் பரவலை தடுப்பதற்கு தனிநபர் ஒருவரின் கடமையின் முக்கியத்துவத்தை உணரச் செய்து, அந்த பொறுப்புமிக்க மனநிலையை ஏற்படுத்துவது என்பது கடினமான காரியமாக அமைந்திருந்தாலும், இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் அத்தியாவசியமாக உள்ளது. சமூக ஒழுக்கம், கரிசனை மற்றும் பிரத்தியேக பொறுப்புணர்வுக்கு நேர்த்தியான மனநிலை போன்றவற்றுடன் பொதுச் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது போன்றன காலத்தின் தேவையாக அமைந்துள்ளன. இந்த உறுதி மொழிக்கான எமது சிறு அர்ப்பணிப்புகள், நாட்டின் எதிர்காலத்தில் சக்தி வாய்ந்த நேர்த்தியான தாக்கங்களை ஏற்படுத்தும்.” என்றார்.
இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில், செலான் அணி அங்கத்தவர்கள் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து பொது மக்கள் மத்தியில் #ResponsibleMe தகவலை கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமது தனிப்பட்ட சமூக ஊடகப் பகுதிகளில் இந்த தகவலை பதிவிட்டு, சக குடிமக்களையும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தியிருந்தனர். கருத்துப் பகிர்வு முன்னோடிகளும் இந்தத் திட்டத்தில் கைகோர்த்ததுடன், சமூக வலைத்தளத்தில் அதிகளவு பேசப்படும் விடயமாக #ResponsibleMe அமைந்திருந்தது. தம்மையும், தமது அன்புக்குரியவர்கள் மற்றும் சமூகத்தையும் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இந்த தகவல் பகிர்வு அமைந்திருந்தது.
கைகளைக் கழுவுதல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் போன்றன தொற்றுப் பரவலை தடுப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்த போதிலும், இந்த விடயங்களை மேற்கொள்வதற்கு நபர் ஒருவரை பொறுப்புடன் திகழச் செய்வது என்பது நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. இதற்காக அன்புடன் அரவணைக்கும் வங்கி, மெய்நிகர் ஊடக சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காலிங்க டியுடர் சில்வா மற்றும் உளவியல் நிபுணர் வைத்தியர் நயனாநந்த குமாரநாயக்க ஆகியோர் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்நிலையில் காணக்கூடிய உளவியல் சுகாதார சவால்கள் பற்றியும் உரையாற்றியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago